திருமணத்தின் போது ஆணை விட பெண் சற்று உயரம் குறைந்தவளாகவே இருப்பதை எதிர்பார்ப்பார்கள். இது வழமை. உலகிலே மிக உயரமான பெண்களும் உள்ளனர். இந்த உயரமான பெண்ணுக்கு எங்கு போய் உயரமான மாப்பிள்ளை தேடுவது…
உலகின் மிக உயரமான மொடல் அழகி என்ற கின்னஸ் சாதனைக்குரிய பெண்ணாக Amazon Eve திகழ்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதுடைய Amazon Eve நடிகையுமாவார். இந்த மொடல் அழகி 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவராவார்.
அதேவேளை 210 பவுண் நிறையுடையவர். இந்த மொடல் அழகியிடம் யாரும் சேஷ்டைகள் புரிய முடியாது. ஏனெனில் இவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரங்கனையும் ஆவார். “ எனது குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துப் பெண்களும் உயரமானவர்கள்” என Amazon Eve தெரிவித்துள்ளார். இவரது தாய் 6 அடி ஒரு அங்குலம், தந்தை 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர்களாகும்.
முழுநேரமாக மொடலிங் செய்கிறார். அதேவேளை ஆண்களுக்கு மல்யுத்தம் கற்றுக் கொடுக்கிறார். ஒரு மணித்தியாலத்திற்கு 400 அமெரிக்க டொலர்கள் அறவிடுகிறார். இவர் அணியும் பாதணியின் அளவு 14 ஆகும். இந்த அளவு கொண்ட பாதணிகளை கொள்வனவு செய்வது மிகவும் சிரமம் என Eve தெரிவித்துள்ளார்.
இவரது மொடலிங் படங்கள் 27 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சஞ்சிகைகளின் முன் அட்டையை அலங்கரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment