சிங்கம் காட்டு ராஜா. ஏனைய மிருகங்கள் கூட அதைக் கண்டால் சற்று அஞ்சும். ஆனால் கெவின் றிச்சரட்ஸனுக்கு உற்ற நண்பனே தென் ஆபிரிக்கக் காட்டுப்பகுதியில் காணப்படும் இந்த சிங்கங்கள் தான்.

இது தென் ஆபிரிக்காவின் வனவிலங்குப் பூங்காவொன்றில் காணப்படுகின்றது. இவ்வாறான 41 சிங்கங்களுடன் இவர் நெருங்கிப் பழகுகின்றார்.

இதுவரை ஒரு தடவை மட்டுமே ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார். இது இவருக்குக் கிடைத்துள்ள வரம் அல்லது கொடை என்கின்றனர் இவரின் நண்பர்கள்.
ஆனால் 36 வயதான கெவின் கூறும் காரணம் வித்தியாசமானது. சிங்கங்களுடன் பழகுவது எனது திறமையல்ல.

எந்த நேரத்தில் அதன் அருகில் கூட செல்லக்கூடாது, எந்த நேரத்தில் அதை நெருங்கக் கூடாது, எந்த நேரத்தில் அதனோடு விளையாடக்கூடாது என்பனவற்றை மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றேன்.

அதுதான் என்னுடைய திறமை என்கிறார் கெவின். நன்றாக வளர்ந்த ஒரு ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை ஆசையோடு நோக்கும் சமயத்தில் யாரும் அருகில் செல்லக்கூடாது என்று ஒரு குறிப்பைத் தருகின்றார் கெவின்.

இவர் சிறு வயது முதலே மிருகங்களை நேசிப்பவர். இப்போது அதுவே இவருக்குத் தொழிலாகிவிட்டது.

No comments:
Post a Comment