Thursday, 17 February 2011

காணாமல் போன சிறுமி! இணையத்தால் வந்த வினையென பொலிஸார் அச்சம்


எஸக்ஸ் பகுதியில் ஒரு 14 வயதுச் சிறுமியைக் காணவில்லையென்று கிடைத்தத் தகவலையடுத்து, பொலிஸார் அவரைத் தீவிரமாகத் தேட ஆரம்பித்துள்ளனர்.

தனது நண்பர்களைச் சந்திக்கச் செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இவர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

இணையத்தளம் வாயிலாக தனக்கு அறிமுகமான ஒருவருடன் இவர் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர் தொடர்பான அடையாளங்களை வெளியிட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment