Sunday, 27 March 2011

கனடாவில் மனைவியைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை


கனடாவில் மனைவியை கொலை செய்த இந்தியருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்தியர் பங்கலி என்பவர் கனடாவில் பள்ளி ஆசிரியையான தனது மனைவி மன்ஜித் பங்கலியுடன் வசித்து வந்தார்.
கடந்த 2006ம் ஆண்டில் மன்ஜித் பங்கலியின் உடல் எரிந்த நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டெல்டா ஏரி அருகே கண்டெடுக்கப்பட்டது.
பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் முக்தியர் பங்கலியே கர்ப்பிணியான தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்று உடலை தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முக்தியர் பங்கலிக்கு 15 ஆண்டுகளுக்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.

No comments:

Post a Comment