உலக கிண்ணப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் வீராட்கோலி 787 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 3 வது இடத்தில் உள்ளார். கப்டன் டோனி 5 வது இடத்திலும், ஷேவாக் 7 வது இடத்திலும், தெண்டுல்கர் 11 வது இடத்திலும், காம்பீர் 13 வது இடத்திலும் உள்ளனர். யுவராஜ்சிங் 22 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 886 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 2 வது இடத்தில் உள்ளார். மைக் ஹஸ்சி 4 வது இடத்திலும், சங்ககரா 6 வது இடத்திலும், தில்சான் 8 வது இடத்திலும், கிளார்க் 10 வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சு தரவரிசைப் பட்டியலில் ஜாகீர்கான் 16 வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து கப்டன் வெட்டோரி 719 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். மார்னே மார்க்கல், பினரஸ் 2 வது, 3 வது இடங்களில் உள்ளனர். அவுஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2 வது இடத்திலும் மற்றும் தென் ஆப்பிரிக்கா 3 வது இடத்திலும் உள்ளனர். |
Tuesday, 8 March 2011
ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment