கடவத்தை மஹர பிரதேசத்தைச் சேர்ந்த ஹேமலதா மாலினி ஆரியரத்ன என்ற கோடீஸ்வரப் பெண்மணி தனக்குச் சொந்தமான 480 மில்லியன் ரூபா (48கோடி) பெறுமதியான சொத்துக்களை சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.![]() காணி, வீடு மற்றும் கட்டிடங்கள் உட்பட்ட இந்தச் சொத்துக்களை றாகமை அரசாங்க போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பயன்படுத்தவே அவர் வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இந்தச் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களைக் கையளித்துள்ளார். இலங்கையில் தனிநபர் ஒருவர் அரசுக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய நன்கொடை இதுவாகும். |
Thursday, 24 March 2011
இலங்கைக்கு தனிநபரால் வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடை! - 480 மில்லியன் ரூபா
Labels:
இலங்கைக்கு ...................
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment