Saturday, 26 March 2011

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி 17 மாடுகள் பலி



மட்டக்களப்பின் பட்டிப்பளை பிரதேசத்தில் இன்று அதிகாலை வேளையில் மின்னல் தாக்கியதில் 17 மாடுகள் பலியாகியுள்ளன.
பட்டிப்பளைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட குழுவினமடு பிரதேசத்தில் இன்று அதிகாலை பிரஸ்தாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.  உயிரிழந்த பசுமாடுகளின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மரமொன்றின் கீழ் மாடுகள்  நின்று கொண்டிருந்தபோது அம்மரத்தின் மீது மின்னல் தாக்கியதன் காரணமாக மாடுகளும் பலியாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது. ஆயினும் அதன் அருகில் நின்ற வேறு சில மாடுகள் காயங்களின்றித்தப்பித்துக் கொண்டுள்ளன.
மட்டக்களப்பில் மின்னல் தாக்குதலில் பெருந்தொகையான மாடுகள் பலியாகியுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

No comments:

Post a Comment