| இது பற்றிய விபரம் வருமாறு. பாட்னாவிலிருந்து - பெங்களூரூவிற்கு விமானம் ஒன்று மாலை 6.47 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் சுமார் 180 பயணிகள் பயணம் செய்ய தயாராக இருந்தனர். விமானம் புறப்படுவதற்கான சமிஞ்சை அளிக்கும் பணியில் ஏர் டிராபிக் கண்ட்ரோலர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் பெங்களூரூ செல்லும் விமானம் கிளம்புவதற்கான சிக்னலை அளித்தார். அதே நேரத்தில் எதிர் திசையில் மும்பையிலிருந்து - பாட்னாவிற்கு 140 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டது. பெங்களூரூ விமானம் புறப்பட்டதற்கு எதிர் திசையில் மும்பை விமானமும் தரையிறங்க முற்பட்டது. இரண்டு விமானங்களுக்குமான உயர இடைவெளி குறைவாக இருப்பதை கண்ட மும்பை விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை மேலெழுப்பினார். இதனையடுத்து பெங்களூரூ விமானம் பறப்பதை நிறுத்தி வைக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டது. பின்னர் மும்பை விமானம் பத்திரமாக தரையிறங்கியது. தொடர்ந்து பெங்களூரூ விமானம் பறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஒருமணி நேர தாமதம் ஏற்பட்டது. மேலும் நடைபெறவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் கடந்த சில தினங்களாக போலி பைலட்டுகள் குறித்த செய்தி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஏர்டிராபிக் கண்ட்ரோலரின் செயல்களால் பயணிகள் பீதியடைந்துள்ளனர். |
Saturday, 26 March 2011
விமான விபத்து தவிர்ப்பு: 300 பயணிகள் உயிர் தப்பினர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment