அமெரிக்காவில் முஸ்லீம்களின் தீவிரவாத கருத்துக்கள் தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை காங்கிரஸ் சபை துவக்கியுள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ஜெய்கார்னே கூறியதாவது: அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்கள் எல்லாம் தீவிரவாத கருத்துக்களை எதிர்ப்பவர்களாக உள்ளனர். அதனால் அவர்களின் உதவியுடன் நாம் தீவிரவாத பிரச்சனையை எளிதில் களைய முடியும். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அமெரிக்க முஸ்லீம்கள் நமக்கு உறுதுணையாக இருப்பரே அன்றி அவர்களால் பிரச்சனை இருக்காது. தீவிரவாத பிரச்சனையில் காங்கிரஸ் சபை அக்கறை காட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம். இது முக்கியமான பிரச்சனை என்றும் நம்புகிறோம். இவ்வாறு ஜெய்கார்னே கூறினார். கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். |
Friday, 11 March 2011
முஸ்லீம் சமூகத்தினரால் எப்போதும் பிரச்சனை இருந்ததே இல்லை: அமெரிக்கா
Labels:
முஸ்லீம் சமூகத்தினரால் .....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment