Friday, 18 February 2011

மாயமான இளம் பெண்ணின் சடலம் சூட்கேஸில் கண்டுபிடிப்பு




கிறிஸ்துமஸ் முன்பாக மேரி ஸ்டீவர்ட் என்ற பெண் மாயமானார். தற்போது மேரியின் சடலம் அவரது வீட்டின் கிடங்கு பகுதியில் ஒரு சூட்கேசில் திணிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேரியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என பொலிசாரை தொடர்பு கொண்டனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் பொலிசார் விசாரணையை துவக்கினார். அவர் தன்னையும் குழந்தைகளையும் பிரிந்து காதலருடன் புதிய வாழ்க்கை மேற்கொள்ள லான்சரோட் சென்று விட்டதாக வாழ்க்கை துணைவர் லிண்டோ தனது நண்பர்களிடம் கூறிவந்தார்.
பொலிஸ் அதிகாரிகள் லிண்டோவிடம் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிறன்று லிண்டோ தனது வீட்டிற்கு சில மைல் தொலைவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 29 வயது பெண்ணுடன் இருந்ததை பொலிசார் கண்டனர்.
மேரி மாயமானதில் இருந்து லிண்டோ குழந்தைகளை அந்த பெண் தான் பார்த்துக் கொண்டதாக தெரிகிறது. அதன் பின் ஹோம்பிரித்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு வீட்டின் காரேஜ் பகுதியில் மேரியின் அழுகிய உடலை பொலிசார் கண்டுபிடித்தனர்.
அவரது உடலில் பல கத்திக் குத்துக்கள் காணப்பட்டன. காயங்களும் இருந்தன. மேரியின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

No comments:

Post a Comment