Tuesday, 8 March 2011

பிறந்த நாளில் சதமடித்த டெய்லர்



பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்த நியூசிலாந்தின் றோஸ் டெய்லருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை 28-வது பிறந்த நாளாகும்.சமீப காலங்களாக சரியாக விளையாடாத டெய்லர், இந்த ஆட்டத்தில் அக்தரின் பந்துவீச்சில் இருமுறை (0, 8 ரன்களில்) கொடுத்த கேட்சை நழுவ விட்டார் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல். இதனால் வாழ்வு பெற்ற டெய்லர் 124 பந்துகளில் 7 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் குவித்தார். அக்தர், அப்துல் ரசாக்கின் ஓவர்களில் தலா 3 சிக்சர்களையும், அப்ரிதியின் பந்துவீச்சில் ஒரு சிக்சரையும் டெய்லர் விளாசியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment