Saturday, 19 February 2011

உலக கிண்ண போட்டிகளில் இலங்கை அணி...


ஒருநாள் போட்டியில் முதல் 15 ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முடியும் என்று நிரூபித்த அணி இலங்கை.
இந்த அதிரடியான தொடக்க ஆட்டமே அந்த அணி 1996-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தது.
ஜெயசூர்யா- களுவித்திரான ஜோடியின் தொடக்க அதிரடி ஆட்டம் ஒருநாள் போட்டியில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியது. முதல் 5 உலக கோப்பையிலும் முதல் சுற்றி லேயே வெளியேறிய இலங்கை அணி 1996-ம் ஆண்டு போட்டியில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை வென்றது.
கடந்த உலக கோப்பை யில் இறுதிப் போட்டி வரை நுழைந்து அவுஸ்திரேலியாவிடம் தோற்று 2-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. தனது நாட்டில் போட்டி நடைபெறுவதால் 1996-ம் ஆண்டு போல ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். இலங்கை அணி “ஏ” பிரிவில் இடம் பெற்றுள்ளது.
ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர்களில் டெண்டுல்கருக்கு அடுத்தப்படியாக இருக்கும் ஜெயசூர்யா (13,428 ரன்) இந்த உலக கோப்பையில் இடம்பெற வில்லை. அவர் உலக கோப்பையில் 3 செஞ்சூரி அடித்திருந்தார். கேப்டன் சங்ககரா, ஜெயவர்த்தனே, தில்சான், தரங்கா, சமரவீரா போன்ற சிறந்த துடுப்பாட்டக்காரர்கள் அணியில் உள்ளனர். இதில் ஜெயவர்த்தனே 9119 ரன் எடுத்து ஒருநாள் போட்டியில் 13-வது இடத்தில் உள்ளார். சங்ககரா 8699 ரன் எடுத்து உள்ளார்.
ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய முரளீதரன் அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக உள்ளார். அவர் 519 விக்கெட் எடுத்து உள்ளார். உலக கோப்பையில் 53 விக்கெட் கைப்பற்றி 3-வது இடத்தில் உள்ளார். இதுதவிர மலிங்கா, பெர்னான்டோ, குலசேகரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.
உலக தர வரிசையில் 3-வது இடத் தில் இருக்கும் இலங்கை அணி உலக கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கை அணி 618 போட்டியில் விளையாடி 290-ல் வெற்றி பெற்றது. 300 போட்டியில் தோற்றது. 3 ஆட்டம் சமநிலையில் முடிந்தது. 25 போட்டி முடிவு இல்லை.

No comments:

Post a Comment