| சினேகா அறிமுகப்படுத்திய அழகு சாதனம் |
|
மலேசியாவில் புகழ்பெற்ற பிராண்டான நிஷாவின் மூலிகை அழகு சாதனப் பொருள்கள் முதல் முறையாக சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. |
புன்னகை இளவரசி நடிகை சினேகா இந்த அழகு சாதனப் பொருள்களை அறிமுகம் செய்து வைத்தார்.

மலேஷியாவின் நாஸியா நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்ட் நிஷா. மலேஷியாவில் பல ஆண்டுகளாகப் பிரபலமானதும் அதிகம் விற்பனையாவதும் நிஷாவின் அழகு சாதனப் பொருள்களே. எந்தவித ரசாயனக் கலப்புமின்றி, முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரான அழகு சாதனப் பொருள்கள் இவை. நிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில முதல்முறையாக அறிமுகப்படுத்தும் விழா மே 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சவேரா ஓட்டலில் நடந்தது.
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் புன்னகை இளவரசி சினேகா பங்கேற்று நிஷா அழகு சாதனப் பொருள்களை அறிமுகப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் வேங்கடபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவில் சினேகா பேசுகையில், "இன்றைக்கு ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காக பலவித அழகுக் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். என் அம்மா கூட அழகு கிரீம் விளம்பரங்களைப் பார்க்கும் போதெல்லாம், இவற்றைப் பயன்படுத்தினால் நானும் இந்த விளம்பரத்தில் வரும் பெண்களைப் போல அழகாகிவிடுவேனா என்று கேட்பார்.
டோனர், மாய்ஸரைசர், சன் பிளாக் என தனித்தனியாகத்தான் பொதுவாக வாங்க வேண்டியுள்ளது. ஆனால் நிஷா இவை அனைத்தையும் ஒரே பேக்காக தருகிறார்கள். நான் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஷாவைப் பார்த்து வியந்தேன். அவர் வயது என்னவென்று நான் கேட்கவில்லை. காரணம் அப்படிக் கேட்பது நாகரீகமில்லை. ஆனால் அவரைப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு அம்மா மாதிரியே தெரியவில்லை. அந்த அளவு இளமை. இந்த அழகு சாதனப் பொருள்களை அவரது குடும்பத்தினர் அனைவருமே பயன்படுத்துவதாகக் கூறினார். முழுக்க முழுக்க மூலிகைகளால் ஆன இயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. அதை பல ஆண்டுகளாக மலேசியாவில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது நிஷா. நிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நல்ல பொருளை அறிமுகம் செய்த திருப்தி இருக்கிறது என்றார். |
|
|
|
|
அசினை விட நயன்தாரா பெஸ்ட்: கரீனா |
|
| நயன்தாரா, திலீப் ஜோடியாக நடித்த 'பாடிகார்ட்' மலையாள படம் வெற்றிகரமாக ஓடியது. |
அந்த படத்தை 'காவலன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார் இயக்குநர் சித்திக். தற்போது இப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. விஜய், திலீப் நடித்த பாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார்.
கதாநாயகியாக கரீனாகபூரை தேர்வு செய்துள்ளனர். அவரிடம் 'காவலன்', 'பாடிகார்ட்' பட டி.வி.டி.யை கொடுத்து நயன்தாரா, அசின் நடிப்புகளை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
இரு படங்களையும் பார்த்த கரீனாகபூருக்கு 'பாடிகார்ட்' படத்தில் நயன்தாரா நடிப்பு பிடித்து போனதாம். நயன்தாராவின் நடிப்புதான் எளிமையாகவும் இயல்பாகவும் இருந்ததாகவும், அசின் அந்த அளவுக்கு தன்னைக் கவரவில்லை என்றும் கரீனா கூறிவிட்டாராம்!
இதுபற்றி இயக்குநர் சித்திக்கிடம் அவர் கூறியது:- அசினை விட நயன்தாராவே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
ஓவர் நடிப்பு இல்லாமல் யதார்த்த உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார். அவர் உடுத்தியிருந்த ஆடைகளும் அம்சமாக இருந்தது. நயன்தாராவை போல் நடிக்கணும் என்று முடிவு செய்துள்ளேன் என்றார்.
| அஜித்தின் முத்தத்திற்கு காத்திருந்த த்ரிஷா |
|
முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்திருக்கிறார் அஜீத். |
அப்படியிருந்தும் மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில் த்ரிஷாவுக்கு உதட்டு முத்தம் கொடுக்க சொல்லி வற்புறுத்தினாராம் வெங்கட்பிரபு.

த்ரிஷாவும் ஆசையாக காத்திருந்தாராம். ஆனால் நான் அப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டாராம் அஜீத். அப்புறம் வேறு வழியில்லாமல் அதை நவீன முறையில் எடுத்தார்களாம்.
இதற்கிடையில் இன்னொரு செய்தி மங்காத்தா பற்றி. இந்த படத்தின் கடைசி பகுதி ஊதியம் தேர்தல் முடிவுக்கு பிறகு தரப்படும் என்று கூறியிருந்தார்களாம். ஆனால் முடிவு வேறு மாதிரி ஆனதால் குழம்பி போயிருக்கிறார்களாம் அத்தனை பேரும்.
| ராணா ரஜினிக்கு ராசி இல்லை: கைவிடப்படுமா |
|
போகிற போக்கை பார்த்தால் ராணா படம் கைவிடப்படும் என்றே தெரிகிறது. |
ரஜினி உடல் நலம் தேறி வந்தாலும் ஆறு மாதங்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும். படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறார்களாம் மருத்துவர்கள்.

அதுமட்டுமல்ல, எப்போதும் ராசி பார்க்கிற விடயத்தில் ரஜினியை போல இன்னொருவரை பார்க்க முடியாது என்கிறார்கள் திரையுலகத்தில். ராணா துவங்கிய முதல் நாளே தன்னை மருத்துவமனைக்கு அனுப்பிய ராசியை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது என்று கணிக்கிறார்கள். எனவே இந்த படம் தொடர்ந்தாலும் அதில் ரஜினி நடிக்க மாட்டார்.
மாறாக இவரது கிராபிக்ஸ் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு சரத்குமார் போன்ற சில ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை முடிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
| ஹாலிவுட் படத்தில் கவர்ச்சி காட்டும் கொலிவுட் அழகி |
|
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து "நியுட்டனின் மூன்றாம் விதி" படத்தில் நாயகியாக நடித்தவர் தான் சாயாலி பகத். |
கொலிவுட்டில் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் போகவும், பாலிவுட் நாயகர்களுடன் இணைய துடித்தார்.

ஹாலிவுட் படத்திற்காக பணியாற்றும் ஏஜெண்ட்களின் பார்வையில் சாயாலி சிக்கினாராம். மெல்லிய உடை அணிந்து, மொடலிங் இளசுகளுடன் அங்க பரிமாணங்களை காட்டி, பூனை நடை போட்ட சாயாலிக்கு ஹாலிவுட்டின் கடைக்கண் பார்வை கிட்டியுள்ளது.
இப்போது உலக சினிமா ரசிகர்களின் பார்வை படர்ந்து, அப்படியே அழுந்தி கிடக்கிற அளவுக்கு மேனி அழகை மாற்றிக் கொண்டாராம். தலை முடி அழகையும் மாற்றி, மேற்க்கத்திய மங்கை மாதிரி தோற்றத்திற்கு மாறியுள்ளாராம். கனடா நாட்டு "ஹிப் ஹாப்" பாடகர் ஷிவெலி உடன் இணையப்போகிறாராம் சாயாலி.
|
|
|
|
விஜய் படத்தில் ஹாலிவுட் ஆக்ஸன்: ஜாக்கி சான் ஐடியா |
|
இளைய தளபதியார் விஜய் அதிரடி நடிப்பில் 'வேலாயுதம்' படத்தை தயாரித்து வருகிறார் 'ஆஸ்கார்' ரவிசந்திரன். |
இந்த படத்தில் வரும் மிரட்டலான சண்டைக்காட்சியை படமாக்க தயாரிப்பாளர் ரவிசந்திரன், உலக அளவில் சண்டைக்காட்சிகளை எடுத்து பரபரப்பாக பேசப்பட்ட ஹாலிவுட் கலைஞர்களை தொடர்பு கொண்டுள்ளார்.
ஹாலிவுட்டில் ஏலியன்ஸ், ஸ்னாட்ச், டால்மேசன்ஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சியாளர் டாம் டெல்மரிடம், வேலாயுதம் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சியை இயக்கி தர கேட்டுள்ளாராம்.
விசாகபட்டினத்தில், ரயில் மேல் நடக்கும் பவர் புல்லான ஆக்ஸன் சீனை டாம் 'வேலாயுதம்' படத்திற்காக த்ரில்லாக எடுக்க போகிறார். வேலாயுதம் படத்தில் டைட்டில் நாயகனான விஜய் மிரட்டும் ஆக்ஸன் அதிரடியை அமைக்க ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு அவருடைய நண்பர் ஜாக்கி சான் கொடுத்த ஐடியாதான் இது.
இந்த சண்டைக்காட்சியை படமாக்க விசாகப்பட்டினத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் 'ப்ரீ-புரடக்சன்' வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்கள். இந்தியில் அபிஷேக் பச்சான் நடிப்பில் வெளியான 'துரோணா' படத்துக்கு டாம் தான் சண்டைகாட்சிகளை அமைத்தாராம்.
'வேலாயுதம்' விஜய்-'ரத்த சரித்திரம்' படத்தில் நடித்த அபிமன்யுடன் முட்டி மோதுகிற காட்சியை பரபரப்பாக படமாக்க உள்ளார்கள். |
குத்தாட்ட நடிகை காதலில் கவிழ்ந்தாரா |
|
டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கிய 'சரோஜா' படத்தில் 'மிக சிறிய' ரோலில் வந்து குத்தாட்டம் போட்ட நிகிதா முரண' படத்தில் நடித்துள்ளார். |
சமீபத்தில் காதல் வதந்தியில் சிக்கி நொந்து நூடுல்ஸ் ஆனாராம். 'நான் ஒன்பது வருசமாக சினிமாவில் இருக்கிறேன்.
தென்னிந்திய சினிமா உலகில் எனக்கென தனி பேர் உள்ளது. இன்றைக்கும் படங்களில் பிஸியாக நடிக்கிறேன்.
காதலில் கவிழ நேரம் இல்லை.காதலை விட எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிக்கிறேன். எனக்கான நபரை தேடி நான் அலையவும் இல்லை. இன்னும் சில மாதங்கள் கழித்து முக்கிய முடிவுகளை எடுக்க போகிறேன்.
இந்நிலையில், என்னை ஒரு நடிகரோடு இணைத்து வதந்தியை கிளப்பியிருக்கிறார்கள். நான் மட்டுமல்ல இதனால் என் குடும்பமே வருந்தியது. இதை யார் பரப்பிவிட்டிருப்பார்கள் என எனக்கு தெரியவில்லை என்று நிகி கலங்கினாராம். |
பிரபு தேவா படத்தில் பாலிவுட் அழகியின் டான்ஸ் |
|
அஜித் நடிக்கும் 'மங்காத்தா' படத்தில் ஐயிட்டம் ஸாங் அழகியாக ஹைனாட் அரோரா ஆட்டம் போட்டுள்ளார். |
இந்த வரிசையில், எம்.டிவியில் 'விஜே'வாக இளசுகளை 'ஜொள்' விட வைத்த பாலிவுட் அழகி சோபி சௌத்ரி, லேட்டஸ்ட் ஆட்டம் போட கோலிவுட் வருகிறார்.
டைரக்டர் பிரபு தேவா இயக்கத்தில் உருவாகும் ரீமேக் படத்தில் விஷால், சமீரா ரெட்டியுடன் இணைந்து நடிக்கிறார்.
இந்த படத்திற்காக பாலிவுட் அழகியின் கிளுகிளு கவர்ச்சியில் 'ஐட்டம் ஸாங்' எடுக்க பிரபு தேவா திட்டமிட்டுள்ளார்.
இதற்காக விஜய் ஆண்டனி இசையமைத்த 'ஹிப்-ஹாப்' பாடலுக்கு சோபியை ஆடவிட்டு கலர்புல்லாக படமாக்குகிறார்கள். கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் ,டைரக்டர்களின் படங்களில் தனக்கு பிடித்தமான ரோல்களில் நடிக்க சோபி விரும்புகிறார்.
விஷால்-பிரபு தேவா காம்பினேசன்,தனக்கு உறுதியான வெற்றியை தேடித்தரும் என நம்புகிறார். நவீன இசை மேல் உள்ள தீராத மோகத்தை 'மியூசிக் ஆல்பமாக' வெளியிட்டுள்ளார் சோபி.
பலவித இசைகளில் உணர்வுபூர்வமாக முழ்கி பரவசத்தை அனுபவிக்க துடிக்கிறார். |
மீண்டும் பிரம்மாண்டமாக எந்திரன் கூட்டணி |
|
'எந்திரன்' இரண்டாம் பாகத்துக்காக ஷங்கர்-ரஜினி மீண்டும் இணைகிறார்கள். |
'எந்திரன்' இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் தயாரிப்பது என்ற முடிவுக்கு சன் பிக்சர்ஸ் வந்திருப்பதாக அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி, சக்ஷேனா விளக்கம் அளித்துள்ளார்.
'ஆடுகளம்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஜெயம் ரவி நடித்திருக்கும் 'எங்கேயும் காதல்' படத்தையும் பார்த்தேன். அந்தப் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
இதற்கிடையில் சன் பிக்ஸர் அடுத்து தயாரிக்க இருக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படம் எது என்று கேட்கிறார்கள். 'எந்திரனுக்கு' பிறகு சன் பிக்சர்ஸின் நேரடித் தயாரிப்பு 'எந்திரன்' பாகம் இரண்டாகத்தான் இருக்கும்.
இதைப்பற்றி ரஜினியிடம் பேசிவிட்டோம். ஷங்கரும் கதையுடன் ரெடியாக இருக்கிறார். கண்டிப்பாக 'எந்திரன்' படத்தின் பட்ஜெட்டை 'எந்திரன்' பாகம் இரண்டு தாண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு பிரம்மாண்டமான படத்துக்கான முன்தயாரிப்பு பணிகள் முடிந்த பிறகே முறையான அறிவிப்பை வெளியிட முடியும், என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
இந்தபடம் 'ராணா'வுக்குப் பிறகு தொடங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். |
வித்தியாசமான மூன்று வேடங்களில் அஜித் |
|
'வரலாறு' படத்தில் வயதான கெட்டப்பில் கலக்கியதைப் போல 'மங்காத்தா' படத்திலும் ஒரு வயதான பாத்திரத்தில் வருகிறாராம் அஜித். |
'வரலாறு' படத்தில் அஜித் வித்தியாசமான மூன்று பாத்திரங்களில் அசத்தியிருந்தார்.
அதில் வயதான கெட்டப்பும் ஒன்று. அதேபோன்ற பாத்திரத்தில் 'மங்காத்தா'விலும் சில காட்சிகளில் வருகிறாராம் அஜித்.
இந்த பாத்திரமும் வரலாறு போல வெகுவாக பேசப்படுமாம். 'மங்காத்தா' படத்தில் அஜித் ஏற்றுள்ள வயதான பாத்திரம் குறித்த தகவல்களை படு ரகசியமாக வைத்துள்ளனராம். |
இரு பிரிவாக மோதிக்கொண்ட விஜயின் ரசிகர்கள் |
|
நடிகர் விஜய் கையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பச்சை குத்தப்பட்டுள்ளது போன்ற போஸ்டர்களை ஒட்டப்பட்டது. |
இதனை கண்ட அவரது ரசிகர்கள் இரு பிரிவாக நின்று மோதிக்கொண்டனர். நடிகர் விஜய் அதிமுகவுக்கு ஆதரவளித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் அவரது மக்கள் இயக்கத்தினர் அதிமுக கூட்டணியில் போட்டியிடப் போவதாகவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் கைகளில் அதிமுக சின்னம் பச்சை குத்தியிருப்பது போல் படம் வரைந்து நேற்று இரவு சேலம் நகரின் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.
அவரது ஒரு பிரிவு ரசிகர்கள். இதை இன்னொரு தரப்பு ரசிகர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர்கள் இன்று காலை வேறொரு போஸ்டரை அடித்து அதன் மேல் ஒட்டியுள்ளனர்.
இதனால் இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒவ்வொரு தரப்பும் தாங்கள்தான் உண்மையான விஜய் ரசிகர்கள் என்றும், ஒரு தரப்பு மற்ற தரப்பின் செயலை கண்டித்தும் கோஷம் போட்டனர். தேர்தல் நேரம் என்பதால், ரசிகர்களின் இந்தச் செயலால் சேலம் நகரில் இன்று பரபரப்பு நிலவியது. |
'சீக்ரெட்டை' காப்பாற்றிய விக்ரம் |
|
மதராசப்பட்டினம் படத்துக்கு பிறகு டைரக்டர் விஜய் இயக்கும் லேட்டஸ்ட் படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். |
இந்த ரோலின் 'சீக்ரெட்டை' காப்பாற்ற, விக்ரமை வெளிவட்டார விசேஷங்களில் அவ்வளவாக கலந்து கொள்ளக்கூடாது என்று கண்டிஷன் போட்டார்களாம்.
அதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சில இடங்களுக்கு மட்டும் விக்ரம் போய் வந்தாராம்.
விக்ரம் தனது நீண்ட நாள் நண்பரான பாலிவுட் ஸ்டார் சல்மான் கானை சமீபத்தில் மும்பையில் சந்தித்து பேசியதாக தகவல் பரவி உள்ளது.
அனுஷ்கா, அமலா பால் ஆகியோருடன் நடித்த படம் முடிவடைந்ததும் டைரக்டர் சுசீந்திரன் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். |
| இலியானாவை கவர்ந்த 'நண்பன்' விஜய் |
|
இந்தி 'த்ரீ இடியட்சில்' கரீனா கபூர் நடித்த ஹீரோயின் ரோலில், தமிழில் ரீமேக்காக தயாராகும் 'நண்பன்' படத்தில் இலியானா, விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். |
கோலிவுட்டில் 'கேடி' படத்துக்கு பிறகு தெலுங்கு பக்கம் பிசியான இலியானாவுக்கு 'நண்பன்' படத்தின் மூலமாக டைரக்டர் ஷங்கர் 'ரீ-என்ட்ரி' கொடுத்துள்ளார்.
இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார் இலி.
'நண்பன் பட சூட்டிங் டெகராடுனில் நடந்தது. ஹீரோ விஜய்யுடன் இணைந்து நான் நடித்த முதல் காட்சியை என்னால் மறக்க முடியாது. விஜய்யோட சென்ஸ் ஆஃப் ஹியுமர் எனக்கு பிடிசிருந்தது.
அவர் இப்படி 'கலகலவென' ஜாலியாக பழகுவாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவரோட 'வொர்க்' பண்றது அட்டகாசமாக இருக்கு என்கிறார் 'நண்பன்' நாயகி இலியானா.
மைக்ரோ-பிளாக்கிங் சைட்டில் இலியானா, 'டெகராடுன் தட்பவெப்ப நிலை உடலுக்கு இதமாக உள்ளது' என்று கூறியுள்ளாராம். |
| அமைதியை தேடி ஆசிரமத்துக்கு போன கவர்ச்சி நாயகி |
|
ஹீரோ விசாலுடன் 'தீராத விளையாட்டுப்பிள்ளை' படத்தில் நடித்த கவர்ச்சி நாயகி தனுஸ்ரீ தத்தா, தெலுங்கிலும் நடித்துள்ளார். |
பாலிவுட்,கோலிவுட் படங்களில் நடிக்க நல்ல ரோல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார் தனு.
சோர்வு தட்டும்போதும், கலக்கமாக தவிக்கும்போது ஆன்மீக சாமியாரின் ஆசிரமத்தில் அமைதியை தேடி போவாராம்.
அமைதியை தேடி கோவை பக்கம் உள்ள 'ஈசா பவுண்டேசன்'னுக்கு தனு போனாராம். அங்கே ஜக்கியின் உரையால் உற்சாகமடைந்தாராம். |
நடுநிசி நாய்கள்-2: பயத்தில் சமந்தா |
|
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் டைரக்டர் கெளதம், சமந்தாவுக்கு 'மினி ரோல்' கொடுத்து நடிக்க வைத்தார். |
தனது 'நடுநிசி நாய்கள்' படத்திலும் 'கொஞ்ச நேரம்' வந்து போகிற ரோலில் சமந்தாவை நடிக்க வைத்துள்ளார்.
டைரக்டர் கெளதம் 'நடுநிசி நாய்கள்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாகவும்,அதில் சமந்தாவுக்கு முக்கிய ரோலை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள்.
நடுநிசி நாய்கள் படத்தின் நெகடிவ் ரிசல்ட், படம் ரிலீசான பிறகு கிளம்பிய 'பகீர்' விமர்சனங்களை நினைத்து பயந்து போன சமந்தாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பு டைரக்டர் கெளதம் பக்கமிருந்து வர நடுநடுங்கி போனாராம். |
விக்ரம் பார்ட்டியில் கோலிவுட் ஹீரோயின்ஸ் |
|
விக்ரம் சந்தோஷமான மூடிலிருந்தால், உடனே கோலிவுட் ஹீரோயின்களை கூப்பிட்டு 'பார்ட்டி' வைத்து அசத்திவிடுவாராம். |
மதராசப்பட்டினம் பட டைரக்டர் விஜய் இயக்கும் லேட்டஸ்ட் படத்தில் விக்ரம் வித்தியாசமான ரோலில் நடிக்கிறார்.
இந்த படம் 'தெய்வமகன்' என்ற டைட்டிலை விட்டு, 'பிதா' என்ற பெயரில் படமாக்கப்படுவதாக தகவல் கிளம்பியது.
தற்போது அந்த டைட்டிலும் இல்லை, புதிதாக 'புத்திரன்' என்றும் கூறுகிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் லேட்டஸ்ட் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நாயகிகள் அனுஷ்கா, அமலா பால் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பார்ட்டி கொடுத்து உற்சாகப்படுத்தினாராம் விக்ரம். |
கேத்ரினாவை மிஞ்சும் தீபிகா |
|
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூர் அணியின் விளம்பர தூதராக மைதானத்துக்கு வந்து வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் கேத்ரினா கைப். |
கடந்த ஆண்டும் போட்டிகளின் ஆரம்பத்தில் வந்தார். இடையில் காணாமல் போய்விட்டார். அவருக்கு பதில், பெங்களூர் அணி ஆடிய ஆட்டங்களின்போது தீபிகா படுகோனை மைதானத்தில் பார்க்க முடிந்தது.
இந்நிலையில், "இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டேன்" என தெரிவித்திருக்கிறார் கேத்ரினா. "தொடர்ந்து பட ஷூட்டிங் இருப்பதால் நேரம் இல்லை.
அதனால் பங்கேற்கவில்லை" என்றும் அவர் காரணம் சொல்கிறார். ஆனால், "உண்மையான காரணம் இது இல்லை" என்கிறது பாலிவுட் வட்டாரம்.
பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துடன் நெருங்கி பழகி வருகிறார் தீபிகா படுகோன். அதனால் கடந்த ஆண்டு பெங்களூர் அணி ஆடிய ஆட்டங்களுக்கு திடீர் விசிட் அடித்தார் தீபிகா.
அவரே அந்த அணியின் திடீர் விளம்பர தூதராகவும் மாறிவிட்டார். இது கேத்ரினாவுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் கடந்த ஆண்டே அவர் சில போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்தார்.
இம்முறையும் தீபிகாவுக்கே முக்கியத்துவம் தரப்படும் என்பதால் பெங்களூர் அணியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார் கேத்ரினா. |
கமல் மனைவியாக நடிக்கும் பாலிவுட் ஹீரோயின் சோனாக்சி |
|
உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் லேட்டஸ்ட் படத்தில் பாலிவுட் ஹீரோயின் சோனாக்சி சின்ஹா நடிக்க இருப்பதாக தகவல். |
இரு வேறு தோற்றங்களில் இதில் சோனாக்சி நடிக்கிறாராம். கமலின் மனதுக்கு பிடித்தமான மனைவியாக வருகிறார்.
இந்தியன், வெஸ்ட்ரன் கெட்டப்பில் சோனாக்சி கேரக்டர்களை வடிவமைத்துள்ளார்களாம். ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேசன் தான் இந்த புது படம் என்கிறார்கள்.
சிறந்த நடிகரான கமல் சாருடன் இணைந்து நடிப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இந்தியில் அவர் நடித்த சத்மா, ஏக் துஜே கேலியே, அப்பு ராஜா, சாச்சி 420 ஆகிய படங்களை பார்த்து வளர்ந்த நாட்களை நினைத்து பார்கிறேன்.
அவருடைய நடிப்பை கண்டு பிரமித்து போயிருக்கேன். தற்போது நான் நடிக்கும் இந்தி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் கமல் சாருடன் நடிப்பேன் என்கிறாராம் சோனாக்சி. |
என் இமேஜை கெடுக்கின்றனர்: சுனேனா |
|
'திருத்தணி' படத்தில் நடித்து வரும் சுனேனா கூறியது: தமிழில் ஹோம்லியான கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்கியுள்ளேன். |
எந்தப் படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை. அதற்காக கிளாமராக நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை.
கிளாமரும் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழில் நடிப்பதற்கு முன்பு ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருந்தேன்.
அதிலும் ஹோம்லியான கேரக்டர்தான். அந்தப் படத்தை சென்னையில் வெளியிட்டவர்கள், நான் கவர்ச்சி வேடத்தில் நடித்திருப்பதுபோன்ற படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதைக் கேள்விப்பட்டு வருந்தினேன். என் இமேஜை கெடுக்கும் முயற்சியாக இதை கருதுகிறேன்.
'திருத்தணி' படத்தில் முதன் முறையாக காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறேன். இதையடுத்து 'கதிர்வேல்' வெளிவர இருக்கிறது.
தமிழில் எனக்கு இருக்கும் நல்ல பெயரை கடைசி வரை காப்பாற்றுவேன். |
ரஜினியின் வில்லியாக ரேகா |
|
'ராணா' படம் துவங்குவதற்குள் அதில் நடிக்கும் ஹீரோயின்கள் பற்றி இன்னும் என்னன்ன செய்திகள் வரப் போகின்றனவோ. |
மாதுரி தீக்ஷித் தனது ட்விட்டர் இணைய தளத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிப்பதை விரும்புகிறேன். ஆனால் ரஜினியின் தங்கை வேடம் என்பதால் மறுத்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் முடிந்து, இப்போது ரேகா அத்தியாயம் ஆரம்பித்துள்ளது. ரஜினிக்கு எதிராக பெண்கள் வில்லியாக நடித்த படங்கள் ஓஹோவென்று ஓடியுள்ளன. எனவே இந்தப் படத்திலும் முக்கிய எதிரி வேடத்தில் ஒரு பெண்பாத்திரம்தான் வருகிறதாம்.
இந்த வேடத்தில் நடிக்கிறாராம் பிரபல இந்தி நடிகை ரேகா. ரஜினி கடைசியாக நடித்த நேரடி இந்திப் படமான 'புலந்தி' யில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதற்கு முன் 'பூல் பனே அங்காரே' படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்திருந்தார் ரேகா.
'ராணா' படம் தமிழிலும் இந்தியிலும் நேரடியாக, இருமொழிப் படமாக எடுக்கப்படுவதால், அதில் நடிக்கும் நாயகிகள் பாலிவுட் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்களாக இருப்பது நல்லது என்பதால்தான், தீபிகா, ரேகா என தேடிப் போய் ஒப்பந்தம் செய்கிறார்களாம்.
படத்தின் வில்லனும் இந்தி முகம்தான். பெயர் சோனு சூட். இவர் 'சந்திரமுகி'யில் ரஜினி கையால் 'அடிவாங்கிய' வில்லன்! என்னமோ. 'ராவணன்' மாதிரி, தமிழும் இல்லாமல் இந்தியும் இல்லாமல் இரண்டும்கெட்டான் படமாகாமலிருந்தால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடையமாட்டார்கள். |
ஒரே நாளில் வெளியாகாகும் தனுஷ்-சிம்புவின் படங்கள் |
|
அஜித் - விஜய் மாதிரி இப்போது தனுஷ் - சிம்பு என்ற ஒப்பீடு தொடர்கிறது. |
இருவரின் படங்களும் இணைந்து வெளியாகாவிட்டாலும், அந்த ஆண்டில் அதிக வெற்றிகளை தந்தது யார் என்ற பேச்சு கிளம்பிவிடுகிறது.
இந்த முறை இருவரது படங்களும் நேரடியாகவே மோதிக் கொள்கின்றன. அதுவும் ஒரே நாளில் இரு படங்களும் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் - ஹன்சிகா நடித்துள்ள 'மாப்பிள்ளை' படம் சன் டிவியின் வெளியீடு. வரும் ஏப்ரல் 8-ம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது.
சிம்பு, அனுஷ்கா நடித்துள்ள 'வானம்' திரைப்படத்தை 'விண்ணைத்தாண்டி வருவாயா'வைத் தயாரித்த கணேஷ் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தையும் ஏப்ரல் 8-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
உலகக் கோப்பை முடிந்த பிறகு வரும் முதல் வெள்ளிக்கிழமை என்பதாலும், இதற்குப் பிறகு தேர்தல் நெருங்குவதாலும், இந்தத் தேதியை விட்டால் நல்ல சமயம் கிடைக்காது என தயாரிப்பாளர்கள் கருதுவதால், இருவரின் படங்களையும் மோதவிடுகின்றனர்.
இந்த இரு படங்களை விட முக்கியமான ஒரு படம் இதே தேதியில் வருகிறது.
அது பாலா இயக்கத்தில் ஆர்யா - விஷால் நடித்துள்ள 'அவன் இவன்'. இதில் எந்தப் படம் வெல்லும் என்று இப்போதே பெட்டிங் ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கத்தில் |
அம்மாவை டிசைனராக்கிய இலியானா |
|
தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார் நடிகை இலியானா. |
அவர் தனது தாய்க்கு சினிமாவில் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். இலியானாவின் தாய்க்குலம் ஒரு காஸ்ட்யூம் டிசைனர்.
ஐதராபாத்தில் அவர் காஸ்ட்யூம் ஷோரூம் நடத்தி வருகிறார். இலியானாவின் தங்கையும் அந்த ஷோரூமை கவனித்துக்கொள்கிறார்.
தெலுங்கு திரையுலகில் இலியானாவின் புகழ் பறக்கத் தொடங்கிய நாள் முதல், இவர்களது ஷோரூமும் பிரபலமடைந்து வருகிறது. ஷோரூமை மேலும் பிரபலப்படுத்தும் நோக்குடன் இலியானா ஒரு திட்டத்தை வகுத்து, தனது அம்மாவிற்கு வாய்ப்பு கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
அதாவது அம்மணி நடிக்கும் படங்களில் காஸ்ட்யூம் டிசைனிங் பொறுப்பை தனது தாய்க்குலத்தின் நிறுவனத்திற்கு வழங்கும்படி நிபந்தனை விதித்து வருகிறாராம் இலியானா. அதேநேரம் இதனை மறுத்திருக்கும் இலியானா, நான் ஹீரோயினாக நடிக்கும் 'ஷக்தி' படத்திற்கு எனது அம்மாவை காஸ்ட்யூம் டிசைனராக நியமிக்குமாறு நிபந்தனை விதித்தாக செய்தி வெளியாகியுள்ளது.
இதில் துளியும் உண்மை இல்லை. என் அம்மாவின் திறமை 'ஷக்தி' படக்குழுவினருக்கு தெரியும். அதனால்தான் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் முதல்நாள் அம்மா வடிவமைத்த உடையை அணிந்து கொண்டுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன்.
பலரும் டிரஸ் சூப்பர் என்று பாராட்டியதோடு, அம்மாவை டிசைனராக்கியிருக்கிறார்கள். படத்தில் அவர் எனக்கு மட்டும்தான் டிசைனர். அதில் தவறு ஒன்றும் இல்லையே, என்று கூறியுள்ளார். |
அனன்யாவை மன்னித்த இயக்குநர் |
|
'நாடோடிகள்' நாயகி அனன்யா, 'சீடன்' படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என அப்படத்தின் இயக்குநர் சுப்பிரமணிய சிவா புகார் கூறினார். |
'நாடோடிகள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. இவர் தனுஷ் ஜோடியாக நடித்த 'சீடன்' படம் நேற்று ரிலீசானது.
இதன் படப்பிடிப்பில் அனன்யா ஒத்துழைப்பு அளிக்காமல் தொல்லை கொடுத்ததாக படத்தின் இயக்குநர் சுப்ரமணியம் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "சீடன் படம் சிறப்பாக வந்துள்ளது. தணிக்கை குழுவினரே படத்தைப் பாராட்டினர். படத்தின் நாயகி அனன்யா நன்றாகத்தான் நடித்தார். ஆனால் மேக்கப் போடும் விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை.
இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கதைப்படி அனன்யாவுக்கு வீட்டில் வேலை பார்க்கும் பெண் வேடம். எனவே முகம் பளிச்சென்று இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன். அவர் கேட்கவில்லை. நிறைய மேக்கப் போட்டுக்கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார்.
முகத்தை எப்போதும் கொஞ்சம் சோகமாக இருக்கும்படி வைத்துக்கொள்ளச் சொன்னேன். அதையும் கேட்கவில்லை. படப்பிடிப்பு முழுவதுமே எங்களுக்குள் சண்டை சச்சரவாகவே இருந்தது. ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு படத்தை அனன்யா பார்த்தார்.
அவர் நடிப்பு பிரமாதமாக வந்திருந்தது. படப்பிடிப்பில் தகராறு செய்ததற்காக இப்போது என்னிடம் மன்னிப்பு கேட்கிறார். நானும் மறந்து மன்னித்தேன்", என்றார். |
காதை பாதித்த வன்முறை காட்சிகள்: ஓவியா |
|
போன் வந்தால்கூட பதறுகிறார் ஓவியா. காரணம் காதுக்கு வேலை கொடுப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதாம் அவருக்கு. |
இந்த அவஸ்தைக்கு பின்னணியில் இருப்பது 'அகராதி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அதில் ஏற்ப்பட்ட ஒரு விபத்து தான் காரணம்.
இந்த படத்தில் இன்னொரு நாயகியாக மோனிகாவும் நடித்திருக்கிறார். இருந்தாலும் 'மன்மதன் அம்பு' மாதிரி ஓவியாவை ஏமாற்றாமல் பெரிய அந்தஸ்து கொடுத்திருக்கிறாராம் இப்படத்தின் டைரக்டர் நாகா வெங்கடேஷ்.
ஏனென்றால் ஓவியா முதலில் நடிக்க ஒப்பந்தமான படமும் இதுதான். அப்புறம்தான் வந்தது 'களவாணி'. படத்தில் ஒரு காட்சியில் வெடிகுண்டு வெடிப்பது போலவும், அதிலிருந்து ஓவியா தப்பித்து ஓடுவது போலவும் படமாக்கினார் நாகா வெங்கடேஷ்.
அப்போது ஏற்பட்ட சத்தத்தில் அவரது வலது காது பாதிக்கப்பட்டு விட்டதாம். போன் வந்தால் கூட இடது காதில் வைத்துதான் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுல்ல, சில நாட்களாக காது மருத்துவரிடமும் சிகிச்சை எடுத்து வருகிறார். வன்முறை காட்சிகள் மனசை மட்டுமல்ல, காதையும் பாதிக்கும் என்கிறார் ஓவியா |
| மீ்ண்டும் சினிமாவில் ஸ்ரீதேவி |
|
எண்பதுகளின் கனவுக்கன்னியாக இருந்து, ரிட்டையர் ஆகிப் போன ஸ்ரீதேவி, இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். |
தமிழில் அல்ல, இந்தியில். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் 1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகியாக கலக்கியவர் ஸ்ரீதேவி.
தமிழில் நாயகியாக அறிமுகமான முதல் படம் 'மூன்று முடிச்சு'. 1977-ல் வெளியான '16 வயதினிலே' அவருக்கு பெரும் புகழ் தந்தது. தொடர்ந்து 'சிவப்பு ரோஜாக்கள்', 'பிரியா', 'கல்யாணராமன்', 'கவரிமான்', 'குரு', 'ஜானி', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'மூன்றாம் பிறை...' என அவரது வெற்றிப்பட பட்டியல் பெரிது.
அதேபோல இந்தியிலும் பெரும் வெற்றிப் படங்களில் நடித்தார். பின்னர் பிரபல இந்தி தயாரிப்பாளரும் நடிகர் அனில்கபூர் சகோதரருமான போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். 1997-ல் நடிப்புக்கு முழுக்கு போட்டார். தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்தன.
ஸ்ரீதேவி மீண்டும் சினிமாவுக்கு வருவதை அவர் கணவர் விரும்பவில்லை. எனவே எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தை அமிதாப்பச்சனை வைத்து 'பா' படத்தை தயாரித்த பால்கி தயாரிக்கிறார். பால்கியின் மனைவி கவுரி ஷிண்டே இயக்குகிறார். |
| விளம்பரத் தூதர் பணியிலிருந்து விலகுகிறார் கத்ரீனா |
|
ஐபிஎல்லின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார் பிரபல நடிகை கத்ரீனா கைப். |
இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக தன்னால் ஐபிஎல் -4 சுற்றுப் பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல்லின் ஆரம்ப கட்டத்திலிருந்தே விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான பெங்களூர் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்து வருகிறார் கத்ரீனா. கடந்த ஆண்டு இவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டும் அவர் விளம்பரத் தூதுவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் யாஷ் சோப்ராவின் 'மேரே பிரதர் கி துல்ஹன்' எனும் புதிய படத்தில் அவர் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதால், இந்த விளம்பர தூதர் பணியை மேற்கொள்ள முடியவில்லையாம்.
எனவே இந்த விளம்பர தூதர் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். "எந்த வேலையாக இருந்தாலும் 100 சதவீத ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.
ஆனால் படப்பிடிப்பு, ஐபிஎல் என இரண்டையும் குழப்பிக்கொள்ள விரும்பவில்லை. ஐபிஎல், சினிமா இரண்டுமே முக்கியம். இரண்டுமே சிறப்பாக வரவேண்டும். எனவேதான் எனது விளம்பரத் தூதர் பணியை இன்னும் சிறப்பாக வேறு யாராவது செய்யட்டும் என விலகியுள்ளேன் என்கிறார் கத்ரீனா. |
| வாய்ப்புகளை கெடுத்துக்கொள்கிற அளவுக்கு சம்பளம் கேட்ட அபிநயா |
|
வாய் பேசாவிட்டாலும் தன் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி எல்லாரையும் வாயடைக்க வைத்தவர் அபிநயா. |
இந்த பெருமைமிகு அறிமுகத்தை பாராட்டாதவர்களே இல்லை. அதோடு சேர்த்து அவரை அறிமுகப்படுத்திய சமுத்திரக்கனியையும் சேர்த்து பாராட்டியது மீடியா.
வாய் பேசாத பெண்ணுக்கு வண்டி வண்டியாக டயலாக் கொடுத்து அதையும் அவரே பேசுவது போல காட்டிய சமுத்திரக்கனியை பார்த்து, 'எனக்கு இப்படியெல்லாம் செய்யணும்னு தோணாமல் போச்சே' என்று ஒரு விழாவில் பாராட்டினார் டைரக்டர் அமீர்.
'இந்தியாவிலேயே இப்படி ஒரு சாதனையை எந்த டைரக்டரும் செஞ்சதில்லை' என்று அதே விழாவில் பாராட்டிய அமீரேகூட இப்போது அபிநயா எங்கே என்று தேடியிருப்பார்.
ஏனென்றால் 'நாடோடிகள்', 'ஈசன்' படங்களை தொடர்ந்து அபிநயாவின் அடுத்தப்பட அறிவிப்பு வரவேயில்லை இன்னும். அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? யாரும் அழைக்கவில்லையா? அல்லது இவர் மற்றவர்கள் இயக்கத்தில் நடிப்பதை விரும்பவில்லையா? என்று ஆயிரமாயிரம் கேள்விகள்.
விசாரித்தால் இந்த ஆப்சென்ட்டுக்கு காரணம் அபிநயாவின் குடும்பம்தான் என்கிறார்கள் திரையுலகத்தில். அவரை தேடி தினந்தோறும் வரும் வாய்ப்புகளை கெடுத்துக்கொள்கிற அளவுக்கு சம்பளம் கேட்கிறார்களாம், அபிநயா குடும்பத்தினர்.
திறமையான இந்த பொண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னுதான் ஆசைப்படுறோம். அதுக்காக பதினைஞ்சு லட்சம் கேட்டா என்ன செய்வது என்று புலம்புகிறார்கள் இயக்குநர்கள். |
காதலர் தினம் தேவைதானா?-த்ரிஷா....

நாட்டில் எவ்வளவோ தீவிரமான பிரச்சினைகள் இருக்கும்போது காதலர் தின கொண்டாட்டமெல்லாம் தேவையே இல்லை என்கிறார் நடிகை த்ரிஷா.
ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள பிரமாண்ட படம் சர்வம். இந்தப் படத்தில் ஆர்யா- த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படத்தின் ஆடியோ வெளியீட்டை வித்தியாசமாக நடத்தினர் அய்ங்கரன் நிறுவனத்தினர்.
சென்னை சிட்டி சென்டர் வளாகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மத்தியில் திடீரென்று நட்சத்திரங்கள் தோன்றி ஆடியோவை ரிலீஸ் செய்வது போல ஏற்பாடு செய்திருந்தனர்.
திடீரென்று ஆரியா, திரிஷா, விஷ்ணுவர்தன், யுவன்ஷங்கர் ராஜா போன்றோர் தோன்றியதால் நிறைய கூட்டம் சேர்ந்துவிட, மக்கள் மத்தியிலேயே, இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.
இந்தப் படம் குறித்து பேசிய இயக்குநர் விஷ்ணுவர்தன், நல்ல பொழுது போக்குப் படமாக, ரசிக்கும் விதத்தில் வந்துள்ளது சர்வம் என்றார்.
ஆர்யா பேசுகையில், நான் கடவுள் படத்தின் பாத்திரத்திலிருந்து முழுவதுமாக விலகி நடித்துள்ள வித்தியாசமான டம் என்றார்.
த்ரிஷா அதிரடி!...
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் திரிஷா. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
ஐ.பி.எல். போட்டியில் (20 ஓவர் கிரிக்கெட் அணி) நட்சத்திர தூதராக போவீர்களா?
த்ரிஷா: ஐபிஎல் தூதராவது ஒரு கெளரவமான விஷயம். ஆனால் இதுவரை எனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை.
பிரீத்தி ஜிந்தா 20 ஓவர் கிரிக்கெட் அணியை வாங்கியது போல, நீங்களும் வாங்குவீர்களா?
த்ரிஷா: அய்யோ... என்னை சிக்கலில் மாட்டிவிடப் பார்க்கிறீர்கள். சான்ஸே இல்ல... என் பணம் பேங்க்ல பத்திரமா இருக்கு. அது அப்படியே இருக்கும்!
காதலர் தினம்... உங்க அனுபவத்தைக் கூறுங்கள்...
த்ரிஷா: எனக்கு இன்னும் சொல்லிக்கிற மாதிரி இதுல அனுபவம் இல்லை. பொதுவா, நல்ல... உண்மையான காதலர்களுக்கு எல்லா நாளும் வாலன்டைன்ஸ் டேதான். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அவங்கவங்க சாப்பாடு, தண்ணி கூட இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்க. இதுல காதலர் தினத்தை வேறு தனியா கொண்டாடனுமா... இதில் மக்கள் கோபத்தைத்தான் கிளறும். என்னைப் பொறுத்தவரை காதலர் தினமெல்லாம் வீணான வேலைதான்...!" என்றார் த்ரிஷா.
கேட்க நல்ல இதமா இருக்கும், பெற்றோர் காதுகளுக்கு!
காதலர் தின ரிலீஸ்: சோகத்தில் நடிகைகள்
டைரக்டர் பிரபு தேவா இயக்கத்தில் உருவான 'எங்கேயும் காதல்' படத்தை காதலர் தினம் நெருங்கும் நேரத்தில் வெளியிட முடியாமல் போனதாம்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்தான் தயாரிப்பாளரை மிரட்டியுள்ளதாம். இதனால் பட ரிலீஸ் தேதியை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி போட்டுள்ளார்களாம்.
'எங்கேயும் காதல்' படம் இந்த 'வேலடைன்ஸ் டே' சமயத்தில் வெளியாவது ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
அழகான காதல் கதையில் எனக்கு பிடித்த 'நெஞ்சில் நெஞ்சில்..' பாடல் என்னை மயக்கியது என்று கூறும் ஹன்சி, தமிழில் நடித்த முதல் படம் எதிர்பார்த்த நாளில் வெளியாகவில்லை என்பதால் கவலையடைந்தாராம்.
டைரக்டர் கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் 'கோ' படத்தில் நாயகன் ஜீவா உடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த நாயகி கார்த்திகா, இந்த 'வீக் எண்டில்' கோ படத்தை மும்பை ப்ரெண்ட்ஸ் இணைய ஜாலியாக பார்க்க திட்டமிட்டேன்.
ஆக்ஸன் படத்தில் அட்டகாசமான காதல் கதையை வைத்து, 'வெண்பனியே..என்னமோ..'ஆகிய ரொமான்டிக் பாடல்களை டைரக்டர் சார் வைத்திருப்பார்.
அத்தனையும் ரசிக்கும்படி இருக்கும் என்று கூறும் கார்த்திகா, பட ரிலீஸ் தேதி தள்ளி போனதில் 'டல்'லானாராம்
இரண்டாம் தேனிலவு வேண்டாம்: பிரகாஷ் ராஜ் எடுத்த முடிவு

| தனது பயணம் படம் ரிலீஸ் வேலையில் மிகவும் பிஸியாக இருக்கிறார் பிரகாஷ் ராஜ். |
இந்த நேரத்தில் தன் மணவாழ்க்கை மற்றும் விவாகரத்து 'எபிசோட்டை' உருக்கமாக ஓட்டி காண்பித்தார். தற்போது காதலி போனி வர்மாவை இணைத்துக்கொண்ட பிறகு, முன்னாள் மனைவியை 'நல்ல தோழி' யாக கருதுகிறாராம். டான்ஸ் காதலியை கைப்பிடித்த பிறகு 'இரண்டாவது தேனிலவை' கொண்டாட விரும்பவில்லையாம். போனி வர்மாவுக்கு படங்களில் 'டான்ஸ் கொரியோக்ராபராக' விருப்பம் போல் பணியாற்ற சுதந்திரம் கொடுத்துள்ளாராம் பிரகாஷ் ராஜ்.
கண் தானம் செய்தார் சினேகா

| நடிகை சினேகா தனது கண்களை நேற்று பிப்.15 அன்று தானம் செய்தார். |
இதற்கான படிவத்தின் கையெழுத்திட்டு 'ராஜன் ஐ கேர்' மருத்துவமனைக்கு அவர் வழங்கினார்.
தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என அழைக்கப்படும் நடிகை சினேகா பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் ரோட்டரி கிளப் முயற்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தன்னை அந்த அமைப்பில் இணைத்துக் கொண்டு நிதியுதவியும் செய்தார். இப்போது தனது கண்களை தானம் செய்துள்ளார் சினேகா. இதற்கான விழா நேற்று காலை சென்னை 'ராஜன் ஐ கேர்' மருத்துவமனையில் நடந்தது. கண் தான பத்திரத்தில் கையெழுத்திட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சினேகா, கண் தானம் செய்வதன் மூலம், வாழ்க்கையை தொடர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.
2 ஆவது திருமணம் பற்றி சோனியாஅகர்வால் கருத்து!

இயக்குனர் செல்வ ராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். செல்வராகவனுக்கு மீண்டும் திருமணம் நடைபெற உள்ளது.
தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பெண்ணையே காதலித்து மணக்கிறார். சோனியா அகர்வால் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார்.
சிம்பு கதாநாயகனாக நடிக்கும் வானம் படத்தில் தற்போது நடித்து வருகிறார். செல்வராகவனுக்கு 2-ம் திருமணம் நடப்பதால் சோனியா அகர்வாலும் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்துள்ளன.
இதனை சோனியா அகர்வால் மறுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- விவாகரத்துக்கு பின் கொஞ்ச நாட்கள் கஷ்டப்பட்டேன்.
என்னை சுற்றி இருந்த நண்பர்களும் உறவினர்களும் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அதில் இருந்து மீட்டனர். இப்போது புது வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறேன்.
திடீர் என்று திருமணம் ஆனதால் நடிப்பை விட்டேன். தற்போது மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளேன்.
செல்வராகவன் இன்னொரு பெண்ணை மணப்பதால் எனக்கும் அது போல் திருமணம் நடக்கும் என பேசுகின்றனர்.
என் வாழ்க்கையில் இன்னொரு கல்யாணத்துக்கு வாய்ப்பே இல்லை. அதற்கான மன நிலையிலும் நான் இல்லை என்றார்.
| சோனாவின் புதிய பாதை |
|
கோலிவுட்டில் 'கவர்ச்சியான தயாரிப்பாளராக' அடையாளம் காணப்பட்ட சோனா, படத்தயாரிப்பு மற்றும் பிஸ்னசில் கவனம் செலுத்தி வந்ததால் சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் சிரமமாக உணர்ந்தாராம். |
பட புரொடியுசர் வேலைகளை முடித்த பின், கதை கேட்கவும் நேரம் ஒதுக்கியுள்ளாராம். விரைவில் துவங்க உள்ள பாலு மகேந்திராவின் பள்ளி மாணவர் இயக்கும் குடும்ப பொழுதுபோக்கு படத்தில் நடிக்க உள்ளார்.
மலையாளத்திலும் நடிக்கிறார். கோடம்பாக்கம் குத்தாட்டம், கவர்ச்சி ரோலில் நடிப்பதை தவிர்க்க முடிவெடுத்துள்ளாராம். அழுத்தமான ரோலில் என் நடிப்பை காட்டப்போறேன்.
சங்கீதா நடிக்கிற மாதிரி ரோலில் நடிக்க விரும்புகிறேன் என்று நடிப்பு மேல் இருக்கும் தீராத மோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2012 -ல் பாக்யராஜ் படத்தை தயாரிப்பதில் சோனா உறுதியாக உள்ளார்.
மங்காத்தா படத்தை முடித்ததும் பிரேம்ஜி, சோனாவின் படத்தில் வேகம் காட்டப்போகிறாராம். டைரக்டர் வெங்கட் பிரபுவின் படத்திலும் இனி சோனாவை பார்க்கலாம். |
|
|
.