சபோக்கில் உள்ள ஸ்டோ மார்க்கெட் பகுதியை சேர்ந்த 60 வயது கிரகாம்வாஸ் பேவுக்கு ஒரு கண்ணில் முற்றிலும் பார்வை கிடையாது. மற்றொரு கண்ணில் மிகச்சிறிய அளவே பார்க்கும் சக்தி உள்ளது. அவர் வெளியில் நடந்து செல்வதற்கு எட்வர்ட் என்ற செல்ல நாய் பல ஆண்டுகளாக உதவி வந்தது. தனது எஜமான் சரியாக நடந்து செல்வதற்கு அந்த நாய் வழிகாட்டியாக இருந்த அந்த நாய்க்கும் கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் வழிகாட்ட ஓபல் என்ற புதிய நாய் வந்துள்ளது. இதுகுறித்து கிரகாம் வாஸ் பே கூறுகையில்,"புதிய நாய் ஓபல் வருகையால் எட்வர்ட் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாக ஆகிவிட்டார்கள்" என்றார். எட்வர்ட் நாய்க்கும் கண்பார்வை நன்றாக தெரியும் போது தனது எஜமானரின் வலது, இடது கட்டளைகளை ஏற்று சரியான பாதையில் பயணிக்கும். எட்வர்ட் சாமர்த்தியமாக சாலைகளை கடக்கும். இதனால் எஜமானர் கிரகாம் எந்த வித சிரமமும் இல்லாமல் இருந்தார். அதற்க்கு கண்பார்வை குறைந்து போன பொது துடித்துப் போன கிரகாம் தற்போது புதிய வருகையான ஓபல் நாயால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். குறிப்பாக எட்வர்ட்டுக்கும் ஒரு நல்ல நண்பன் கிடைத்து விட்டான் என பெருமிதம் கொள்கிறார். ![]() ![]() |
Friday, 11 March 2011
பார்வையற்ற எஜமானுக்கு வழிகாட்டும் நாய் (பட இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment