Tuesday, 22 February 2011

சுவிஸ் சிற்பக் கலைஞர் லுகின்புல் காலமானர்



சுவிட்சர்லாந்தின் முன்னணி சிற்பக் கலைஞர் பெர்னார்ட் லுகின்புல் காலமானார். லுகின்புல் தனது 82 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய சில தினங்களில் காலமானார்.
உருக்கு, மரப்பலகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் லுகின்புல் தனது கலைத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு சிறிய பொருளிலும் தாம் அர்த்தங்களை காண்பதாக லுகின்புல் 2003ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் குறிப்பிட்டுள்ளார்.
பேர்னில் உள்ள பூங்கா ஒன்றில் லுகின்புல்லின் அற்புத கலைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment