Monday, 21 February 2011

எப்படி ஒரு அன்பான அம்மா தன் குழந்தையைக் குத்திக் கொன்றார்? குழப்பத்தில் பொலிஸார்



தனது நான்கு வயதேயான மகளைக் குத்திக் கொன்ற பின் தானும் தற்கொலை செய்ய முயன்றதாக நம்பப்படும் பெண் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கிரேட்டர் மன்செஸ்டர் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டோன்மெகின் என்ற 33 வயது மருத்துவ தாதியே இவ்வாறு ஆஸபத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பொலிஸாரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது மகளை அளவுக்கு அதிகமாக நேசித்த ஒரு தாயே இவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


இவரோடு பல மணித்தியாலங்களாக தொடர்பு கொள்ள முயன்றும் அது முடியாமல் போகவே இவரின் தாய் பொலிஸாரின் உதவியோடு வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது டோன்மெகின்னும் அவரது மகள் சோலியும் கட்டிலில் அருகருகே இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

மகள் இறந்து கிடந்தார். அவரது உடம்பில் வெட்டுக்காயங்களும் கத்திக்குத்து காயங்களும் காணப்பட்டன. தாயின் மணிக்கட்டு வெட்டப்பட்டு மூர்ச்சையாகக் காணப்பட்டார். பின்னர் அவர் நஞ்சருந்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அவர் வேலை செய்யும் ஆஸபத்திரியிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிர்க்காப்பு முறையின் கீழ் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.

இவரின் கணவர் மூன்று வருடங்களாக இவரைப் பிரிந்து வாழுகின்றார்.

நேற்று இவர் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து பூக்கொத்து மற்றும் அனுதாப அட்டை என்பனவற்றை வைத்து தனது மகளுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குடும்பத்தவர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

கொலைக்கான காரணத்தை ஊகிக்க முடியாமல் பொலிஸாரும் குழம்பிப் போயுள்ளனர்.

No comments:

Post a Comment