Saturday, 19 February 2011

பாப் பாடகர் மைக்கெல் ஜாக்சனின் சோகம்



உலகப்புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கெல் ஜாக்சன் 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரை சாப்பிட்டதால் இறந்தார். 1982 முதல் தற்பொழுது வரை ஜாக்சனுடைய பாப் இசை பாடல்கள் உலகம் முழுவதும் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் பெரும் சாதனை படைத்து வருகிறது.

உலகம் முழுவதும் இன்றளவும் அவரது பாடல்களை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த அளவுக்கு உலகப்புகழ் பெற்று வாழ்ந்து வந்த ஜாக்சன் தான் சாகும் வரையிலும் ஆடம்பரமாகவே வாழ்ந்தார். அதற்காக அளவுக்குமீறி கடன் வாங்கினார்.

அவர் 2009 ஜுனில் இறந்தபோது அவருக்கு 400 மில்லியன் டாலர் கடன் உள்ளதாக கடன்காரர்கள் பணம் திரும்பப் பெறுவதற்காக அமெரிக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இறந்த ஜாக்சன் உறவினர்கள் அவருக்கு 159 மில்லியன் டாலர் அளவே கடன் உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.

அதன்பிறகு ஜாக்சனின் சொத்துக்கள் மற்றும் அவருடைய வெளிவராத ஆல்பம் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலம் கடனை அடைக்க முடிவு செய்யப்பட்டது. இறுதியாக அவருடைய சொத்துக்கள் மற்றும் வெளிவராத பாப் இசை ஆல்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.

ஆனால் 310 மில்லியன் டாலர் அளவிற்கே அவருடைய சொத்துக்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் வசூல் ஆனது. இந்த பணத்தை வைத்து கடன்காரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது, வரி செலுத்துவது உட்பட அனைத்து பிரச்சனைகளையும் ஈடுசெய்வது கடினம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஏன்னெனில் 400 மில்லியன் டாலர் கடனுக்கு வெறும் 310 மில்லியன் டாலரே வசூலானது.

இதில் 27 மில்லியன் டாலர் வரியும், 5.3 மில்லியன் டாலர் ஜாக்சன் குடும்பத்திற்கும், சொத்து அடமானத்திற்கு 4 மில்லியன் டாலரும் கொடுக்க வேண்டும். மேலும் ஜாக்சனை அடக்கம் செய்த இடத்திற்கு 9 லட்சம் டாலரும், அவருடைய நினைவுச்சின்ன ஆடைகளுக்கு 35 ஆயிரம் டாலரும் கட்ட வேண்டும்.

ஏன்னெனில் அவர் அடக்கம் செய்யப்பட்ட பாரஸ்ட் லாவன் மெமோரியல் பார்க் தனியாருக்குச் சொந்தமானதாகும். அவருடைய இறுதி ஊர்வலம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

அவருடைய மரணத்திற்கு தென்ஆப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா, கவிஞர் மேயா ஏஞ்சல்சியோ, உலகப் புகழ் பெற்ற பாடகர் டையனா ரோஸ் அனுதாபச் செய்தி வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு புகழ் பெற்ற ஜாக்சனுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

No comments:

Post a Comment