Thursday, 28 April 2011

கடாபியை கொலை செய்யவே நேட்டோ படை முயற்சிக்கிறது: ரஷ்ய பிரதமர் குற்றச்சாட்டு



லிபிய அதிபர் கடாபியை கொலை செய்யவே அவரது அரண்மனை மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள அரண்மனையில் கடாபி தங்கியுள்ளார். 2 நாட்களுக்கு முன் இந்த கட்டிடத்தின் மீது நேட்டோ படை விமான தாக்குதல் நடத்தியது. அதில் கட்டிடத்தின் ஒரு பகுதி பலமாக சேதமடைந்தது.
இந்நிலையில் டென்மார்க் சென்றுள்ள ரஷ்ய பிரதமர் புதின் இது பற்றி கூறியதாவது: லிபியாவில் நடக்கும் உள்நாட்டு கலவரத்தால் தடை செய்யப்பட்ட பகுதியில் விமானம் பறக்க கூடாது என ஐ.நா உத்தரவை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் ஒவ்வொரு இரவும் கடாபி தங்கியிருக்கும் கட்டிடம் மீது நேட்டோ படை விமான தாக்குதல் நடத்துகிறது. ஏனெனில் கடாபியை கொலை செய்யவே நேட்டோ முயற்சிக்கிறது.
இல்லையெனில் கடாபி தங்கியிருக்கும் கட்டிடம் மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும். அதன் உள்நோக்கம் கடாபியை கொல்ல வேண்டும் என்பதே என்று புதின் தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நேட்டோ படை கமாண்டர் சார்லஸ் பவுச்சர்டு கூறுகையில்,"கடாபி அரண்மனையில் இருக்கும் ராணுவ வீரர்களை நோக்கியே தாக்குதல் நடத்துகிறோம். கடாபியை குறிவைத்து அல்ல" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment