| விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் சஞ்சீவி மலையடிவாரத்தின் கிழக்கு பகுதியான இ.எஸ். ஐ. காலனியை சேர்ந்த வர் மாடசாமி. ராஜபா ளையத்தில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குருவம்மாள். இந்த தம்பதியின் மகள் மகாலட் சுமி (வயது 18). இவரும் சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நூற் பாலையில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே திருமண வயதை எட்டிய மகளுக்கு அவரது பெற்றோர் மாப் பிள்ளை பார்த்து வந்தனர். அதன்படி அருப்புக்கோட் டையை சேர்ந்த கணேசன் என்பவரை மகளுக்கு திரு மணம் செய்துவைக்க நிச்சய மும் செய்தனர். கடந்த வாரம் நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் நடந்தது. அடுத்த மாதம் (மார்ச்) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதன் தொடர்ச்சி யாக பெற்றோர் திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இதற்கிடையே வேலைக்கு சென்று வந்த மகளை இனிமேல் செல்ல வேண்டாம் என்று பெற் றோர் கூறியதால் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற மகாலட்சுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று காலை இ.எஸ்.ஐ. காலனியை ஒட்டியுள்ள நீர் நிரம்பிய சுனையில் சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாகவும், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் தண்ணீரில் மிதந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதற்குள் நிர்வாண நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் இருந்தது. அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் உறைந்து போய் காணப்பட்டது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கும் மேலாகி இருப்பதால் உடல் அழுகியபடி காணப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் சில நாட்களுக்கு முன்பு மாயமான மாடசாமியின் மகள் மகாலட்சுமி என்பது தெரியவந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட அவர் மாயமான தினத்தன்று எங்கு சென்றார்? யார் அவரை கொலை செய்தார்கள்? எதற்காக கொலை நடந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே மகாலட்சுமி யாரையாவது காதலித்தாரா? அந்த பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள் ளது. மேலும் மகாலட்சுமியை யாராவது “மர்ம” நபர்கள் கடத்தி சென்று கற்பழித்து விட்டு கொலை செய்து அதனை மறைக்க சாக்கு மூட்டையில் கட்டி வீசிச் சென்றார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் நிச்சயிக்கப் பட்ட புதுப்பெண் கொடூர மாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
Monday, 21 February 2011
திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் கொடூர கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment