Sunday, 27 March 2011

சுவிட்சர்லாந்து பனிப்பாறை சரிவில் 4 பேர் பலி


சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பனிப்பாறை சரிவில் நான்கு பிரஞ்சு பிரஜைகள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சுவிட்சர்லாந்திற்கும் இத்தாலிக்கும் இடையிலான தென் எல்லைப் பகுதியில் இத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மற்றுமொரு நபரைக் காணவில்லை என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
11 சுற்றுலாப் பயணிகள் பனிப்பாறைகளில் சஞ்சரித்ததாகவும் இதில் ஐந்து பேர் மீட்கப்பட்டதாகவும், ஒருவர் பனிப்பாறைச் சரிவிலிருந்து தப்பித்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்தில் ஆபத்து ஏற்படக் கூடுமென சுவிட்சர்லாந்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment