Friday, 18 February 2011

இலியானாவின் கோலிவுட் ஆபரேஷன்


தமிழில் அறிமுகமாகி, நடித்த படம் சரியாக போகாததால் தெலுங்கு படங்களில் நடித்தார் 'இடையழகி' இலியானா.
ஷங்கரின் 'நண்பன்' படத்தில் நடிக்க வரும் முன்பே தெலுங்கு படமொன்றில் பிஸியாக நடித்தேன்.
ஷங்கர் சார் போன்ற இந்தியாவிலேயே பெரிய டைரக்டரின் படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.
அவர் இயக்கத்தில் நடித்த அனுபவம் அமர்க்களமாக இருந்தது. உற்சாகத்தை உணர்ந்தேன். தமிழில் ஒரு சில வரிகள் நன்றாக பேச வரும் என்கிறவர்,தெலுங்கிலிருந்து கோலிவுட்டுக்கு அதிரடி திட்டத்தோடு வந்திருக்கிறாராம்.
'தமிழில் 'என்ட்ரி' சரியாக அமையவில்லை. எந்திரன் வெற்றிக்கு பிறகு ஷங்கர் சாரின் மார்கெட் வேல்யுவால் 'நண்பன்' படத்தின் மதிப்பும் உயர்ந்து நிற்கும். கோலிவுட்டில் எனக்கு நிலையான, நல்ல இடம் அமையும்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கப்போறேன்'என்கிறாராம் இலியானா. இதனால் கோலிவுட் படத்தில் நடிக்க 'அதிகம் சம்பளம் வாங்கும்' நடிகைகள் அதிர்ச்சியடைந்தார்களாம்.

No comments:

Post a Comment