Monday, 21 February 2011

நான் குழந்தைகளைக் கொன்றுவிட்டேன்! மனைவிக்குப் போன் செய்த கணவர்

மனைவியிடமிருந்து பிரிந்து வாழும் கணவர் தனது பிள்ளைகள் இரண்டையும் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு நான் பிள்ளைகளைக் கொன்றுவிட்டேன் என்று தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

தெற்கு லண்டன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டுத் தொகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி தெரிந்து கொண்ட பொலிஸார் அங்கு சென்ற போது 61 வயதான ஜீன் பிரான்ஸிஸ்சே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அவர் இருந்த இடத்திலிருந்து ஒரு சில அடி தூரத்தில் பத்து வயதான மகன் ரோல்ஸ் மற்றும் எட்டு வயதான மகள் ரெஜினா ஆகியோர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.

இருவரும் கோரமான முறையில் பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டிருந்தனர். இந்த இடம் முழுவதுமே பயங்கரமாகக் காணப்பட்டது.

மரணத்துக்கு முன் அந்தப் பாலகர்கள் இருவரும் எந்தளவு வேதனையையும் அச்சத்ததையும் அனுபவித்திருப்பார்கள் என்பதை நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஜீன் பிரான்ஸிஸ்சேயின் மனைவி அன்டோனியட் இரண்டு வருடங்களுக்கு முன் இவரைக் கைவிட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்.

பிள்ளைகளையும் தன்னோடு கூட்டிச் சென்று விட்டார். அன்றிலிருந்து ஜீன் மனமுடைந்தவராகவே காணப்பட்டார் என்று அயலவர்கள் கூறினர்.

பிள்ளைகளின் பராமரிப்பு தொடர்பாக வழக்கொன்றும் உள்ளது. வார இறுதியில் மட்டுமே குழந்தைகளைப் பார்க்க ஜீன்னுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

தனது குடும்ப வாழ்க்கைப் பாதிக்கப்பட்ட நலையிலேயே ஆத்திரமடைந்து இவர் பிள்ளைகளைக் கொன்றுள்ளார்

No comments:

Post a Comment