லையான் நகரில் வசித்து வரும் அனே கடுமையான வயிற்று வலியாலும், இருமலாலும் அவதிப்பட்டு வந்தார். கடந்த வெள்ளியன்று வலி அதிகமாகவே, 6 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஓபரேஷன் செய்த மருத்துவமனையை அனே அணுகினார். அப்போது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு எந்த அபாயமும் நேராது என அங்குள்ள சத்திர சிகிச்சை நிபுணர்கள் மெத்தனம் காட்டினர். இதனால் அனே அவர்கள் மீது வழக்கு தொடரும் முடிவுக்கு வந்தார். அனே மற்றொரு மருத்துவமனையில் வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த போது 10 செ.மீ நீளத்தில் கத்திரிக்கோல் இருப்பது தெரிய வந்தது. சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு வழக்கறிஞரின் அழைப்பை அணுக வேண்டி இருந்தது என அவர் தெரிவித்தார். காதலர் தினமன்று இந்த சத்திரசிகிச்சை மேற்கொண்டதால் இந்த ஓபரேஷனுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை எனக் குறிப்பிட்ட மருத்துவர், இந்த விடயத்தை நகைச்சுவையாக்க முயன்றார் என்றும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட மருத்துவமைனையில் தன்னை நோயாளியாக பாவிக்கமால், சந்தைப் பொருள் வாங்கும் வாடிக்கையாளராக பாவித்தது அதிர்ச்சி அளித்தது என அனே தெரிவித்தார். |
Friday, 18 February 2011
வயிற்றில் கத்திரிக்கோலுடன் அவதிப்படும் பெண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment