Monday, 28 February 2011

ஒரிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது



ஒரிசா மாநிலம், புரியிலிருந்து தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட நீலாச்சல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது.
பாத்ராக் என்ற பகுதியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடந்தபோது, அங்கு தண்டவாளத்தில் நின்ற ரோடு ரோலர் வாகனம் மீது ரயில் மோதியது.
இதில், ரயில் என்ஜினும், 10 பெட்டிகளும் தடம் புரண்டு சரிந்தன. ரோடு ரோலர் ஓட்டுநர் படுகாயமடைந்தார். ரயில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்தால், சென்னை- ஹவுரா ரயில் தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment