லிபிய மத்திய வங்கியில் கடாபி சுமார் 4 பில்லியன் பவுண்கள் பெறுமதி வாய்ந்த 150 தொன் தங்க கட்டிகளை வைத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.![]() இத்தங்கக் கையிருப்பானது கடாபியின் நேரடிக் கட்டுப்பாட்டின் பேரிலேயே உள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய 25 தங்கக் கையிருப்புகளில் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு சுமார் ஒரு வருடத்திற்குப் பணம் வழங்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. மற்றைய நாடுகளின் மத்திய வங்கிகளைப்போல் அல்லாது கடாபி லிபியாவின் தங்க கையிருப்பினை திரிபோலியிலேயே வைத்திருக்க விரும்பியதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் லிபியாவின் வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கியுள்ளன. எனினும் தற்போது கடாபி தனது தங்க இருப்புக்களை நைஜர் மற்றும் சாட் நாட்டு எல்லைகளுக்குப் பணமாக மாற்றும் நோக்கத்துடன் கொண்டு சென்றிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. |
Thursday, 24 March 2011
கடாபியின் 150 தொன் தங்க கட்டிகள் லிபிய மத்திய வங்கியில் வைப்பு : ச.நா.நி. தகவல்
Labels:
கடாபியின் 150 தொன..............
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment