Saturday, 19 February 2011

பிரெட் லீ ஒரு அபாயப் பந்து வீச்சாளர்



புள்ளிவிவரங்களின் படி அவுஸ்திரேலியாவின் பிரெட் லீ உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளராகத் திகழ்கிறார்.
இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் பிரெட் லீ, இதுவரை 10 உலகக் கோப்பை போட்டிகளில் 22 விக்கெட்டுகளை விக்கெட் ஒன்றுக்கு 17.91 என்ற சராசரியின் கீழ் வீழ்த்தியுள்ளார்.
ஒவ்வொரு 22 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் பிரெட் லீ. அதாவது ஒவ்வொரு 4-வது ஓவரிலும் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரும் வைத்திராத உலகக் கோப்பை கிரிக்கெட் சாதனையாகும்.
கிளென் மெக்ரா, டெனிஸ் லில்லிக்குப் பிறகு அவுஸ்திரேலியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் பிரட் லீ, லில்லி போன்று அல்லாமல் பிற்காலத்தில் வேகத்தைக் குறைப்பவர் அல்ல.
இன்றும் அவர் மணிக்கு 150கி.மீ. அல்லது அதற்கு மேலும் வீசக்கூடிய திறமை உள்ளவர். இரு வடிவ கிரிக்கெட் ஆட்டங்களிலும் சேர்த்து 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரெட் லீ இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் மற்ற அணியின் துவக்க வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
இவரும் ஷான் டெய்ட் என்ற மற்றொரு வேகப்பந்து வீச்சாளரும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சரியக வீசிவிட்டால் அவுஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்புகள் எப்போதும் அதிகரிக்கும் என்பது




No comments:

Post a Comment