Wednesday 14 December 2011

அமெரிக்க விமானத்தை திருப்பித் தர ஈரானிடம் அதிபர் ஒபாமா வேண்டுகோள்!

Obama appeals to Iran to give back downed US top-secret drone - World News Headlines in Tamil

அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த, ஆளில்லாத உளவு விமானம், ஈரான் நாட்டில் விழுந்தது. அதை, ஈரானியர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த விமானத்தை தங்களிடம் திருப்பித் தர வேண்டும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க நாட்டின், ராணுவத் துறையைச் சேர்ந்த, உளவு விமானம், ஆளில்லாமல் இயங்க வல்லது. இவ்வகை விமானமொன்று, ஈரான் நாட்டின் மீது பறந்து கொண்டிருந்த போது, ராணுவத்தினரால் தரையிறக்கப்பட்டது என்றும், ஈரான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர் என்றும், பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அதுகுறித்து, இரு நாடுகளும் எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தன.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹலாரி கிளின்டன், இது குறித்து கூறுகையில், "ஈரான் சிறை பிடித்துள்ள, அமெரிக்க விமானத்தை திருப்பித் தருமாறு பலமுறை, ஈரான் நாட்டிடம் கோரி உள்ளோம். ஈரான் நாட்டின் தற்போதைய நடத்தை, அனைவருக்கும் தெரியும். எனவே, அந்நாட்டிடம், நாங்கள் இதற்கு மேல் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ஈரான் பிரதமர் நூரி அல் மாலிகி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் இணைந்து நடத்திய நிருபர்கள் சந்திப்பில் பேசிய, அமெரிக்க அதிபர் ஒபாமா, "ஈரான் நாட்டில் உள்ள அமெரிக்க விமானத்தை, எங்களிடம் திருப்பித் தருமாறு கோரி உள்ளோம். அதற்கு, ஈரான் என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை எதிர்பார்த்துள்ளோம். விமானத்தை, ஈரான் சிறைபிடித்துள்ளதால், வருங்காலத்தில் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு பாதிப்பு வருமா என்பது குறித்தெல்லாம், விரிவாக பதில் அளிக்க முடியாது" என்றார். இச்சம்பவம் மூலம், அமெரிக்க நாட்டின் ஆளில்லா உளவு விமானத்தை, ஈரான் சிறை பிடித்துள்ளது என்பது, முதல் முறையாக வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.


பப்புவா நியூகினியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Major 7.1 quake strikes Papua New Guinea: USGS - World News Headlines in Tamil

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூகினியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.

இம்பால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு: 6 பேர் படுகாயம்


மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூர் தலைநகரம் இம்பாலில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு இன்று மதியம் 1.35 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்ததால் அங்கு பதற்றம் எழுந்துள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 30ம் தேதி இங்குள்ள மார்க்கெட் பகுதியில் குண்டு வெடித்தது. அந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி!

Rajini's birthday celebration in Valluvar Kottam: Rajini's absence upsets fans
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ரஜினி பிறந்த நாள் விழாவுக்கு எக்கச்சக்கமாக கூடினர் ரசிகர்கள். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் ரஜினி கடைசி வரை நிகழ்ச்சிக்கு வரவில்லை. நேற்று காலையிலிருந்தே வள்ளுவர் கோட்டம் பகுதி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கும் ரஜினி பேனர்கள். ஒரு முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கே உரிய அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து வாயில்களிலும் பலத்த காவல் போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் மற்றும் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் முதலில் கலை நிகழ்ச்சிகளும் பின்னர் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியும் நடந்தது. எஸ்பி முத்துராமன், கலைப்புலி தாணு, டிஜி தியாகராஜன் பங்கேற்று உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் எந்த நேரத்திலும் ரஜினி வருவார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். இரவு 8 மணிக்குள் நிகழ்ச்சி முடிக்கப்பட வேண்டும் என்று ரஜினியே தன் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் 9 மணியைத் தாண்டியும் நிகழ்ச்சி தொடர்ந்தது. கடைசி வரை ரஜினி வரவில்லை. போங்க சார்.. என்னயிருந்தாலும் நீங்க செஞ்சது தப்புதான்!

Tuesday 13 December 2011

உயிர் தப்பிய கார்த்தி, அனுஷ்கா ஜோடி


கார்த்தியும் அனுஷ்காவும் புதுப்படமொன்றில் ஜோடியாக நடிக்கின்ற படத்தை சுராஜ் இயக்குகிறார்.
இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு மாதமாக நடந்தது.
அங்கு பங்களா வீடு போன்ற அரங்கு அமைத்து காட்சிகளை எடுத்தனர். பின்னர் யானைகள் நடமாடும் ஆபத்தான பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்தது.
உள்ளூர் பகுதி மக்கள் அங்கு யானைகள் கூட்டம் கூட்டமாய் வரும் என்றும், எப்போதும் வரும் என்பதை சொல்ல முடியாது என்றும் எச்சரித்தனர். ஆனால் லொக்கேஷன் அற்புதமாக இருந்ததால் படப்பிடிப்பை நிறுத்த மனமின்றி கார்த்தி, அனுஷ்கா நடித்த சில காட்சிகளை எடுத்தனர்.
படப்பிடிப்பை முடித்து விட்டு இருவரும் புறப்பட்டுச் சென்றதும் திடீரென அந்த பகுதியில் யானைக்கூட்டம் வந்தன. கார்த்தியும் அனுஷ்காவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதுபற்றி கார்த்தி கூறும் போது, சாலக்குடி காட்டில் யானைகள் அடிக்கடி வந்து போகும் இடத்தில் படப்பிடிப்பு நடந்தது. படப்படிப்பு முடிந்து நாங்கள் புறப்பட்டு போனதும் அங்கு யானை கூட்டம் வந்து இருப்பதாக தகவல் சொன்னார்கள்.
அதிர்ஷ்டவசமாக தப்பினோம் ஏற்கனவே 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்புக்காக சாலக்குடி காட்டுக்கு போய் மிரண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மேசடி செய்த நபர் கைது


கனடாவில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் 18 லட்சம் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கண்டி பொலிஸ் விசேட குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
20 இளைஞர்களிடம் குறைந்தபட்சம் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் செய்த முறைப்பாட்டையடுத்தே இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும், குறித்த சந்தேக நபர் தேடப்பட்டு வந்த நிலையில், தலைமறைவாகியிருந்த இந்நபர் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட முற்றுகையின்போது, குறித்து இளைஞர்களின் 16 கடவுச்சீட்டுகளையும அச்சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பிரான்ஸில் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையில் உள்ள குடும்பத்தினரை பிரான்ஸுக்கு அழைக்க வாய்ப்பு


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்ஸ் நாட்டில் சட்டபூர்வமான பிரஜைகளாக இருந்தால் அவர்கள் இலங்கையில் உள்ள தமது குடும்ப அங்கத்தவர்களையும் தங்களுடன் பிரான்ஸுக்கு அழைக்க விரும்பினால் அந்தக் கோரிக்கை பற்றிச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும்.  என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் யாழ். மாவட்ட அரச அதிபருடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.


பிரான்ஸ் தூதுவருக்கும் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

பிரான்ஸ் தூதுவர் குடாநாட்டின் சகல விடயங்கள் தொடர்பாக அறிவதிலும் முழுமையாக கவனம் செலுத்தினார். இங்கு நேரடியாக இடங்களைப் பார்வையிட்ட அவர் அரசின் அபிவிருத்திப் பணிகள் இடம் பெற்ற போதும் தனியார் கட்டமைப்புகள் ஊடான அபிவிருத்திகள் இடம் பெறவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் தொடர்பாக மக்களிடமிருந்து ஏதாவது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளனவா என்றும் அவர் என்னிடம் கேள்விகளை எழுப்பினார்.

அத்துடன் பிரான்ஸில் சட்டரீதியான பிரஜையாக உள்ள இலங்கையர்கள் இங்கு தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ விரும்பினால் விண்ணப்பிக்கலாம். அதனைத் தமது தூதரகம் சாதகமாகப் பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார் என்றார் அரச அதிபர்.