Saturday, 19 February 2011

இவர் ஆணா? பெண்ணா? குழம்பிய அதிகாரிகள்



ஒருவரைத் தாக்கிய குற்றத்துக்காக 23 வயதான நிக்கொலா வில்சன் என்ற நபருக்கு விளக்கமறியல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவரை சிறைக்கு அழைத்து வந்த அதிகாரிகளுக்கு இவரை எந்தப் பகுதியில் அடைத்து வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. காரணம் இவர் ஆணா அல்லது பெண்ணா என்பதைத் தீர்மானிக்க முடியாமல் உள்ளது. இவர் பிறப்பில் ஒரு ஆண்.
ஜோஸப் என்பது இவரின் பெயர். ஆனால் இவர் தற்போது பால் மாற்ற சிகிச்சைக்கு உட்பட்டுள்ளார். ஆனாலும் இவர் இன்னும் முழுமையாகப் பெண்ணாக மாறவில்லை.
ஆணாக இருந்து முழுமையாக பெண்ணாக மாறிய பலர் இங்கு தண்டனை பெற்று வந்துள்ளார்கள். அவர்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த மாதிரி வந்தால் எந்தப் பிரிவில் வைப்பது என்று சலித்துக் கொண்டார் ஒரு சிறை அதிகாரி.
இவரை ஆண்பாலில் அழைப்பதா அல்லது பெண் பாலில் அழைப்பதா என்று கூட காவலர்களுக்குப் புரியவில்லை என்றார் அந்த அதிகாரி. நிக்கொலா வில்சன் கடந்த ஆறு வருடங்களாக பெண்ணாகத் தான் வாழ்ந்து வருகின்றார்.
பெண்ணாகக் கருதி தான் அவருக்குத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிறைக் காவலர்கள் எதிர்நோக்கியிருப்பது ஒரு நடைமுறைப் பிரச்சினை. வேறு வழியின்றி இவரை தனியாக ஒரு கூண்டில் அடைத்தார்கள். அது மற்ற கைதிகளை வெறுப்பேற்றிவிட்டது. சிறைக்குள் பாரபட்சமா என்ற கேள்வியும் எழுந்து விட்டது.

No comments:

Post a Comment