இவனை வெள்ளைப் பிரம்புடன் பார்க்கின்ற பலர் அது அவனின் விளையாட்டுப் பொருள் எனக் கருதி கவனிக்காமல் சென்று விடுகின்றனர். ஒரு அரிய வகை மரபணுக் கோளாறு காரணமாக பிறக்கும் போதே முழு அளவில் கண்பார்வையற்ற ஒரு குழந்தையாகவே ஒஸ்கார் பிறந்துள்ளான். நடக்க ஆரம்பித்தது முதலே தனது மகன் வெள்ளைப் பிரம்பையும் பாவிக்க ஆரம்பித்து விட்டான் என்று 30 வயதான இவனின் தாய் கேய்ட்ஹியுக்ஸ் வேதனையுடன் கூறுகின்றார். கடைக்குப் போகும் போது இவனைக் கூட்டிச் சென்றால் பான், ஷம்பூ என சகல பொருள்களையும் மோப்பம் பிடித்தே கூறி விடுவான். கடைகளுக்குள் குளிர் சாதனப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கூட மோப்பம் பிடித்தே அறிந்து கொள்கின்றான். சில நேரங்களில் மக்கள் இவனை முட்டி மோதிக் கொண்டு வெள்ளைப் பிரம்பையும் தட்டிவிட்டுச் செல்வதுண்டு. ![]() இதற்குக் காரணம் பார்த்த பார்வையில் இவன் குருடு என்பது தெரியாது. வயதையும் உருவத்தையும் பார்த்தால் கையில் இருப்பதை விளையாட்டுப் பொருள் என்று சிலர் நினைக்கக்கூடும் பிறந்தது முதல் இந்தக் குழந்தையின் பார்வையில் கோளாறு இருப்பதாகப் பெற்றோர்கள் உணர்ந்து கொண்டனர். ஆனால் வைத்தியர்களை நாடிய போது எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர். அண்மையில் தான் இது அரிய வகை ஒரு பிரச்சினை என்று இனம் காணப்பட்டுள்ளது. Lebers Congenital Amaurosis என்று இது இனம் காணப்பட்டுள்ளது. இதைக் குணப்படுத்த முடியுமா? பார்வை திரும்புமா? என்பது பற்றி உறுதியாக வைத்தியர்களால் எதையும் கூற முடியவில்லை. செய்வதறியாது பெற்றோரும் தவித்துப் போய் உள்ளனர். |
Friday, 18 February 2011
பிரம்பின் உதவியோடு நடமாடும் வயது குறைந்த சிறுவன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment