Monday, 21 February 2011

கோடிஸ்வரியாக வாழ்ந்தவர் இன்று கோல்சென்ரறில் வேலை பார்க்கிறார்


 
லொரிஆர்னோல்ட் என்ற பெண்தான் அமெரிக்காவில் மிகவும் மோசமான விளைவுகளைக் கொண்ட methamphetamine - crystal meth என்ற போதைப் பொருளை அறிமுகம் செய்தவர்.

இதனால் இவர் மெத் ராணி என்று அழைக்கப்பட்டார். அமெரிக்கப் பாதாள உலகம் அதுவரைக் கண்டிராத மாபெரும் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரியாக இருந்தவர்.

போதைப் பொருள் கடத்தல், நாணய மோசடி, போதைப் பொருள் தயாரிப்பு, விற்பனை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக 15 வருட சிறைத் தண்டனைக்குப் பின் தற்போது விடுதலையாகி கோல்சென்டர் ஒன்றில் வேலை செய்து வருகின்றார்.

51 வயதான இவரின் வாழ்க்கைவரலாறை திரைப்படமாக எடுப்பதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன.

லொரிஆர்னோல்ட் அறிமுகம் செய்த crystal meth போதைப் பொருள் பிரிட்டன் உட்பட பல உலக நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

இவரின் சகோதரர் டிம் ஆர்னோல்ட் ஒரு ஹொலிவூட் நடிகர்.

தன்னை ஒரு மித் கோடீஸ்வரர் என இவர் கூறுகின்றார்.

ஐந்து வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் தான் பெரும் தொகை செல்வத்தை ஈட்டியதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

லொரிஆர்னோல்ட் 1984ல் இந்த போதைப் பொருளை வாங்கி விற்க ஆரம்பித்து பின்னர் இதை உற்பத்திச் செய்யும் சொந்தத் தொழிற்சாலை மற்றும் ஆய்வு கூடம் என்பனவற்றை வைத்து நடத்தியவர்.

பத்து மில்லியன் டொலர் பெறுமதியான இவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நீண்டகால சிறைவாசத்துக்குப் பின் இவர் தனது மகனோடு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்

No comments:

Post a Comment