Monday, 21 February 2011

யாழ்.நாவற்குழி பாலத்தில் ஹயேஸ் வான் தடம் புரண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகாயம்



யாழ் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நாவற்குழிப் பாலத்தில் நேற்று ஞயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஹயேஸ் வான் ஒன்று தடம் புரண்டதனால் அதில் பயணித்த ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். 
விஸ்வமடுவிலிருந்து ஒரே குடும்ப அங்கத்தவர்களை ஏற்றி வந்த ஹயேஸ் வான் ஒன்றே மேற்படி விபத்திற்குள்ளானது.
வேகமாக வந்த வாகனமானது ஏ9 வீதியில் நாவற்குழி பாலத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகிலுள்ள பள்ளத்தில் மூன்று தடவைகள் உருண்ட நிலையில் பலத்த சேதமடைந்ததுடன் அதில் பயணம் செய்தோரும் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த வேளையில் வாகனத்துக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள்மார் உட்பட நான்கு பெண்களும் சாரதியும் படுகாயமடைந்திருந்தனர். எனினும் தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இவர்கள் அனைவரும் யாழ்.போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment