Monday, 4 July 2011

தனது 5 உடல் உறுப்புகளை தானமாக அளித்த 12 வயது சிறுமி



காரிஸ் மே டார்லிங்கிற்கு 12 வயது தான் ஆகிறது. சிறுவயதில் இவள் தனது உடல் உறுப்புகளை 5 பேருக்கு தானமாக வழங்கியுள்ளாள்.
சிறுமி காரிஸ் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரெப்டோகாகஸ் என்ற பக்டீரிய நுண் உயிரி தொற்று காரணமாக இறந்தார். அவருக்கு மருத்துவர்கள் உரிய ஆண்டிபயாடிக் மருந்துகளை அளித்த போதும் பலன் கிடைக்கவில்லை. நோய்த் தொற்று காரணமாக சிறுமி காரிஸ் மேவுக்கு மூளை இறப்பு ஏற்பட்டது.
மூளை செயல் இழந்து போனாலும் உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
சிறுமியின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கணையம் ஆகியவை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக அளிக்கப்பட்டு அவர்கள் உயிர் பிழைத்தனர்.
"காரிசுக்கு அடுத்தவர்களுக்கு உதவ தான் விருப்பம். அவர் விருப்பத்தை போலவே தனது உடல் உறுப்புகளை தானமாக தந்து மறைந்து விட்டாள்" என தந்தை கூறினார்.
சிறுமி காரிசுக்கு பாட்டு கேட்பது மிகவும் பிடிக்கும். அவர் ஒருநாள் கடுமையான காது வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை செய்த போது தான் ரத்தத்தில் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
அவளுக்கு பின்னர் தலைவலியும், காதில் இருந்து ரத்தமும் கொட்டியது. இதனால் அவளுக்கு மூளை இறப்பு ஏற்பட்டது. கிருமி தாக்குதலில் சிறுமிக்கு மூளை வீக்கம் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டது.

No comments:

Post a Comment