விநோத உலகம்


மதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்! ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட்
அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்கள் வெளிப்படையாக ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை.

ஆனால் மதுவுக்கு ஆண்களை விட பெண்களே விரைவில் அடிமையாகின்றனர்.


இதனால் தான் பிரிட்டிஷ் அரசு சகல வயதினருக்குமான பாதுகாப்பான குடி வரையறையை பெண்களுக்கு வாராந்தம் 14 அலகுகளாகவும், ஆண்களுக்கு 21 அலகுகளாகவும் வகுத்துள்ளது.

இளம் பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதனால் அவர்கள் மத்தியில் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆண்களைவிட விரைவில் பெண்கள் மதுவுக்கு அடிமையாவது போலவே மது சம்பந்தமான நோய்களுக்கும் பெண்களே அதிகம் ஆளாகின்றனர்.

நுரையீரலில் மது ஏற்படுத்தும் பாதிப்பு இரு பாலாருக்கும் ஒரே விதத்திலேயே அமைந்துள்ளது. பெண்கள் மதுவுக்கு விரைவில் அடிமையாக முக்கிய காரணம் அவர்களது உடம்பில் நீர்த்தன்மை குறைவாக இருப்பதாகும்.

ஆண்களது உடம்பில் 65 வீதம் நீர்த்தன்மை காணப்படுகின்றது. பெண்களுக்கு இது 55 வீதமாகவே உள்ளது. லண்டன் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் டொக்டர்.மார்ஷா மோர்கன் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்

பாம்பு முட்டையை விழுங்கும் வீடியோ இணைப்பு

நோய்களை குணப்படுத்தும் சுருட்டுப் புகை (படங்கள் இணைப்பு)
புகைப் பிடிக்கும் பழக்கம் உடல் நலத்துக்கு மிகுந்த கேடு பயக்கும் என்பது அநேக வைத்தியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.


குறிப்பாக புற்றுநோய் உட்பட ஏராளமான நோய்களுக்கு புகைப் பிடித்தல் காரணமாகி விடுகின்றது என்கின்றார்கள்.


ஆனால் சுருட்டுப் புகையை உடலுக்குள் செலுத்துகின்றமை மூலம் இந்தோனேசியாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் புற்றுநோய், மதியிறுக்கம் ( Autism or Emphysema) போன்ற பல பயங்கர நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது.


வைத்தியசாலையின் பெயர் Griya Balur clinic. கடந்த 10 வருடங்களில் உலகின் பல பாகங்களில் இருந்தும் 60, 000 பேர் இங்கு சிகிச்சை பெற்று இருக்கின்றனர். 

இவைதானா யேசுநாதரை சிலுவையில் அறையப் பயன்படுத்தப்ப்பட்ட ஆணிகள்?(வீடியோ இணைப்பு)
யேசுநாதரை சிலுவையில் அறைய பயன்படுத்தப்பட்ட ஆணிகளில் இரண்டை எருசலேமில் உள்ள 2000 ஆண்டுகள் பழைமையான மயானம் ஒன்றில் இருந்து மீட்டு எடுத்து உள்ளார் என்று அறிவித்து உள்ளார் உலகப் பிரசித்தி வாய்ந்த ஆய்வாளர்களில் ஒருவரான Simcha Jacobovici.



இந்த அறிவிப்பு வரலாற்று அறிஞர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் இம்மயானத்தில் இருந்து பிரேதப் பெட்டிகள் போன்ற பெட்டிகளை 20 வருடங்களுக்கு முன்னர் மீட்டு இருந்தார்.

இவற்றுக்குள் மனித எலும்புக் கூடுகள் இருந்தன.

இரு பெட்டிகளில் காய்பா என்கிற பெயர் எழுதப்பட்டு இருந்தது.

கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாம் பகுதி புதிய ஏற்பாட்டு.

புதிய ஏற்பாட்டின்படி யேசுநாதரை படுகொலை செய்கின்றமைக்கு முன் நின்று செயல்பட்ட தலைமை யூத குருவின் பெயர் காய்பா.

யேசுவை சிலுவையில் அறையப் பயன்படுத்தி இருந்த ஆணிகளை யூதர்களின் தலைமை மத குருவான காய்பாவின் உடலை அடக்கம் செய்த இப்பெட்டிகளுக்குள் வைத்து இருக்கின்றனர் என்று அடித்துக் கூறுகின்றார் ஆய்வாளர்.

யேசுநாதர் உயிருடன் இருந்தபோது ஏராளமான அற்புதங்களை செய்து இருந்தார்.

யேசுவின் அற்புத சித்திகளை மரணத்தின் பின்னரான வாழ்வில் அடைகின்றமைக்காக காய்பா திட்டமிட்டு இருந்தான் என்றும் இத்திட்டத்துக்கு அமையவே யேசுவை சிலுவையில் அறையப் பயன்படுத்தப்பட்ட ஆணிகள் காய்பாவின் உடலத்துடன் புதைக்கப்பட்டன என்றும் விளக்கம் கொடுக்கின்றார்.

இந்த ஆய்வாளர் விவரண திரைப்படங்களை இயக்குபவர்.

இரு ஆணிகளையும் கண்டுபிடித்தமையை மையப்படுத்தி "The Nails of the Cross" என்கிற பெயரில் தற்போது விவரண திரைப்படம் ஒன்றை எடுத்துக் இயக்குகின்றார்.




இரும்புத் தாடை உடைய மனிதன் (வீடியோ இணைப்பு)
நாங்கள் காட்டுகின்ற இந்த மனிதருக்கு இரும்புத் தாடை இருக்கின்றது போலும்?


ஏனெனில் மிகவும் பாரமான பொருட்களை எல்லாம் தாடையில் வைத்து தாங்குகின்றார் ஒரு தராசு போல.

இவரின் சாகசங்களை பாருங்கள்.

கலியாணத்துக்கு முன் நான்காவது தடவையாக மக்கள் முன் தோன்றிய வில்லியம்ஸ்- கேதே ஜோடி! (வீடியோ இணைப்பு)
பிரிட்டிஸ் இளவரசர் வில்லியம்ஸ் - கோடீஸ்வரி கேதே மிடில்டன் ஆகியோரின் திருமணம் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் இருவரும் ஜோடியாக நான்கு தடவைகள் அந்நாட்டு மக்கள் முன்னிலையில் திருமணத்துக்கு முன் தோன்றினர்.



திருமணத்துக்கு முன் நான்கு தடவைகள் மக்கள் முன் ஜோடியாக தோன்ற வேண்டும் என்பது அந்நாட்டு அரச குடும்ப சம்பிரதாயம்.

நிறைவாக கடந்த சனிக்கிழமை Darwen நகர மக்கள் முன்னிலையில் தோன்றி இருந்தனர்.

இனி மேல் திருமணத்தை தொடர்ந்துதான் மக்கள் முன் தோன்றுவார்கள்.

Darwen நகர மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் வில்லியம்ஸ் - கேதே மிடில்டன் ஜோடியை காண வீதியில் திரண்டு நின்றனர்.

வாழ்த்துக் கூறினர்.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட படங்கள், வீடியோ ஆகியவற்றை இங்கு இணைத்து உள்ளோம்.







இவர் ஒரு பனை மரம் (படங்கள் இணைப்பு)
20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இடையில் உலகிலேயே மிக உயரமானவர் என்கிற பெருமை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த Malee Duangdee என்கிற பெண்ணுக்கு கிடைத்து உள்ளது.

இவருக்கு வயது 19.

உயரம் ஆறு அடியும் பத்து அங்குலமும்.

அதாவது 208. 3 சென்ரி மீற்றர்.

இவருக்கு முன்பு இப்பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் பிறேசிலைச் சேர்ந்த Elisany Silva. வயது 14. உயரம் ஆறு அடியும், ஒன்பது அங்குலமும்.

















வாழைப் பழங்களில் அழகிய கை வண்ணங்கள் (படங்கள் இணைப்பு)
வாழைப் பழம் என்றால் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும்.

ஆனால் யப்பானைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் வாழைப்பழங்களைப் பயன்படுத்தி அருமையான கலை வண்ணங்களை உருவாக்கி உள்ளார்.

இக்கலை வண்ணங்கள்கூட அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன.
























கருந் தேள்களுடன் வாழும் மனிதன் (வீடியோ இணைப்பு)


பயத்திற்கு அஞ்சாத மனிதர்களே இல்லை என்றே சொல்லாலும் ஆனாலும் அதனையும் முறியடிக்க கூடிய மனிதர்களும் இல்லாமல் இல்லை.

ர்வான் எனும் மனிதர் கொடிய கருந் தேள்களுடன் சகஐமாக வாழ்ந்து எல்லோரையும் கிலி பிடிக்க வைத்துள்ளார். இந்தனோசிய தலைநகரான ஐகத்தாவின் பெரும் பூங்கா ஒன்றில் இவ் அரிய சாதனை படைத்துள்ளார்.

சுமார் 2 வாரங்களாக காடுகளில் தேடி மிகவும் கொடிய கரு தேள்களை பெற்றுள்ளார்.

சொல்வதை விட நீங்களும் இக் காணொளியை பாருங்கள் கிலி பிடிப்பது என்னவோ உண்மையே.
என் ஆசை நிறைவேறுமா (வீடியோ இணைப்பு)





மாட்டை அடக்கி பார்த்திருப்பீர்கள் முதலையை அடக்கி பார்த்திருக்கிறீர்களா(வீடியோ இணைப்பு)








உலகிலேயே மிகவும் பருமனுடைய மனிதர்


உலகிலேயே மிகவும் பருமனுடைய மனிதர் இவருடைய பெயர் Patrick D. Deuel இவர் அமெரிக்காவில் உள்ள நெப்ரஸ்க என்ற இடத்தில் வசிக்கிறார்

இவரின் வயது 49 இவரின் இப்போதைய நிறை 486 kg இருக்கிறது இவர் தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.






இயந்திரப்பறவை 
(வீடியோ இணைப்பு)


இந்த பறவை முற்றிலும் மனிதனால் உருவாக்கபட்டது பார்பதற்கு சாதாரண பறவை போலவே காணப்டுகின்றது மனிதனுடைய மற்றுமோர் வளர்ச்சிக்கு எடுத்துகாட்டு




வியக்கவைக்கும் கடல் வாழ் உயிரினங்கள்

கடலுக்கடியில் நாம் இதுவரை காணாத பல அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவ்வகை அரிய உயிரினங்களை புகைப்படமெடுப்பதை சில புகைப்படக் கலைஞர்கள் தங்களது மூச்சாக எண்ணிச் செயற்படுகின்றனர்.

இவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்துக்கள் நிறைந்த கடலடியில் துணிகரமாக இவற்றை மேற்கொள்கின்றனர்.

அத்தகைய கலைஞர் ஒருவரால் ஹவாய் கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களே இவை.