வெஸ்ட் இண்டீசில் நடந்த 2007 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வங்க தேசத்திடம் வீழ்ந்தது. இந்த தோல்வி காரணமாக முதல் சுற்றுடன் வெளியேற நேரிட்டது. இது குறித்து காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ள வங்கதேசத்தின் மொர்டசா கூறியது: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியை வீழ்த்தினோம். அதே தொடரில் தென் ஆப்ரிக்க அணியையும் சாய்த்தோம். இதுபோன்ற சாதனை வெற்றிகளை 2007 ல் எங்களால் செய்ய முடிந்த போது இப்போதும் ஏன் செய்ய முடியாது. இம்முறை சொந்த மண்ணில் மீண்டும் இந்திய அணியை வீழ்த்த தயாராகியுள்ளோம். இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு பைனல் போன்றது. இதனால் இவற்றில் சிறப்பாக செயல்பட்டு, முதலில் காலிறுதிக்கு முன்னேறுவது தான் எங்களது முதல் குறிக்கோள். இது தவிர இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளையும் வீழ்த்த முயற்சிப்போம். குறிப்பிட்ட நாள் எங்களுடையதாக இருந்தால் அன்று எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். காயம் காரணமாக இம்முறை தொடரில் விளையாட முடியாதது வருத்தம் தான். இத்தொடருக்குப் பின் மீண்டும் அணியில் இடம் பெற முயற்சிப்பேன். இவ்வாறு மொர்டசா கூறினார். |
Saturday, 19 February 2011
மீண்டும் இந்தியாவை வீழ்த்துவோம்: மொர்டசா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment