1982 முதல் தற்பொழுது வரை ஜாக்சனுடைய பாப் இசை பாடல்கள் உலகம் முழுவதும் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த அளவுக்கு உலகப்புகழ் பெற்று வாழ்ந்து வந்த ஜாக்சன் தான் சாகும் வரையிலும் ஆடம்பரமாகவே வாழ்ந்தார். அதற்காக அளவுக்குமீறி கடன் வாங்கினார். அவர் 2009 ஜுனில் இறந்தபோது அவருக்கு 400 மில்லியன் டொலர் கடன் உள்ளதாக கூறி கடன்காரர்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்காக அமெரிக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இறந்த ஜாக்சன் உறவினர்கள் அவருக்கு 159 மில்லியன் டொலர் அளவே கடன் உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர். அதன் பிறகு ஜாக்சனின் சொத்துக்கள் மற்றும் அவருடைய வெளிவராத ஆல்பம் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலம் கடனை அடைக்க முடிவு செய்யப்பட்டது. இறுதியாக அவருடைய சொத்துக்கள் மற்றும் வெளிவராத பாப் இசை ஆல்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் 310 மில்லியன் டொலர் அளவிற்கே அவருடைய சொத்துக்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் வசூல் ஆனது. இந்த பணத்தை வைத்து கடன்காரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது, வரி செலுத்துவது உட்பட அனைத்து பிரச்சனைகளையும் ஈடுசெய்வது கடினம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் 400 மில்லியன் டொலர் கடனுக்கு வெறும் 310 மில்லியன் டொலரே வசூலானது. இதில் 27 மில்லியன் டொலர் வரியும், 5.3 மில்லியன் டொலர் ஜாக்சன் குடும்பத்திற்கும், சொத்து அடமானத்திற்கு 4 மில்லியன் டொலரும் கொடுக்க வேண்டும். மேலும் ஜாக்சனை அடக்கம் செய்த இடத்திற்கு 9 லட்சம் டொலரும், அவருடைய நினைவுச்சின்ன ஆடைகளுக்கு 35 ஆயிரம் டொலரும் கட்ட வேண்டும். ஏனெனில் அவர் அடக்கம் செய்யப்பட்ட பாரஸ்ட் லாவன் மெமோரியல் பார்க் தனியாருக்குச் சொந்தமானதாகும். அவருடைய இறுதி ஊர்வலம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவருடைய மரணத்திற்கு தென்ஆப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா, கவிஞர் மேயா ஏஞ்சல்சியோ, உலகப் புகழ் பெற்ற பாடகர் டையனா ரோஸ் அனுதாபச் செய்தி வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
Saturday, 19 February 2011
400 மில்லியன் டொலர் கடனுடன் இறந்த மைக்கேல் ஜாக்சன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment