அங்கொட அவிசாவளை பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலேயே இவ்வாறு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 50 லட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
லசித் மாலிங்க உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதனால் வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கள்வர்கள் வீட்டை உடைத்து கொள்ளையிட்டுள்ளனர்.
இரத்தினக்கல் பொறிக்கப்பட்ட ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், டிஜிட்டல் கமராக்கள், இலத்திரனியல் சாதனங்கள், கிரிக்கெட் போட்டிகளில் லசித் மாலிங்கவிற்கு கிடைக்கப் பெற்ற சில பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment