தொழில்நுட்பம்


சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு

சீனாவின் கிழக்கு பகுதியில் சுமார் 700 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படும் பெண் மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே இதனை முதலில் கண்டுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பெண் மம்மியானது 1368- 1644 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மம்மியில் அணிவிக்கப்பட்டிருந்த ஆடையும் அதனைப் பறைசாற்றுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனுடன் வேறு இரு கல்லறைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மம்மியானது மிகவும் நுணுக்கமான முறையில் பதனிடப்பட்டுள்ளது. தலை முதல் கால்பாதணிகள் வரை ஆச்சரியப்படத்தக்க வகையில் இது பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதன் கண் இமைகள், முடி, உடலின் தோல் ஆகியன இற்றைக்கும் மிஞ்சி இருப்பதானது, சீனர்களும் மனித உடல் பதனிடலில் சிறந்து விளங்கியமையை எடுத்துக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் வலது கையில் தோலானது பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன் அதில் மோதிரமொன்றும் காணப்படுகின்றது. இம் மம்மியின் உயரம் 1.5 மீற்றர்களாகும். மண் நிற திரவம் அடங்கிய சவப்பெட்டி ஒன்றினுள் இருந்தே இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பட்டு மற்றும் சிறிது பருத்தியினால் ஆன ஆடையே இம் மம்மிக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டு மற்றும் பருத்தியை பாதுகாப்பது கடினம் என்ற போதிலும் இம் மம்மியில் அவை சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெங் வீயினில் உள்ள நூதனசாலை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

விண்வெளியில் சூரியனை விட 3 மடங்கு பெரிய கரும்பள்ளங்கள் கண்டுபிடிப்பு
1939 ம் ஆண்டு ஓப்பன் ஹீமர் என்ற விஞ்ஞானி நியூட்ரான் விண்மீன்களைப் பற்றி ஆராய்ந்தார்.
அவரது கருத்துப்படி நம் சூரியனைப் விட 3.2 மடங்கு அதிக நிறை உடைய ஒரு நியூட்ரான் விண்மீன் தன்னுடைய சொந்த ஈர்ப்பு விசையை எதிர்க்க முடியாமல் அதனுடைய நியூட்ரான்கள் உள் நோக்கி மேலும் சுருங்குகின்றன.
அப்போது ஒருமைத் தன்மை என்ற ஒரு நிலையை அவை அடைகின்றன. அதாவது அவை பருமன் ஏதும் இல்லாமல், ஆனால் முடிவில்லாத ஒரு நிறையையும் அடர்த்தியையும் கொண்டிருக்கின்றன.
இது போன்ற ஒருமைத் தன்மையை அடைந்த நியூட்ரான் விண்மீன்களின் மேற்புற ஈர்ப்பு விசை மிக மிக அதிகமாக இருப்பதால் அவற்றின் அருகில் இருக்கும் அல்லது அவற்றிற்கு அருகே வரும் எந்தப் பொருளையும் அவை தன்னுடன் ஈர்த்துக் கொள்கின்றன.
ஒளியின் வேகம் எவ்வளவு என்று நமக்குத் தெரியும். ஒளி கூட இது போன்ற ஒருமைத் தன்மையில் தப்ப முடியாது. ஒளியைக் கூட இவை தன்னோடு ஈர்த்துக் கொள்கின்றன. இது போன்ற பொருட்கனை கரும்பள்ளங்கள் என்று அழைக்கின்றனர்.
விண்வெளியில் காணப்படும் கரும்பள்ளங்களில் விழும் எதுவுமே அதிலிருந்து தப்ப முடிவதில்லை. கரும்பள்ளங்கள் என்பவை விண்மீன்கள் படு அடர்த்தியாக அமைந்திருக்கும் விண்பகுதிகளிலேயே அதிகமாக உருவாக வாய்ப்புள்ளது.
முக்கியமாக காலக்சிகளின் மையப்பகுதிகள் மற்றும் கோளக் கூட்டங்களின் மையப்பகுதிகள் போன்றவற்றில் விண்மீன்கள் அடர்த்தியாகக் காணப்படுவதால் அங்கே கரும்பள்ளங்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றன.

கணணியில் அனைத்து வகையான கோப்புகளையும் எளிதில் கையாள வேண்டுமா?
கணணியில் நாம் பல வகையான கோப்புகளைப் பயன்படுத்துவோம். exe, mp4, mp3, doc, xls etc என்று ஒவ்வொரு மென்பொருள்களுக்கும் அந்த மென்பொருளை குறிப்பிடும் வகையில் மூன்று எழுத்துகளில் கோப்பு வகையின் பெயர் இருக்கும்.
இதை Extension name என்று சொல்வார்கள். இதை வைத்து தான் கணணி இந்த வகை கோப்பை இந்த மென்பொருளின் மூலம் திறக்கப்பட வேண்டும் என எடுத்துக் கொள்கிறது.
இவை பெரும்பாலும் ஒரு மென்பொருளை நிறுவும் போதே கோப்பு வகைக்கான பெயரை File Types இல் சேர்த்து விடும். இதனைப் பார்க்க நாம் My Computer சென்று மெனுவில் Folder Options -> View File Types பகுதிக்கு செல்ல வேண்டும்.
சில நேரங்களில் தவறுதலாக மென்பொருள்களை நீக்குவது அல்லது எதாவது வைரஸ் தாக்குதலின் போது கோப்பு வகைகள் மாறி விடும் நிகழ்வும் இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு ஒன்றுக்கு மேல் மென்பொருள்கள் நிறுவும் போது எந்த மென்பொருளில் திறக்கப்பட வேண்டும் என்பது மாறிவிடும்.
அந்த மாதிரி நேரங்களில் File Types சென்று எதில் திறக்க வேண்டும் என்பதை Open with மூலம் மாற்றுவோம். இந்த வேலைக்கென இருக்கும் மென்பொருள் தான் FileTypesMan ஆகும்.
இந்த மென்பொருள் விண்டோசில் இயல்பாக இருக்கும் Folder Options மூலம் அறியக்கூடிய விசயங்களை விட அதிகமான விவரங்களை அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த மென்பொருள் கணினியில் உள்ள எல்லா வகையான கோப்புகளின் Extension களைப் பட்டியலிடுகிறது.
மேலும் குறிப்பிட்ட கோப்பு வகையின் பெயர், விவரங்கள், அது என்ன வகையான பயன்பாடு, Mime Type, Flags போன்றவற்றையும் தெரிவிக்கிறது.
இதன் மூலம் குறிப்பிட்ட கோப்பு வகையின் பண்புகளை எளிதாக மாற்ற இயலும். கோப்பு வகைகளுக்கான open, print போன்ற Action களை சேர்க்கவும் மாற்றவும் அழிக்கவும் முடியும்.
பயன்படுத்த எளிமையான இந்த மென்பொருளை நிறுவத் தேவையில்லை. அப்படியே கிளிக் செய்து பயன்படுத்தலாம். இது விண்டோசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக் கூடியது.

உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்
அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி.
அதிக எடை இதற்கு முக்கியமான எதிரியாகும். எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பரங்கள் ஆகியவற்றை பார்த்துப் பார்த்து ஒல்லியாக இருப்பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் வேறூன்றி விட்டது.
முதலில் உங்கள் உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு, ஓய்வு, தூக்கம், உடற் பயிற்சி இவைகளால் உங்கள் உடல் நலன் கூடும். அத்தோடு உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
உடலின் பராமரிப்பு: நமது உடல் கூறு அதிசயமான உள்ளங்களை உள்ளடக்கியது. இதை நல்ல முறையில், பேணி காப்பது நம் கடமையாகும்.
உடலுக்கு சலுகைகள்: உடலுக்கு அவ்வப்போது சலுகைகள் அவசியம். உதாரணமாக மஸாஜ் செய்து கொள்வது, புதிய உடை வாங்குவது போன்றவைகள். இது போன்ற சலுகைகளில் உங்களுக்கு தன்னம்பிக்கையும், உங்கள் உடலைப் பற்றிய நல்ல உணர்வும் ஏற்படும்.
உங்கள் தேவை: உங்களுக்கு வாழ்வில் எது தேவை என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். மேற்கத்திய நாடுகளில் பெண்கள் தங்கள் அழகையும், உடலையும் பாதுகாப்பதில் தான் அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர்.
உங்கள் பழக்கங்கள்: கண்ணாடி முன் நின்று 100 முறை உங்கள் மூக்கை பார்ப்பதற்கு பதிலாக வேறு வேலைகளில் கவனத்தை செலுத்தவும். உங்கள் மூக்கு மட்டுமே நீங்கள் என்ற எண்ணத்தை முதலில் விடவும்.
சரியான பார்வை: பட்டினி கிடந்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வது தான் அழகாக தோன்ற வழி என்று நினைப்பது தவறு. எது உங்களுக்கு சரி என்று முதலில் தீர்மானிக்கவும். தேவையான உடல் பயிற்சி, சரியான உணவு இவையெல்லாம் தான் அழகை மேம்படுத்தும்.
நீங்கள் தனி மனிதர் இல்லை: இதே பிரச்சினை அதிக பட்சமான பெண்களுக்கு உண்டு என்பதை புரிந்து கொள்ளவும். இந்த பிரச்சினையில் மூழ்காமல் இருப்பது உங்களை கையில் உள்ளது. எது அழகு, யார் சிறந்தவர் என்று மற்றவர் சொல்வதை நம்பாதீர்கள்.


முறையாக தூங்கினால் படுசுட்டியாக இருப்பீர்கள்: ஆய்வில் தகவல்
தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடையவர்கள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது: ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்தபோது எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள் சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல்,​​ மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ளுதல்,​​ கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன.
குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன்,​​ 11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது,​​ கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார். குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.


புத்தகம் படிக்கும் அதிசய எந்திரன்
மனிதர்களைப் போலவே இனி ரோபோவும் புத்தகம் வாசிக்கும். வாசித்ததைப் புரிந்தும் கொள்ளும். இதுபோன்ற ஒரு அதி நவீன ரோபோவை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ரோபோக்கள் இது நாள் வரை நடப்பது, ஓடுவது, எடுப்பது, கொடுப்பது மாதிரியான செயல்கள் செய்து வந்தன. ஆனால் அவற்றால் புத்தகம் வாசிக்க முடியாது. ஏனெனில் எழுத்துக்களை இனம் காண்பது என்பது மிகவும் சிரமமான காரியம்.
எழுத்துக்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. வேறு வேறு வடிவங்கள், அளவுகள் என மாறிக் கொண்டேயிருப்பதால் எழுத்துக்களை அடையாளம் கண்டுபிடிப்பது ரோபோக்களுக்கு இயலாததாகவே இருந்து வந்தது.
ஆனால் இப்பொழுது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இங்மர் போஸ்னர் மற்றும் பால் நியூமேனும் க்வீன்ஸ்லேண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பீட்டர் கார்க்குடன் இணைந்து எழுத்தை இனம் கண்டு புத்தகம் வாசிக்கும் திறனுடைய ரோபோவைக் கண்டுப்பிடித்துள்ளனர்.
Optical Character Recognition(OCR) எனப்படும் எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்ளும் மென்பொருளை ரோபோவிற்குள் பொருத்தி இச்சாதனையை செய்துள்ளனர். இதனால் எழுத்துக்களை மற்ற வடிவங்களிலிருந்து இனம் பிரிக்க முடியும்.
அது மட்டுமின்றி வார்த்தை சரியாக எழுதப்பட்டுள்ளதா என கண்டுப்பிடிக்க "ஸ்பெல்லிங்" சோதிக்கும் வசதியும் உள்ளது. மேலும் வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்ள அகராதியும் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் படிப்பதற்கு அர்த்தமும் புரிந்துகொள்ளும்.

உங்களது முக்கியமான கோப்புகளை மற்றவர்களிடமிருந்து மறைக்க
நாம் சில முக்கியமான கோப்புகளை வைத்து இருப்போம். அதாவது நம்முடை pen Drive ஐ ஒருவரிடம் கொடுக்கும் போது அதில் நாம் நிறைய தகவல்களை சேமித்து வைத்து இருப்போம்.
எடுத்துக்காட்டாக Word Document, Excel Worksheet, PowerPoint Presentation, Pdf, mp3, video, softwares, games போன்றவைகள் இருக்கலாம். இப்படியான சில முக்கியமான கோப்புகள் யாரிடமும் சென்று விடக்கூடாது என்று சில நேரங்களில் நாம் நினைக்கலாம். அடுத்தவர் உங்கள் கோப்புகளை திருடாமல் இருக்க இந்த மென்பொருளை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.
இதற்கு எல்லாம் மென்பொருளா? சாதாரணமாக ஒரு Hidden செய்தால் போதும் தானே அல்லது அந்த நேரத்தில் குறிப்பிட்ட கோப்பை அழித்து விட்டு அல்லது cut செய்து வைத்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். இது நமக்கு சிரமத்தைத்தான் ஏற்படுத்தும்.
1. இந்த மென்பொருளை கணணியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை.
2. இதற்குறிய password முற்றிலும் வித்தியாசமானது. அதாவது இங்கு password ஆக பயன்படுவது Text Document ஆகும். என்ன புரிய வில்லையா? உங்களுடைய folder ஐ திறக்க வேண்டும் என்றால் Right click செய்து New > New Text Document இந்த கோப்பை உருவாக்கினால் தான் உங்களுடைய folder open ஆகும்.
இதற்கு முதலில் download செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான இடத்தில் இதனை நிறுவிக் கொள்ளுங்கள்.
Folder Personal என்பதனை open செய்யவும். ஏதாவது ஒரு கீயை அழுத்தவும். இப்போது Personal என்ற ஒரு Folder உருவாகி இருக்கும். அதில் முக்கியமான கோப்புகளை காப்பி செய்து விட்டு folder ஐ மூடி விடுங்கள்.
மீண்டும் Folder Personal என்பதனை open செய்து ஏதாவது ஒரு கீயை அழுத்தவும் அந்த Folder Lock ஆகிவிடும்.
Unlock செய்வதற்கு குறிப்பிட்ட இடத்தில் அதாவது Folder Personal.exe இருக்கும் இடத்தில் New Text Document இந்த பைல் இருந்தால் மாத்திரமே Unlock செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி ஐந்து முறை மாத்திரமே unlock செய்து கொள்ள முடியும். அடுத்த முறை unlock செய்யும்போது Register பண்ண வேண்டும் என்ற செய்தி தோன்றும் என்பதனை மறந்து விடாதீர்கள்.

பூமிக்கு அருகில் வருகிறது சந்திரன்: நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு
அடுத்த வாரம் வானில் ஓர் அதிசயம் நிகழப் போகிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன் மீண்டும் பூமிக்கு அருகில் வரப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த மாதம் 19 ம் திகதி சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது.
அதாவது பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைலாக குறையும். கடந்த 1992 ம் ஆண்டுக்குப் பிறகு பூமியும், சந்திரனும் மிக அருகில் வரப் போகின்றன. வரும் பௌர்ணமி அன்று சந்திரன் வழக்கமான அளவை விட சுமார் 90 சதவீதம் பெரியதாக இருக்கும்.
அடுத்த மாத பௌர்ணமி வரை இதை பார்க்க முடிவதுடன் வெளிச்சமும் அதிகமாக இருக்கும். சூப்பர்மூன் என்ற இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டது. அதாவது 18 முதல் 19 ஆண்டு இடைவெளியில் நிகழ்கிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் இமெயில்கள் பரவி வருகின்றன.
வானில் அதிசயங்கள் நிகழும் போது நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனினும் பூமியில் நிகழும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது.
கடற்கரை நகரங்களில் மட்டும் வானிலையில் சிறு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலில் அலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஜான் கெட்லே தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ம் ஆண்டில் சூப்பர்மூன் ஏற்பட்ட போது அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை டிரேசி என்ற சூறாவளி புரட்டிப் போட்டதாகவும், 1974 ல் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சந்திரன் மிக அருகில் வருவதால் ஏற்படும் வானிலை மாற்றங்களால், பூமியில் வெப்பம் தணியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் கோடைகால வெப்பத்திலிருந்து இந்த ஆண்டு மட்டும் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

கூகுள் மற்றும் பேஸ்புக் பக்கம் செல்ல வேண்டாம்
முதலில் கூகுள் அதன் பிறகு பேஸ்புக், யூடியூப், டிவிட்டர், ஜிமெயில். இப்படி தினந்தோறும் விஜயம் செய்யும் இணையதளங்களின் பட்டியல் எல்லோருக்குமே உண்டு.
இதில் வரிசை மாறலாம். ஆனால் தினமும் தவறாமல் செல்லும் இணையதளங்கள் என்று சில நிச்சயமாக இருக்கும். இவற்றில் சில இணையதளங்களில் மணிக்கணக்கில் செலவிடும் ப‌ழக்கம் சிலருக்கு இருக்கலாம்.
கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவுக்கு சிலர் குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு அடிமையாகி இருப்பதுண்டு. அதாவது அவர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்த தளங்களில் அதிக நேரத்தை வீண‌டித்து கொண்டிருப்பார்கள்.
உதாரணத்திற்கு பேஸ்புக்கே கதி என இருக்கும் பேஸ்புக் பிரியர்கள் இருக்கின்றனர். சதா யூடியூப்பில் வீடியோ காட்சிகளாக பார்த்து கொண்டிருக்கும் யூடியூப் பிரியர்களும் இருக்கின்றனர். கூகுலின் இமெயில் சேவையான ஜிமெயில் பற்றி சொல்லவே வேண்டாம். புதிய இமெயில் வந்துள்ளதா என்று பார்க்க கை அடிக்கடி பரபரக்கும்.
இப்படி குறிப்பிட்ட இணையதளங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கு அடிமையாகி போவதை இணைய யுகத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம். இதற்கு மாற்று மருந்து தேவை என்று நினைத்தால் அதற்கும் ஒரு இணையதளம் இருக்கிறது. கீப்மீஅவுட் இது அந்த இணையதள‌ம்.
அதாவது நானே விரும்பினாலும் அந்த இணையதளத்தின் பக்கம் போக அனுமதிக்க கூடாது என நீங்கள் கருதும் இணையதளங்களின் பட்டியலில் இந்த தளத்தில் சமர்பித்தீர்கள் என்றால் அந்த தளங்களின் பக்கம் செல்லாமல் இந்த தளம் பார்த்து கொள்ளும்.
இனி பேஸ்புக் பக்கமே போககூடாது என சபதம் எடுத்து கொண்டு இந்த தளத்தில் பேஸ்புக் பெயரை சமர்பித்தீர்கள் என்றால் அதன் பிறகு பேஸ்புக் பக்கம் உங்கள் அனுமதிக்காமல் இந்த தளம் உங்களை காப்பாற்றும். அந்த அளவுக்கு எல்லாம் கட்டுப்பாடு வேண்டாம் என்று நினைத்தாலும் தேவைக்கேற்ப கட்டுப்படுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் பேஸ்புக் பக்கம் போக அனுமதிக்காமல் இருக்கும் படி வரைமுறை செய்து கொள்ளலாம். பேஸ்புக் என்பது உதாராணம் தான். அவரவர் பழக்கம் மற்றும் விருப்பத்திற்கெ ஏற்ப எந்த தளத்தை வேண்டுமானாலும் குறிப்பிட்டு எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும், வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் ஒரு நாள் விரதம் இருப்பது போல என எப்படி வேண்டுமானாலும் இணையவாசிகள் தங்களுக்கான கட்டுப்பட்டை நிர்ணயித்து கொள்ளலாம்.
இணையத்தில் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இந்த சேவை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு தேவையானதாகவும் இருக்கும். இப்படி இணையவாசிகள் தங்களுக்கு தாங்களே விலங்கு மாட்டிக்கொள்ளும் இணையதளங்களில் இருந்து முன்ன‌ணி 10 இணையதளங்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகிறது. உங்களூக்கான தளம் அந்த பட்டியலில் இருந்தால் அதனை கிளிக் செய்து கொள்ளலாம்.
ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் இந்த தளம் செயல்படுகிறது. பிரபலமான தளங்களின் பட்டியலில் ஆங்கிலம் தவிர பிற மொழி தளங்கள் சிலவும் இடம் பெறுகின்றன. அந்த வகையில் மற்ற மொழிகளில் கோலோச்சும் தளங்களையும் இதை பார்த்தே அறிய முடியும்.
இணையவாசிகள் தங்களை தாங்களே கட்டுப்படுத்தி கொள்ளவும் இந்த தளத்தை பயன்படுத்தலாம் அல்லது பெரியவர்கள் தங்கள் பிள்ளைகள் பேஸ்புக் போன்ற தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை கட்டுப்படுத்த விரும்பினாலும் அவர்கள் சார்பில் இந்த சேவையை பயன்படுத்த‌லாம்.

தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட தயாரிப்பு: பேசும் கார்
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிப்பதற்கு எது சிறந்த வழி? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசும் கார் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த கார் அடுத்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது.
மிக நவீனமான வாய்ஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருப்பதன் மூலம் கார்கள் பேசுகின்றன.
இந்த சிஸ்டத்தை சின்ங் என்ற கம்பெனி உருவாக்கி உள்ளது. இந்த சிஸ்டத்தில் 19 மொழிகளில் 10 ஆயிரம் கட்டளைகள் இணைக்கப்பட்டு உள்ளன.

கூகுள் தரும் உடனடி தகவல்கள்
ஒரு நாடு குறித்த பல தகவல்கள் நமக்கு அடிக்கடி தேவையாய் இருக்கும். இவ்வாறான விடயங்களை கூகுளின் மூலம் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
நாம் ஒரு நாட்டைப் பற்றிய சிறு அறிக்கை அல்லது தகவல் தொகுப்பினைத் தயாரிக்க பல வகையான தகவல்கள் தேவைப்படும்.
எடுத்துக் காட்டாக அதன் மக்கள்தொகை, ஆண்டு பொருளாதார வளர்ச்சி, அது உலக மேப்பில் எங்குள்ளது போன்ற கேள்விகளுக்கு நமக்கு விடையாகப் பலவகை தகவல்கள் தேவைப்படுகின்றன.
இவற்றைப் பெற நாம் ஏதேனும் சர்ச் இஞ்சின் சென்று நாட்டின் பெயரைக் கொடுத்துப் பின்னர் கிடைக்கும் தளமுகவரிகளைக் கிளிக் செய்து தகவல்களைத் தேடிப் பெறுவோம்.
ஆனால் இப்போது கூகுள் சர்ச் இஞ்சின் இந்த தகவல்களை மிகவும் எளிமையாவும் வேகமாகவும் பெறும் வகையில் இயங்குகிறது.
எடுத்துக்காட்டாக ஜேர்மனியின் மக்கள்தொகை என்னவென்று அறிய என சர்ச் இஞ்சின் கட்டத்தில் population Germany என்று கொடுத்தால் போதும்.
ஒரு நாட்டின் தேசிய கீதம் அறிய நாட்டின் பெயருடன் anthem என்றும், தலைநகர் அறிய capital city என்றும், தேசியக் கொடி குறித்துத் தெரிந்து கொள்ள flag என்றும் கொடுத்தால் போதும். அதற்கான தகவல்கள் வந்துவிடும்.

அகத்தின் அழகு குரலில் தெரியும்
ஒருவர் உண்மையானவரா? ஏமாற்றாதவரா? என்பதை அவரின் குரல் வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
குரலை நிர்ணயம் செய்வது உடலில் உள்ள ஹார்மோன்கள். பெண்களின் குரல் மென்மையாகவும், ஆண்களின் குரல் கடுமையாக, கட்டைத் தொண்டையாகவும் இருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.
மற்றவர்களை இவர்கள் எளிமையாக வசீகரிப்பார்கள் என்ற கருத்தும் உள்ளது. இதுதொடர்பாக கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் குரல் வல்லுனர்கள் ஜிலியன் ஓ கூனூர் தலைமையில் சமீபத்தில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குரலின் தன்மை தொடர்பான அனைத்து அம்சங்களும் அலசி ஆராயப்பட்டன.
அதில் அடுத்தவர்களை கவர்ந்திழுப்பதில் குரலுக்கு முக்கிய பங்கு இருப்பது மறுக்க முடியாதது. இனிமையான குரல் கொண்ட பெண்கள் மற்றும் கட்டைத் தொண்டையாக இருக்கும் ஆண்களிடம் வசீகரத் தன்மை இருப்பது உண்மை.
ஆனால் இவர்களை அவ்வளவாக நம்ப முடியாது என்பது ஆய்வில் நிரூபணமாகி உள்ளது. இவர்கள் உண்மையாக நடந்து கொள்ளாததால் தம்பதியர், காதலர்கள் பிரியும் வாய்ப்பு அதிகம் என்பதையும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கோமா நிலை நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிய புதிய முறை அறிமுகம்
கோமா நிலை நோயாளியின் மூளை பிம்ப தொழில்நுட்பங்களை அப்ரிடின் பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஸ்காட்லாந்தில் இது போன்று நடைபெறும் முதல் ஆராய்ச்சி இதுவாகத் தான் இருக்கும் என நியூஅப்ரிடின் தெரிவித்தார். இந்த புதிய ஆய்வின் மூலம் கோமா நிலை நோயாளிகள் விழிப்புணர்வு குறித்து கூடுதல் தகவல்களை பெற முடியும்.
இந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளுக்கு ஸ்காட்லாந்தின் வட கிழக்கு பகுதியில் உள்ள நோயாளிகள் உதவி செய்கிறார்கள். இந்த புதிய தொழில்நுட்ப ஆய்வு பேராசிரியர் கிறிஸ்டியன் ஸ்வார்ஸ் பவுர் தலைமையில் நடைபெறுகிறது.
கோமா நிலை நோயாளிகள் குறித்த தகவல்களை அறிய எப்.எம்.ஆர்.ஐ என்ற ஸ்கேனிங் பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பங்கள் கோமா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வழிகாட்டுதலாகவும், உறவினர்களுக்கு உரிய தகவல் தரக்கூடியதாகவும் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மூளைக்காயம் காரணமாக அவதிப்படும் நோயாளிகளுக்கு உணர்வற்ற கோமா நிலை ஏற்படும் அபாயமும் உள்ளது. இது போன்ற நவீன மருத்துவ கவனிப்பு மூலம் மூளைக்காயம் அடைந்த நோயாளிகள் இயல்பு நிலை அடையும் சூழல் உருவாகியுள்ளது.
கோமா நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து நுணுக்கமான விவரங்களை பெறுவதற்காக இந்த குழு ஆய்வு செய்கிறது.


ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி

தற்போது கணணி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.
இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
இதில் நமக்கு வரும் மெயில்களை தனி தனியாக பிரித்து அறிந்து கொள்ள லேபில் வசதியை பயன்படுத்துகிறோம். இருந்தும் பல லேபில்கள் உருவாக்குவதால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள சிரமம் உள்ளது.
இந்த பிரச்சினையை தீர்க்க ஜிமெயிலில் ஒரு புதிய வசதி வந்துள்ளது. நீங்கள் குறிப்பிட்ட லேபிளுக்கு குறிப்பிட்ட நிறத்தை தேர்வு செய்து விடலாம். தேர்வு செய்து விட்டால் ஒவ்வொரு லேபிளில் வரும் ஈமெயிலும் அதற்கென தனி நிறத்தில் காட்சி அளிக்கும்.
உங்கள் ஜிமெயில் லேபில் பகுதியில் ஒரு சிறிய கட்டம் போன்ற பகுதி தெரியும். அதில் க்ளிக் செய்தால் கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
அந்த விண்டோவில் உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளவும். அதில் உள்ள நிறங்கள் பிடிக்கவில்லை என்றால் Add Custom Color என்பதை க்ளிக் செய்து தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்படி ஒவ்வொரு லேபிளுக்கும் ஒவ்வொரு நிறத்தையும் தேர்வு செய்து விடவும். இப்பொழுது உங்களுக்கு வரும் மெயில்கள் அந்தந்த லேபில்களின் நிறங்களில் காணப்படும். இனி நிறங்களை வைத்தே உங்களின் மெயில் வகையை எளிதாக கண்டறியலாம்.


பேஸ்புக்கில் ஓன்லைனில் இருப்பதை மற்றவர்களிடமிருந்து மறைக்க
பேஸ்புக்கானது நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விடயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம்.
ஒரு சில நேரங்களில் ஏதோ ஒரு தேவைக்காக நாம் பேஸ்புக்கில் உலாவரும் போது மற்ற நண்பர்களிடம் இருந்து நாம் ஓன்லைனில் இருப்பதை மறைக்க கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
1. முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்ததும் உங்களின் அரட்டை(chat) பகுதியை ஓபன் செய்யுங்கள். இந்த பகுதி உங்கள் பேஸ்புக் விண்டோவின் கீழ்பகுதியில் வலது பக்கத்தில் இருக்கும்.
2. திறந்தவுடன் ஓன்லைனில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காணப்படும்.
3. அதில் மேல்பகுதியில் உள்ள விருப்பத்தேர்வுகள்(Options) என்பதை க்ளிக் செய்யுங்கள். உடனே ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
4. அந்த விண்டோவில் உள்ள ஓப்லைனுக்கு செல்ல(Go offline) என்பதை க்ளிக் செய்து விடவும். இப்பொழுது நீங்கள் அரட்டை பகுதியில் இருந்து முழுவதும் துண்டிக்கபடுவீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் ஓன்லைனில் இருப்பது தெரியாது.
5. இந்த வசதி மீண்டும் வேண்டுமென்றால் மறுபடியும் அரட்டை பகுதியின் மீது க்ளிக் செய்தாலே போதும் இவ்வசதியை பெற்று விடலாம்.

வேர்ட் 2010 ல் எக்செல் சீட்டை இணைக்க
ஆப்பிஸ் தொகுப்பின் அண்மைய வெளியிடான 2010 மிகவும் சிறப்புடையதாகும். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது.
இதில் மற்றும் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் வேர்ட் 2010 ல் இருந்தப்படியே எக்செல் சீட்டையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியின் மூலமாக வேர்ட் தொகுப்பில் இருந்தப்படியே எக்செல் தொகுப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சில நேரங்களில் வேர்ட் தொகுப்பில் ஒரு சில கணக்குளை போட வேண்டி வரும். அது போன்ற நிலை வரும் போது பெரும் சிரமப்படுவோம். சாதாரண கணக்கென்றால் பராவயில்லை. மிகப்பெரிய அளவிளான கணக்குளை செய்ய வேண்டுமெனில் என்ன செய்வது எக்செல் உதவியை தான் நாட வேண்டும். இதற்கு பதிலாக எக்செல் சீட்டையே வேர்ட் தொகுப்பில் பயன்படுத்தினால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.
வேர்ட் 2010 தொகுப்பில் எக்செல் சீட்டை இணைக்க முதலில் வேர்ட் 2010 தொகுப்பை ஒப்பன் செய்யவும். அடுத்ததாக Insert என்னும் டேப்பை தேர்வு செய்யவும். அதில் டேபிள் என்னும் தேர்வை தேர்வு செய்து, அதில் Excelspreadsheet என்பதை தேர்வு செய்யவும்.
தற்போது எக்செல் சீட்டானது வேர்ட் டாக்குமெண்டில் இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எளிமையாக எக்செல் பணிகளையும் வேர்ட் தொகுப்பிலேயே செய்ய முடியும். எக்செல் தொகுப்பை இணைத்தவுடன் எக்செல் தொகுப்பிற்கு உண்டான டூல்பாரையும் காண முடியும்.
இந்த டூல்பாரின் உதவியுடன் எக்செல் பணிகளை மிக விரைவாக செய்ய முடியும். வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இந்த வசதியானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அனைத்து கணணிகளுக்கும் அவசியம் தேவையான மென்பொருள்
இன்றைய உலகில் கணணி உபயோகிக்காத இடமே இல்லை. நமது கணணியின் செயல்பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நிறுவி இருப்போம். இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நிறுவுவது அவசியமாகிறது.
நாம் கணணியில் வேலை செய்து கொண்டு இருப்போம். திடீரென ஏதோ ஒரு முக்கியமான வேலையாக அல்லது ஞாபகமறதியாலோ நம் கணணியை அணைக்காமல் சென்று விடும். நம் வீட்டுக்கு போன பிறகு தான் ஞாபகம் வரும். அந்த நேரங்களில் நம் கணணியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.
அந்த சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள நேர அளவை பொருத்து உங்கள் கணணி தானாகவே Shutdown செய்யப்படும். இந்த மென்பொருள் மூலம் Automatic Restart செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த மென்பொருளில் Auto Shutdown, Auto Restart, Auto Logoff, Auto Hibernate ஆகிய வசதிகள் அடங்கி உள்ளது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
இதில் உங்களுக்கு தேவையான அளவு நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் தேர்வு செய்தால் ஒரு நாளைக்கு தான் தேர்வு செய்ய முடியும். வாரம் முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆகவேண்டும் என நினைத்தால் கீழே உள்ள Every week on என்பதில் க்ளிக் செய்து இதில் உள்ள நாட்களை தேர்வு செய்து கொண்டு நேரத்தையும் தேர்வு செய்து கொள்ளவும்.
கீழே உள்ள பகுதியில் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் குறிப்பிட்ட வேலைக்கு குறிப்பிட்ட Shortcut key செட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இதை செட் செய்ய Shorcuts tab க்ளிக் செய்து உங்கள் கீபோர்டில் ctrl அழுத்தி உங்களுக்கு வேண்டிய எழுத்தை அழுத்தவும். இனி நாம் நம் கணணியை அணைக்காமல் சென்றாலும் கவலை பட வேண்டியதில்லை. நம் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். 


நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய
நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.
குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.இதற்கு
1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2. இப்போது www.spypig.com  இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.
3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள். 
4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.
5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள். 
நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

ஸ்மார்ட் போனின் மூலம் மரபணு தொகுப்பை கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்
பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய மென்பொருளின் மூலம் மக்கள் தங்களது ஸ்மார்ட் போனில் அவர்களது மரபணு தொகுப்பு முழு நிலையை கண்டறிய முடியும்.
இந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிரெஞ்சு சட்டப்படி மரபணு நிலை குறித்த ஆய்வுக்கு கட்டுப்பாடு உள்ளது. மரபணு தொகுப்பு நிலையை கண்டறியும் மென்பொருளை மேற்கு பிரான்சின் போர்டாக்சின் 4 விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த மென்பொருள் மூலம் டி.என்.ஏ சோதனை தகவல்களை பெற முடியும்.
உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாய காரணிகளை கண்டறிய புதிய மென்பொருள் முறை உதவும். குறிப்பாக பாரம்பரிய குறைபாடு காரணமாக ஏற்படும் மார்பக புற்றுநோய் நிலையை முன்கூட்டியே அறியலாம். மரபணு தொகுப்பு நிலை குறித்த மென்பொருள் உருவாக்க திட்ட நிறுவனராக பாட்ரிக் மெரேல் உள்ளார்.
இவரும், இவரது சக நிபுணர்களும் கலிபோர்னியாவில் போர்ட்டபிள் ஜீனோ மிக்ஸ் நிறுவனத்தை துவக்கியுள்ளனர். பிரான்சில் மரபணு வரிசை நிலையை மருத்துவ காரணங்களுக்காக மட்டும் ஆய்வு செய்ய மருத்துவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இது குறித்து பிரான்ஸ் தேசிய முறை கவுன்சில் உறுப்பினர் பாட்ரிக் கவுட்ரே கூறுகையில்,"குறிப்பிட்ட தொழில்நுட்பம் மக்களிடம் தேவையற்ற எச்சரிக்கையை ஏற்படுத்தும்" என்றார்.
மேலும் டி.என்.ஏ வில் பெறப்பட்ட விவரங்கள் எப்போதும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் என கருத முடியாது. மருத்துவ செயல்பாடுகளை இது கட்டுப்படுத்துவதாகவும் உள்ளது என அவர் எச்சரித்தார்

பழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்
இரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும்.
ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை? பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.

ஆனால் முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருப்பின் பழுதடைந்த சிடியிலிருந்து தகவல்களை ஒரளவாக நல்ல நிலையில் எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதைப்போல பழுதான சிடியிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுக்கும் இலவச மென்பொருள் தான் Get My videos Back . இந்த மென்பொருள் சிறப்பான முறையில் பெரும்பாலான தகவல்களை மீட்டுத்தருகிறது. (Recovering data) இதன் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை பழுதானவற்றிலிருந்து கணிணிக்கு சேமித்துக் கொள்ளலாம்.

Source என்பதில் பழுதான சிடியுள்ள இடத்தையும் Target என்பதில் எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் தேர்வு செய்து Open start என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். தகவல்களை மீட்டெடுக்கும் போது அதன் காப்பி செய்யும் செயல்பாட்டை நமக்கு காட்டுகிறது.

இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற சுதந்திர மென்பொருளாகும் (Open source). Avi, mkv, mp3 போன்ற முக்கிய வீடியோ வகைகளை இந்த மென்பொருள் ஆதரிக்கின்றது.
தரவிறக்கச்சுட்டி : Download Get My Videos Back

தொடர்புடைய பதிவுகள் : 1.பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்
2.My computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி?

பேஸ்புக், இணைய தளங்களின் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்!
இதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன.

இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட் கீகள். 

Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க

Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க

Ctrl + U – அடிக்கோடிட

Ctrl + L– எச்.டி.எம்.எல். இயக்கத்தில் மட்டும் பிளாக் கொட்டேஷன் அமைக்க

Ctrl + Z – இறுதியாக அமைத்ததை நீக்க

Ctrl + Y – இறுதியாக நீக்கியதைப் பெற

Ctrl + Shift + A – ஹைப்பர் லிங்க் இடைச் செருக

Ctrl + Shift + P– போஸ்ட் முன் தோற்றம் பார்க்க

Ctrl + D – ட்ராப்ட் ஆக சேவ் செய்திட

Ctrl + P– போஸ்ட் பப்ளிஷ் செய்திட

Ctrl + S – ஆட்டோ சேவ் செய்திட

பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகள்: 

Alt+1 – ஹோம் பேஜ் கிடைக்க

Alt+2 – உங்களுடைய புரபைல் கிடைக்க

Alt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்

Alt+4 – இன்பாக்ஸ் (மெசேஜ்)

Alt+5 – அறிவிப்புகள் (Notifications)

Alt+6 – மை அக்கவுண்ட்

Alt+7 – பிரைவசி செட் செய்வது

Alt+8 – பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்

Alt+9 – Terms and Conditions தரும் பக்கம் Alt+0 – உதவி மையம்

யு-ட்யூப் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்-

Spacebar – வீடியோ ஒன்றை இயக்க, தற்காலிகமாக நிறுத்த

Left Arrow – ரீவைண்ட் செய்திட

Right Arrow – இயக்கிய முன் பக்கம் செல்ல

Up Arrow – ஒலி அளவை அதிகரிக்க

Down Arrow – ஒலி அளவைக் குறைக்க

F key – முழுத் திரையில் காண

Esc key – முழுத்திரையிலிருந்து விலக

திறமையானவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனச் சரித்திரத்தில், இந்த 2011 ஆம் ஆண்டில், மிக அதிகமான எண்ணிக்கையில் திறமையானவர்களை வேலைக்கு எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந் நிறுவனத்தின், பொறியியல் மற்றும் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டிஸ், தன்னுடைய வலைமனைப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்த ஆள் தேடல், பன்னாட்டளவில் நடைபெற இருக்கிறது. பேஸ்புக், ட்விட்டர், ஸிங்கா மற்றும் குரூப் ஆன் போன்ற நிறுவனங்கள், கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக, தங்களைத் தயார் செய்து கொண்டிருப் பதால், அவற்றிற்குச் சரியான பதிலடி தர, கூகுள் தன்னைத் தயார் செய்திடும் முயற்சியே, இந்த புதிய ஆட்களை அதிக எண்ணிக்கையில் எடுக்கும் முடிவாகும். சென்ற 2010 ஆம் ஆண்டு வரை, கூகுள் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் எண்ணிக்கை 24,000 ஆக இருந்தது.


 மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்


பெருகிவரும் சோசியல் நெட்வொர்க்-ன் வளர்ச்சியில் ஒவ்வொரு நிறுவனமும் சலுகையை வாரி வழங்கி வருகின்றது. அந்த வகையில் இன்று புதிதாக வளர்ந்து வரும் சோசியல் நெட்வொர்க்கான Mobiluck என்பதன் மூலம் இருக்கும் இடத்துடன் தகவல் பரிமாறிக்கொள்ளும் வசதி வந்துள்ளது.

நண்பர்களுடன் டீக்கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கும் போது, நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நண்பர்களை அழைக்க வேண்டாம் அவர்களும் இந்த சோசியல் நெட்வொர்க்-ல் பயனாளராக இருந்தால் அவருக்கு உங்க நண்பர் கந்தசாமி இந்த டீக்கடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார், டீக்கடை 1 கி.மீ தொலைவில் இருக்கிறது என்ற செய்தியை பகிர்ந்துகொள்ள உதவுகிறது இந்த சோசியல் நெட்வொர்க்.

நம்முடன் இந்த சோசியல் நெட்வொர்க்-ல் உள்ள நண்பர்கள் ஒவ்வொருவரும் தற்போது எங்கே இருக்கின்றனர் என்ற தகவலை இலவசமாகவே கொடுக்கிறது. இந்ததளத்திற்கு சென்று இலவசமாக நமக்கென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொள்ள வேண்டும். மொபைல்-க்கு என்று சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த சோசியல் நெட்வொர்க்-ல் 200 வகையான மொபைல் மாடல்களுக்கு துணை செய்கிறது.
ஜீடாக் முதல் யாகூ, ஸ்கைப், MSN போன்ற அனைத்து சாட் ரூம் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கம்ப்யூட்டருக்குப் புதியவரா? ஆபரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது?


டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.
கம்ப்யூட்டரின் உயிர்
நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன?
உலோகங்களாலும், பிளாஸ்டிக்குகளாலும் ஆன உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, “டிவி’ போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவ மைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை (Instruction) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது (Execute) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.
குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.
நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன வேலைகளைச் செய்கிறது?
கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.
1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை
கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக் களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்
எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:
1) ஒரு பயனாளர் – ஒரு பணி (Single User Single task)
2) ஒரு பயனாளர் – பல பணி (Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி (Multy User Multi task)
ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அதுவும் ஒரு பணி யினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும்.
ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர் / பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.

கர்சர் முனையில் உலகக் கோப்பை


உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான போட்டிகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள், அலுவலக வேலைகள், ரேஷன் கடை பொருள் வாங்குதல் என அனைத்தையும் ஒத்திபோட்டுவிட்டு, “டிவி’ முன்னரும், முடிந்தால் கிரிக்கெட் நடக்கும் ஸ்டேடியத்தில், மனைவியை ஏமாற்றி வாங்கிய கள்ள மார்க்கெட் டிக்கெட்டில் கிரிக்கெட் பார்க்கச் செல்ல மக்கள் தயங்க மாட்டார்கள். 13 நகரங்களில், 14 நாடுகள் பங்கு பெறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் 10 நகரங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் இவை நடத்தப் படுகின்றன. பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 02 வரை இந்த போட்டிகள் நடைபெறு கின்றன.
இந்த போட்டிகளைத் தொடர்ந்தோ அல்லது குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் காணவேண்டும் என்றால் என்ன செய்யலாம்? நிகழ்ச்சி நிரலைத் தேடி அறிவது எப்படி?
இதற்கெனவே அருமையான ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனுடன் தளம் ஒன்றுhttp://www.cricbuzz.com/cricketschedule/series/228/iccworldcup2011 என்ற முகவரியில் இயங்குகிறது.
இந்த தளத்திற்குச் சென்றால், உடன் கிரிக்கெட் மைதானம் போல ஓவல் வடிவில் திரை காட்டப்படுகிறது. சுற்றிலும் டேப்கள் அமைக்கப்பட்டுள்ளன. பங்கு பெறும் நாடுகள், நடைபெறும் நகரங்கள், நாட்கள், அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்கள், குவார்ட்டர், செமி பைனல் மேட்ச்கள் என அனைத்திற்கும் டேப்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், உடன் டேப்பில் குறிப்பிட்டது சார்பான அனைத்து தகவல்களும் தரப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, இந்தியா என்ற டேப்பில் கர்சர் செல்கையில், திரையின் நடுவே, இந்தியா எந்த நாட்டுக் குழுவினை எதிர்த்து, என்று, எங்கே விளையாட்டுக்களில் பங்கேற்கிறது என்ற விபரம் காட்டப்படும். அதே போல, குறிப்பிட்ட நாளுக்கான டேப்பில் கர்சர் சென்றால், அந்த நாளில் நடைபெறும் போட்டிகள் சார்பான தகவல்கள் தரப்படுகின்றன. போட்டிகள் நடைபெறும் நகரம், ஸ்டேடியத்தின் பெயர் கொண்ட டேப்பில் கர்சர் செல்கையில், அந்த ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்ற போட்டிகள், கலந்து கொள்ளும் குழுக்கள், நாட்கள் பட்டியல் காட்டப்படுகின்றன. அனைத்தும் மிக அழகாக, வேகமாகக் கிடைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் காலத்தில் நிச்சயமாக இந்த தளத்தில் தகவல்கள் உடனடியாக அப்டேட் செய்யப்படும். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, எப்படி எல்லாம் ஒரு நிகழ்வைக் காட்டலாம் என்று அறியவிரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல தளம்.

வந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி


லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெங்களூருவில் இயங்கும் மைக்ரோ ஸ்டார் இண்டர் நேஷனல் (MSIMicro Star International) நிறுவனம், தன் முதல் டேப்ளட் பிசியை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. MSI WindPad 100W Tablet PC என அழைக்கப்படும் இந்த பட்டய கம்ப்யூட்டர் இன்டெல் மொபைல் ப்ராசசரில் இயங்குகிறது. 10.1 அங்குல மல்ட்டி பாய்ண்ட் டச் ஸ்கிரீன், இரண்டு வீடியோ கேமராக்கள், ஜி-சென்ஸார், ஏ.எல்.எஸ். லைட் சென்சார் என நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக திறன் தரும் பேட்டரி இதில் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் இன்டெல் வடிவமைப்பில் இந்த அளவிற்கு பேட்டரி திறன் கொண்டது இதுவே முதல் மொபைல் கம்ப்யூட்டராகும்.
இந்த பட்டய கம்ப்யூட்டரின் பரிமாணம் 274x173x18.5 மிமீ. எடை பேட்டரியுடன் 800 கிராம். ஒரு எஸ்.டி. கார்ட் ரீடர், யு.எஸ்.பி. 2 ஸ்லாட், மினி எச்.டி.எம்.ஐ. போர்ட் ஆகியன இருப்பதால், வழக்கமான கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மல்ட்டி மீடியா வசதிகளையும் இதில் பெறலாம். எடை 800 கிராம் இருப்பதால், தங்களுடைய டேட்டா மையத்தைத் தங்களுடனேயே தூக்கிச் செல்ல விரும்பும் இளைஞர் களுக்கு உகந்ததாக இது உள்ளது.
இரண்டு கேமராக்கள் இருப்பதனால், இயக்குபவர் தன் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம், நண்பர்களுடன் தொடர்ந்து நேரடியாகத் தொடர்பில் இருக்கலாம். இன்னொரு கேமரா கான்பரன்ஸ் வசதிக்கான படங்கள் மற்றும் வீடியோக்களைத் தயார் செய்திடலாம்.
அறிமுகமாக, தற்போது இந்த பட்டய கம்ப்யூட்டர் மும்பையில் உள்ள 12 இ-ஸோன் விற்பனை மையங்களில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இந்திய நகரங்கள் அனைத்திலும் விற்பனை செய்யப்படும் என இந்நிறுவன பொது மேலாளர் எரிக் குயோ தெரிவித்துள்ளார்.
இதன் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
1.WindTouch UI: இந்த கம்ப்யூட்டரில், வழக்கமான இன்டர்பேஸ் இல்லாமல், எம்.எஸ்.ஐ. நிறுவனம் தயாரித்த WindTouch என்னும் இடைமுகம் தரப்பட்டுள்ளது. இதில் கம்ப்யூட்டரில் வேலை, பொழுது போக்கு, கருவிகள் மற்றும் நெட்வொர்க் என்று நான்கு பிரிவுகள் தரப்பட்டுள்ளன.
2.EasyFace: முகம் அறிந்து இயக்கம். இந்த Face Recognition Software எம்.எஸ்.ஐ. நிறுவனத்தின் தயாரிப்பு. பட்டய பிசியில் தரப்பட்டுள்ள 1.3 எம்பி வெப்கேம் சாதனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இத்துடன் பயோமெட்ரிக் தொழில் நுட்பம், லாக் இன் பாஸ்வேர்ட் பாதுகாப்பு ஆகியவையும் உண்டு.
3. Taskbar magnifier: டாஸ்க் பாரினைச் சற்றுப் பெரிதாக்கிக் காட்டுவதன் மூலம், விரல்களால் தொட்டு இயக்கும் வசதி எளிதாகக் கிடைக்கிறது.
4. Photo Management Software: விரல்களினால் தொட்டு, புகைப்படங் களைப் பெரிதாக்கவும், சுழற்றவும் முடிகிறது. இதன் மூலம் எளிதாக நம் புகைப் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
5. பதிந்தே கிடைப்பது: பல புரோகிராம்கள் இதில் பதியப்பட்டு கிடைக்கின்றன. Microsoft Office Starter 2010 தொகுப்பு கிடைக்கிறது. இதில் டேப்ளட் பிசிக்களுக்கான வேர்ட் மற்றும் எக்ஸெல் 2010 உள்ளன.எனவே அலுவலக வேலைகளை எங்கும் எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம். இத்துடன், அடோப் ரீடர், அடோப் பிளாஷ் பிளேயர் தரப்படுகிறது. இதனால் மல்ட்டிமீடியா அனுபவம் எளிதாகிறது.
6. ஹார்ட்வேர் சிறப்புகள்: இதில் மிகக்குறைந்த மின் சக்தியில் இயங்கும் இன்டெல் மொபைல் ப்ராசசர் (Intel Atom Z530 processor) இயங்குகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் Windows 7 Home Premium. 2 ஜிபி டி.டி.ஆர்.2 மெமரி கிடைக்கிறது. 32 ஜிபி சாலிட் ஸ்டேட் ட்ரைவ் , இரண்டு யு.எஸ்.பி. போர்ட் உள்ளன. இவற்றுடன் இரண்டு கேமராக்கள் இதன் பயன்பாட்டினை இன்னும் சிறப்பாக மாற்றுகின்றன.
இதன் விலை ரூ.22,000 என்ற அளவில் இருக்கலாம். தொடக்கத்தில் ரூ.34,000 என்ற அளவில் திட்டமிடப்பட்டது.
இந்த டேப்ளட் பிசியைத் தயாரித்த, எம்.எஸ்.ஐ. என அழைக்கப்படும் மைக்ரோ ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம், கம்ப்யூட்டருக்கான மெயின் போர்ட், கிராபிக் கார்ட்ஸ் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் நிறுவனமாகும். கிராபிக் கார்ட் தயாரிப்பில் உலக அளவில் பெயர் பெற்றது.மெயின் போர்டு தயாரிப்பில் முதல் மூன்று நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது.

எக்ஸெல் டிப்ஸ்-எக்ஸெல் வரிசைப்படுத்துதல்


எக்ஸெல் வரிசைப்படுத்துதல்
எக்ஸெல் ஒர்க்புக்கில் டேட்டாவினை அமைத்த பின்னர், செல்களில் உள்ள டேட்டாவினை வரிசைப்படுத்தலாம். அதிக மதிப்பிலிருந்தோ, அல்லது குறைந்த மதிப்பிலிருந்தோ, நம் விருப்பப் படி வரிசைப்படுத்தி வகைப்படுத்தலாம். இதற்கு இத்தொகுப்பில் உள்ள Sort கட்டளையை எளிதாகப் பயன்படுத்து கிறோம். ஆனால் அனைத்து டேட்டாவும் வரிசைப்படுத்தும் செயலுக்கு உட்படாது. எடுத்துக் காட்டாக, வார நாட்களை (Sunday, Monday, Tuesday etc.) எப்படி வரிசைப்படுத்துவது? வரிசைப்படுத்தினால், Friday, Monday, Saturday, Sunday, Thursday, Tuesday, Wednesday என்றல்லவா அமையும். இதே போல மாதங்களின் பெயர்களை (January, February,March etc.) வரிசைப்படுத் தினால், நமக்கு ஜனவரி, பிப்ரவரி என்று கிடைக்காது. அப்படியானால் இவற்றை எப்படித்தான் வரிசைப்படுத்துவது. இங்குதான் நமக்கு உதவ custom sort என்ற வழி தரப்பட்டுள்ளது.
மாதங்களின் பெயர்களை A2 என்ற செல் முதல் A13 செல் வரை என்டர் செய்திருக்கிறீர்கள். இவற்றை சரியான வரிசையில் அமைக்க, முதலில் இந்த செல்களைத் தேர்ந்தெடுங்கள். அதாவது A2:A13. அடுத்து Data மெனுவிலிருந்து Sort என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன், Sort டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Sort By கட்டளை மாதங்களை அகராதி வரிசைப்படி காட்டும். இதனைத் தவிர்க்க, டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள, Options பட்டனைக் கிளிக் செய்திடவும்.
இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், First Key Sort Order கண்ட்ரோல் Month எனக் காட்டும். இப்போது, கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியை அழுத்தவும். இங்கு custom sort ஆப்ஷன்ஸ் தரப்படும். இதில், கடைசியாக உள்ள January, February, March என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக் கவும். இதில் நாம் சிறிய மற்றும் பெரிய எழுத்துக்களில் மாதப் பெயர்களை அமைத்திருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. இருப்பினும், நீங்கள் விருப்பப்பட்டால், பெரிய, சிறிய எழுத்துப்படியும் வகைப்படுத்தலாம். இதற்கும் ஓர் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. மேலே கூறியபடி, ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், இருமுறை ஓகே, கிளிக் செய்து வெளியேறவும். எக்ஸெல் நீங்கள் விரும்பியபடி, மாதங்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டும்.
எக்ஸெல் 2007 மற்றும் எக்ஸெல் 2010 தொகுப்புகளும் இந்த வசதிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சிறிய அளவில் சற்று மாறுதலாக இதனைக் கையாள வேண்டும்.
முதலில் Sort & Filter குரூப்பில் Sort ஆப்ஷனைக் கிளிக் செய்திடவும். இதில் A to Z அல்லது Z to A ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
இப்போது கிடைக்கும் Sort டயலாக் பாக்ஸில் Order control பட்டியலைத் திறக்கவும். இப்போது நீங்கள் விரும்பும் வகையிலான, custom sort ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். ஆப்ஷனைப் பயன்படுத்துகையில், அந்த பட்டியலில் அனைத்து டேட்டாவும் இருக்க வேண்டும் என்பதில்லை. எடுத்துக்காட்டாக, டேட்டாவில் வாரத்தின் ஏழு நாட்களும் அல்லது மாதத்தின் 12 பெயர்களும் அமைக்கப் பட்டிருக்கத் தேவையில்லை. இருக்கின்ற நாட்களின் பெயர்களை அல்லது மாதங்களின் பெயர்களை, நாம் தேர்ந்தெடுத்த ஆப்ஷன்படி வரிசைப் படுத்தித் தரும்.
எடிட்டிங் ரத்து செய்திட
ஒர்க்புக் ஒன்றில் செல்களில் சில தகவல்களை நிரப்பிக் கொண்டிருக்கை யில், அடடா, இது வேறு செல் ஆயிற்றே, வெட்டியாக இதில் டேட்டாவினை நிரப்பிவிட்டோமே என்று கவலைப் படுகிறீர்களா? உடனே, டேட்டா முழுவதையும் அதிலிருந்து நீக்கி ரத்து செய்திட வேண்டும் என எண்ணுகிறீர்களா?
இதற்கு இரு வழிகள் உள்ளன. முதல் வழி, எஸ்கேப் (Esc) கீயை அழுத்துவது. அடுத்ததாக பார்முலா பாரில் இடது பக்கம் உள்ள சிகப்பு எக்ஸில் (X) கிளிக் செய்வது. எதனை மேற்கொண்டாலும், எக்ஸெல் உங்கள் எண்ணத்தினைப் புரிந்து கொண்டு, இடப்பட்ட டேட்டாவினை நீக்கி, நீங்கள் அதில் டைப் செய்திடும் முன் செல் எப்படி இருந்ததோ, அந்த நிலைக்குக் கொண்டு வருகிறது.
ஆனால், நீங்கள் ஒரு தவறு செய்து, என்டர் அழுத்துவதாக வைத்துக் கொள்வோம். உடனே எக்ஸெல் நீங்கள் என்னவெல்லாம் டைப் செய்தீர்களோ, அவற்றுடன் அந்த செல்லை அமைக்கிறது. இதனை ரத்து செய்திட, எக்ஸெல் தொகுப்பு தரும் ரத்து (Undo) வசதியைப் பயன்படுத்த வேண்டும். டூல்பாரில் கிளிக் செய்திட வேண்டும்; அல்லது Ctrl+Z கீகளை ஒருசேர அழுத்த வேண்டும்.
எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ
எக்ஸெல் தொகுப்பில் பணியாற்று கையில் என்டர் கீயை அழுத்தினால் அது கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும். ஆனால் என்டர் கீ அழுத்தி அதே செல்லில் நீங்கள் தகவல்களை அமைக்க வேண்டும் என விரும்பினால் என்ன செய்யலாம்? அல்லது அடுத்த இணையான செல்லுக்குச் செல்ல வேண்டும் படி என்டர் கீ அழுத்துவதனை அமைக்க விரும்பினால் என்ன செய்யலாம்? Tools | Options | Edit என வரிசையாகச் சென்று அதில் Move selection after Enter என்று இருக்கும் இடத்தில் உங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் அமைத்துக் கொள்ளலாம்.

  •   
நோக்கியா N8 (Nokia N8) இது தான் நோக்கியா நிறுவனத்தின் தற்போதைய அட்டகாசமான வெளியீடு. கணினியின் அவசியம் கூட இல்லாமல் அனைத்தையும் நம் உள்ளங்கைக்குள் அடக்கிவிடும் ஒரு அறிவியல் அதிசயம். சுமார் 29000 ரூபாய்க்கு விற்கப்படும் இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் (Apple iPhone) - ல் உள்ள வசிதிகளையும் விஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அறிவியல் அதிசயமான இதன் தரத்தில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்துவிட்டு ஆன் செய்யும் போது சரிவர இயங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. பெரிய படைப்பில் சிறிய பிழை ஏற்படுவது சகஜமே , இருப்பினும் சரிவர இயங்க வில்லை எனபது சாதாரண விஷயம் இல்லை.
அனால் நோக்கியா நிறுவனம் கூறும்பொழுது " ஒரு சில நபர்களுக்கே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது, மற்றவர்கள் எந்த குறையும் கூற வில்லை " என்று கூறுகின்றனர்.
என்னதான் அவர்கள் ஆறுதல் கூறினாலும் 29000 ரூபாய்க்கு வாங்கப்படும் ஒரு பொருள் சரியாக இயங்க வில்லை என்றால் மிகவும் கடினமாகத்தான் இருக்கும் நுகர்வோருக்கு, எனவே சரியானவற்றை தெரிவு செய்யவும். 
பேஸ்புக் இணையதலதி தற்போது மிகப்பெரும் புரட்சி செய்துள்ளது. சொல்லவேண்டுமானால் உலகில் தற்போது பேஸ்புக் பற்றி தெரியாதோர் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறலாம். கடந்த ஓரிரு வருடங்களில் தனது பயனாளர்களின் எண்ணிக்கையை ஐம்பது கோடி (500 மில்லியன்) என்று உயர்த்தியுள்ளது.
ஒருகாலத்தில் ஆர்குட் (orkut ) மட்டுமே வாழ்கை என்று வாழ்ந்து வந்த இந்திய இளைஞர் பட்டாளம் முழுவதுமாக பேஸ்புக் இணையதளத்திற்கு மாறிவிட்டது . மேலும் கூகிள் கூட தனக்கு ஏற்பட்ட போட்டியை சமாளிக்க கூகிள் மீ என்ற தயாரிப்பில் இறங்கியுள்ளது. அந்த அளவிற்கு பேஸ்புக் தனது திறமையை நிருபித்துள்ளது. இதற்கு முழு காரணம் பேஸ்புக் வழங்கும் கணக்கில் அடங்கா வசதிகள் தான். குறிப்பாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் இணைய விளையாட்டுகள் (FarmVille, the Causes, the Mafia Wars, the Quiz Planet and Phrases ), மற்றும் அனைத்து நண்பர்களையும் தன் பக்கம் இழுக்க தாமே சிலவற்றை உருவாக்கக்கூடிய பயன்பாடுகள் போன்றவை மக்களை பேஸ்புக் முன்னால் கட்டிப்போட வைத்து விட்டது.
தற்போது இதுவே மக்களுக்கு சில பல தொல்லைகளை வழங்குகிறது.
விளையாட்டு போன்ற அனைத்து பயன்பாடுகளும் பொதுவாக பேஸ்புக் இணையதளத்தால் உருவாக்கப்படுவது அல்ல. இவைகள் சுமார் 5,50 ,000 பயன்பாடுகள் அதாவது சுமார் 70 விழுக்காடு பயனாளர்களால் பயன்படுத்தப்படுவது சுமார் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களால் அதாவது பேஸ்புக் இணையதளத்திற்கு தொடர்பில்லாத முதலாளிகளால் அவர்களது வருமானத்தை பெருக்குவதற்கு உருவாக்கப்படுகிறது. இதை பயனாளிகள் பயன்படுத்தும் போது பயனாளர்களின் தனித்தன்மை வாய்ந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர் திருடப்படுகிறது. இதை அவர்கள் தங்களது வியாரத்தை பெருக்கவும் பல சில விளம்பரங்களை அனுப்புவதற்கும் அவர்கள் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிகிறது. இதனால் தேவையற்ற மின்னஞ்சல்களும் பயனாளர்களின் பெயர்களை அனுமதி இன்றி பிரசுரிப்பதுமாக அவர்களும் வியாபாரத்தை பெருக்கி கொள்கிரார்கள் .
தற்போது "Wall Street Journal " என்ற பத்திரிக்கையில் பேஸ்புக் மற்றும் பொதுப்பயன்பாட்டு இணைய தளங்கள் தனது பயனாளர்களின் பாதுகாப்பில் குறிப்பாக மின்னஞ்சல் முகவரி மற்றும் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில் தாழ்ந்துள்ளன எண்டு கூறியுள்ளது.
மேலும் இந்தியாவின் பேஸ்புக் இணையதள பொறுப்பாளர் திரு. கிருத்திகா ரெட்டி கூறுகையில் "பயனாளர்களின் பயன்பாட்டிற்காக நாங்கள் வடிவங்களிலும் புதிய பயன்பாட்டு ஆராய்ச்சியிலும் இறங்கும்போது ஒருசில சிறிய இழப்புகள் வருவது தவிர்க்க முடியாததாகிறது. இறுப்பினும் நாங்கள் பயனாளர்களின் நலன் கருதி சில செயற்பாட்டிற்கு தடை விதித்துள்ளோம்." என்றார்.
என்ன கூறினாலும் பேஸ்புக் இணையதளம் தனது பயனாளிகளுக்கு என்ன சிறப்பு வழங்கினாலும் சிறப்பான பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்பது பயனார்களின் குமுறலாக உள்ளது
எது என்னவோ நாம் பேஸ்புக் இணையதளத்தை உபயோகிக்கும் போது சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விண்டோசில் விரும்பிய எழுத்துருவை கொண்டு வருவதற்கு

கணணியில் உள்ள எழுத்துக்களின்  எழுத்துரு, அளவு, வண்ணம் ஆகியவற்றை உங்களது விருப்பத்திற்கு ஏற்ற படி மாற்றிக் கொள்ள முடியும்.
இதற்கு டெக்ஸ்டாப்பின் காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள். அதில் Properties கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நான்காவதாக உள்ள Appearance டேபை கிளிக் செய்து அதில் உள்ள Advanced கிளிக் செய்யுங்கள்.
இதில் Item என்கின்ற விண்டோவில் உங்கள் கணிணியில் உள்ள அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் தேவையானதை தேர்வு செய்து அதன் எழுத்துரு, வண்ணம், அளவு தேர்வு செய்து ஓ,கே.தரவும்.
இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த ஐட்டத்தின் எழுத்துக்களும் வண்ணங்களும் அளவுகளும் மாறி உள்ளதை காணலாம்.

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

கம்யூட்டரில் முக்கிய வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவசர வேலையாக சில நிமிடங்கள் எழுந்து செல்ல வேண்டி வரும். அந்த நிமிடங்களில் யாராவது கம்யூட்டரை ஏதாவது செய்துவிட்டால் பிறகு வருத்தப்பட்டு பிரயோசனமில்லை.
அந்த மாதிரி நேரங்களில் இந்த மென்பொருள் மிகவும் பயன்படும். இதை நாம் நிறுவியதும் நமது டாக்ஸ்பாரில் பூட்டு சிம்பளுடன் அமர்ந்து விடும். அதை கிளிக் செய்தால் கம்யூட்டர் லாக் ஆகி விடும். மீண்டும் நாம் கடவுச்சொல் கொடுத்து தான் ஓப்பன் செய்ய முடியும்.
இதை பதிவிறக்கி உங்கள் கணணியில் நிறுவி அதை ஒப்பன் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். முதலில் உங்கள் கடவுச்சொல்லையும், அதையே மீண்டும் கான்பார்ம் செய்தும் தட்டச்சு செய்து ஓ,கே. கொடுங்கள்.
இப்போது பார்த்தால் உங்கள் டாக்ஸ்பாரில் பூட்டு போன்ற அடையாளத்தை காணலாம். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது பூட்டினை நீ்ங்கள் கர்சரால் டபுள் கிளிக் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அவ்வளவுதான் உங்கள் கம்யூட்டர் லாக் ஆகிவிட்டது.
இனி யாராவது கர்சரால் கிளிக் செய்தால் அவர்களுக்கு கடவுச்சொல் கேட்டு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது நீங்கள் ஏற்கனவே கொடுத்த கடவுச்சொல்லை சரியாக கொடுத்தால் மட்டுமே மீண்டும் விண்டோ ஓபன் ஆகும்.

எதையும் விரைவாக செய்ய வழிகாட்டும் இணையம்

எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள். அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செயலை மிகவும் விரைவில் முடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்காக ஒரு இணையதளம் இருக்கிறது. தி பாஸ்டஸ்ட் வே சைட் என்னும் அந்த தளம் ஒவ்வொரு செய‌ல்களையும் விரைவாக செய்வது எப்படி என வழி காட்டுகிறது.
வழிமுறைகளோடு வீடியோ விளக்கமும் இடம்பெறுகிறது. இரண்டே நிமிடங்களில் டி ஷர்ட்டை மடிப்பது எப்படி என பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
எல்லாமே பயனுள்ளவை என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரஸ்யமான தளம். ஏதாவ‌து செயல்க‌ளை விரைந்து முடிக்க‌ வ‌ழி தேவை என்றாலும் இந்த‌ த‌ள‌த்தில் ச‌ந்தேக‌ம் கேட்க‌லாம்.


ஆளுக்கொரு டெஸ்க்டாப் விண்டோ வைத்துக்கொள்ள

நமது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை அனைவரும் பயன்படுத்துவோம். ஒரே கம்ப்யூட்டரில் அவரவர் விருப்பபடி ஆளுக்கு ஒரு டெக்ஸ்டாப் விண்டோ வைத்துக் கொள்ள முடியும்.
நாம் டெக்ஸ்டாப்பில் விருப்பமான ஷார்ட்கட்கள் வைத்திருப்போம். விருப்பமான படங்கள் வைத்திருப்போம். குழந்தைகளுக்கு விருப்பமான படங்கள் வைக்க விரும்பும்.
இந்த மென்பொருளில் ஒரே கம்ப்யூட்டரையே ஆறு பேர் விதவிதமான டெக்ஸ்டாப் கொண்டு உபயோகிக்கலாம். இதை பதிவிறக்கி உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் கீழ்கண்ட படம் வரும்.
இதில் உள்ள கியூப் படத்தை (ஆறாம் எண்ணுக்கு பக்கத்தில்) கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ஆறு விண்டோவினை ஆளுக்கு ஒன்றாக பிரித்துக் கொடுத்து விடுங்கள். அவர்கள் விரும்பிய படத்தை வைத்துக் கொள்ளட்டும்.
Ctrl + உடன் அவர்களுக்கு ஒதுக்கிய எண்ணை தட்டச்சு செய்ய அவரவர் விண்டோக்கள் ஓப்பன் ஆகும். அவரவர் விண்டோக்களில் அவர்களுக்கு தேவையான மென்பொருள் - ஷார்ட்கட்கள் வைத்துக்கொள்ளலாம். அதற்கு கியூப் கிளிக் செய்து வரும் விண்டோவில் உள்ள Utilities கிளிக் செய்ய உங்களுக்கு Manage icons வரும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதில் விண்டோவில் உள்ள அனைத்தும் காண்பிக்கும். நீங்கள் எந்த டெக்ஸ்டாப் எண்ணுக்கு எந்த அப்ளிகேஷன் வேண்டுமோ அந்த கட்டத்தில் டிக் செய்து இறுதியாக அப்ளை செய்துவிடுங்கள். நீங்கள் தேர்வு செய்த விண்டோவில் தேர்வு செய்த அப்ளிகேஷன்கள் மட்டும் இருப்பதை காணலாம். வேண்டிய வடிவங்களிலும் தேர்வினை செய்துகொள்ளலாம்.


பூமியில் நடக்கப் போகும் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிய முடியும்: ஆராய்ச்சித் தகவல்

வெயில், காற்று, மழை, புயல், சூறாவளி, காட்டுத்தீ என இயற்கை சீறும் போது மனிதகுலம் பெரிதாக பாதிக்கப்படுகிறது. இவற்றை தடுக்க முடியாது என்றாலும் தப்பிக்கும் வித்தையை தெரிந்து வைத்திருப்பது நமது தொழில்நுட்பத்தின் சாதனை.
கடல் அலை மட்டத்தில் ஏற்படும் விபரீத மாற்றத்தை வைத்து சுனாமியையும் முன் கூட்டியே உணரக்கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இதில் அடுத்தகட்ட முயற்சி வரப்போகும் நிலநடுக்கத்தை முன்கூட்டி தெரிந்துகொள்வது.
இங்கிலாந்து மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள், லண்டன் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆலன் ஸ்மித், விட்டாலி சிம்யேரெவ் ஆகியோர் தலைமையில் இணைந்து மாஸ்கோவில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து செயல்பாடுகளையும் துவக்கியுள்ளனர்.
"ட்வின் சாட்" என்பது இந்த ஆய்வில் ஈடுபடப் போகிற செயற்கைக்கோள்கள். ஒன்று தொலைக்காட்சி பெட்டி  அளவில் இருக்கும். இன்னொன்று அதையும் விட சிறியது. விண்ணில் செலுத்தப்படும் இந்த இரண்டும் சில நூறு கி.மீ. தொலைவில் பூமியை வட்டமடித்துக் கொண்டே இருக்கும்.
எரிமலையின் செயல்பாடுகள் மற்றும் பூமியில் கணிசமான விபரீத மாற்றங்கள் தெரிந்தால் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு செயற்கைகோளில் இருந்து தகவல் வரும். நில நடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதை 2015 ல் விண்ணில் செலுத்த உள்ளனர்.
கணணியில் மவுஸ் ஏன் பயன்படுத்துகிறோம்?

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத் தான். கம்ப்யூட்டருடன் நமக்கான தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ் தான்.
சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது.
இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை அழுத்திக் கிளிக் செய்வதனையே ஆங்கிலத்தில் "leftclicking" எனக் கூறுகின்றனர்.
ஏதாவது ஒரு பைல் அல்லது இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றால் மவுஸின் அம்புக் குறி முனையை பைல் பெயர் அல்லது செயல்படுத்தும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று இந்த இடது பட்டனை இருமுறை கிளிக் செய்தால் உடனே பைல் இயக்கத்திற்கு வந்துவிடும்.
இதே போல ஒரு விண்டோவினை மூட, சிறியதாக்க இந்த மவுஸின் முனையை அதற்கான இடத்தில் கொண்டு சென்று அழுத்தினால் போதும். ஒரு முறை கிளிக் செய்து அப்படியே பட்டனை விடாமல் மவுஸை இழுத்தால் நாம் தேர்ந்தெடுத்த பைல் அல்லது டெக்ஸ்ட் அப்படியே இழுபடும்.
அதனை நாம் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று பட்டனை அழுத்துவதிலிருந்து எடுத்துவிட்டால் அந்த பைல் அல்லது டெக்ஸ்ட் விட்ட இடத்தில் அமர்ந்துவிடும். டெக்ஸ்ட் உள்ள டாகுமெண்ட்டில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று எந்த இடத்தில் விடுகிறோமோ அந்த இடத்தில் நீங்கள் டைப் செய்யத் தொடங்கலாம்.
வலது புறத்தில் உள்ள பட்டன் பொதுவாக சிறிய மெனு ஒன்றைக் கொண்டு வர உதவுகிறது. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் படங்களில் மாற்றங்கள் செய்திட அவற்றைத் தேர்ந்தெடுத்தபின் அதில் மவுஸின் கர்சரை வைத்து வலது பட்டனை அழுத்தினால் அதற்கேற்ற மெனு கிடைக்கும்.
அதில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான பிரிவுகள் கிடைக்கும். அதில் எந்த பிரிவைச் செயல்படுத்த வேண்டுமோ அதில் கர்சரை வைத்து இடது கிளிக் செய்தால் போதும். இத்தகைய மெனுக்களில் நாம் செயல்படுத்த சில பொதுவான கட்டளைகள் கிடைக்கும். அவை:
Open: டபுள் கிளிக் செய்து செயல்படுத்தும் பணியினை இந்த பிரிவில் கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்.
Cut: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது படத்தை நீக்குவதற்கு.
Copy: இதில் கிளிக் செய்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள் காப்பி ஆகும். பின் அதனை எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம்.
Create Shortcut: குறிப்பிட்ட புரோகிராம் அல்லது பைலுக்கான குறுக்கு வழி ஒன்றை அமைத்திட இது உதவும். இதனை உருவாக்கிவிட்டால் அப்போது கிடைக்கும் ஐகானில் கிளிக் செய்து அதற்கான புரோகிராமை இயக்கலாம். பைலை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.
Delete: நிரந்தரமாக நீக்கிட.
Rename: பைல் அல்லது புரோகிராமிற்குப் புதிய பெயர் தர.
Properties: பைல் அல்லது புரோகிராம் குறித்த அதன் தன்மைகளை அறிய இது உதவுகிறது.

மவுஸின் நடுவே சிறிய உருளை ஒன்று இருப்பதைப் பார்ப்பீர்கள். டெக்ஸ்ட்டில் நாம் மேலும் கீழும் செல்ல இது உதவும். என்டர் அழுத்தி நாம் கீழே செல்லுவோம் அல்லது ஆரோ கீகளை அழுத்தி மேலே செல்வோம். அந்த வேலையை எளிதாக மேற்கொள்ள இந்த வீல் உதவுகிறது.

இதனுடைய பல சிறப்பு பயன்பாடுகள் குறித்து அந்த அந்த மென்பொருள் தொகுப்புகளுக்கான டிப்ஸ்களில் பார்க்கலாம். வயர் இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக் கூடிய வயர்லெஸ் மவுஸ் வெகு நாட்களாகப் புழக்கத்தில் உள்ளது. அதன் பயன்பாடுகளும் மேலே குறிப்பிட்டபடி தான் இருக்கும். 

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என்பதை கண்டறிய

நமது கணணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள்.
எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான். உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க European Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test file என்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது.
இதற்கு முதலில் உங்கள் கணணியில் notepad (நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள். பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*  காப்பி செய்த பின் உங்கள் notepad ல் File -> Save AS கொடுங்கள்.
Save செய்யும் போது .com என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள். பின் அந்த கோப்பை இயக்கினாலோ அல்லது save செய்யும் போதோ உங்கள் ஆண்டிவைரஸ் இந்த கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்து நீக்க வேண்டும்.
  1. இல்லாவிடில் உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம். உடனே உங்கள் ஆண்டிவைரஸை தூக்கி விட்டு வேறு நிறுவுங்கள்.