Friday, 11 March 2011

அறையில் 4 மகன்களை அடைத்து வைத்த தாய்



இங்கிலாந்தில் 4 சிறுவர்களை ஒரே அறையில் அடைத்து வைத்த கொடூரத் தாயினை பொலிசார் தேடி வருகின்றனர்.
மிகவும் ‌மோசமான நிலையில் இருந்த அந்த 4 சிறுவர்களையும் பொலிசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இங்கிலாந்தின் வடக்கு யார்க்ஷெயர் மாகாணத்தில் உள்ள ஸ்கார்பரோக் நகரில் மிகச்சிறிய வீட்டினுள் 35 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த பெண்ணிற்கு 8 வயது முதல் 12 வயது வரையில் 4 மகன்கள் இருந்துள்ளனர். இந்த நான்கு மகன்களும் வெவ்வேறு ஆண்களுக்கு பிறந்துள்ளனர். வேலை இல்லாமலும், வறுமை காரணமாக தவித்து வந்த பெண் தனது 4 மகன்களையும் பராமரிக்க முடியாமல் தனது வீட்டிலேயே ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த 4 சிறுவர்களும் மிகச்சிறிய அறையினுள் உணவு உண்ணுவது, குளிப்பது என எல்லா வேலைகளையும் ஒரே அறையில் செய்து வந்ததால் அந்த சிறுவர்கள் தங்கியிருந்த அறை உரிய பராமரிப்பு இல்லாமல் மிகவும் தூர்நாற்றம் வீசத் தொடங்கியது.
இந்நிலையில் சிறுவர்களின் தாய் 5 வதாக கருவுற்றிருந்தார். அப்போது குழந்தையினை அதே வீட்டினுள் பெற்று எடுத்து வளர்க்‌க முயன்றுள்ளார். இது பக்கத்து வீட்டாருக்கு ‌தெரிய வ‌‌ரவே பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்து மிகவும் மோசமான நிலையில் 4 சிறுவர்களை மீட்டனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையினை பொலிசார் சோதனை நடத்தியதில் அருவறுக்கத்தக்க நிலையில் இருந்தததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 4 ஆண்டுகளாக பெற்ற மகன்களை கொடுமைப்படுத்திய தாயினை பொலிசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment