Thursday, 24 March 2011

பதினேழு குட்டிகளை ஈன்ற போலந்து நாய்!

போலந்து நாட்டில் கிரேட் டேன் வகையைச் சேர்ந்த நாயொன்று 17 குட்டிகளை ஈன்றுள்ளது. இக்குட்டிகளில் 8 ஆண் குட்டிகள்; 9 பெண் குட்டிகள்.

குட்டிகள் அனைத்தும் தாயைப் போன்று கருப்பு நிறமானவையாகவெ காணப்படுகின்றன.

தாய் நாயானது குட்டிகளைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வருவதாக அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

இதேபோன்று கடந்த மாதம் ஜேர்மனியைச் சேர்ந்த நாயொன்றும் 17 குட்டிகளை ஈன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment