புகுஷிமா டாய் இச்சி அணு மின் நிலையத்தில் பாதிக்கப்பட்ட அணு உலைகளில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சால், 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு வெளியேறுவது தெரிந்த உடன் 30 கி.மீ சுற்றளவில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற ஜப்பான் அரசு உத்தரவிட்டது. ஆனால் வெளியேற இயலாதவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். அவர்கள் தங்கள் வீடுகளின் கதவுகள், ஜன்னல் கதவுகள் ஆகியவற்றை மூடி பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அணு மின் நிலையத்தைச் சுற்றி 30 கி.மீ பரப்பளவில் இருந்த பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ஐந்தரை லட்சம் ரூபாயை அணு மின் நிலையத்தை இயக்கி வரும் "டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி" தற்காலிக இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டெப்கோ தலைவர் மசாடாகா ஷிமிஷு கூறுகையில்,"ஆட் குறைப்பு மற்றும் வெளிநாட்டுத் திட்டங்கள் குறைக்கப்பட்டு, அவற்றின் மூலம் சேமிக்கப்படும் பணத்தில் இழப்பீடு வழங்கப்படும். இழப்பீடு வழங்குவதில் பின்வாங்க மாட்டோம்" என்று தெரிவித்தார். |
Friday, 15 April 2011
50 ஆயிரம் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க ஜப்பான் நிறுவனத்திற்கு உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment