Friday, 11 March 2011

கிளின்டனை தவிர வேறு யாருக்கும் என் மனதில் இடமில்லை: மோனிகா லெவின்ஸ்கி



பில்கிளின்டனை தாம் இன்னும் காதலிப்பதாகவும், அவரைத் தவிர வேறு யாருக்கும் என் மனதில் இடமில்லை என அவரது பழைய காதலி மோனிகா லெவின்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 1998 ம் ஆண்டுகளில் முன்னாள் அதிபர் பில்கிளின்டன்- மோனிகா லெவின்ஸ்கி பாலியல் விவகாரம் அமெரிக்க அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியது. அமெரிக்க அதிபராக பில்கிளின்டன் இருந்த போது வெள்ளை மாளிகையில் இவரது அந்தரங்க உதவியாளராக பணியாற்றினார் மேனிகா லெவின்ஸ்கி(20) என்ற இளம் பெண்.
அப்போதே இருவரும் உறவு கொண்டதாக கிளின்டன் மீது பரபரப்பு எழுந்தது. முதலில் மறுத்த கிளின்டன் மரபணு சோதனையில் இது உண்மை என நிரூபிக்கப்பட்டதால் விடயம் பெரிதானது. இதைத் தொடர்ந்து உண்மையினை ஒப்புக் கொண்டார். கிளின்டன், மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் அமெரிக்கர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் கடந்த 1998 ம் ஆண்டு குடியரசு கட்சியைச் சேர்ந்த இவரது ஆதரவு எம்.பி க்கள் பார்லிமென்ட்டில் தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தி தீர்மானம் நிறைவேற்றினர். கிளின்டனின் புகழுக்கு பெரும் அவமானத்தை தேடித்தந்தது. இந்நிலையில் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து மோனிகா லெவின்ஸிக்கு 37 வயதாகிறது.
ஆன்ட்ரூ மோர்டான் எனும் எழுத்தாளர் கடந்த 2006 ம் ஆண்டு மோனிகா பற்றி புத்தகம் எழுதியுள்ளார். இதன் வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சர்ச்சைக்குள்ளான அவரது முன்னாள் காதலி ‌மோனிகா லெவினஸ்கி யை அவரது நண்பர்கள் நீ ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவி்ல்லை. குழந்தைகள் பெற்றுக்கொள்ளவி்ல்லை என கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில் தான் இன்னமும் கிளின்டனை காதலிப்பதாகவும், அவரைத் தவிர என் மனதில் வேறு யாருக்கும் இடமில்லை. கிளின்டன் இல்லாத வாழ்க்கை எனக்கு ஒரு வாழ்க்கையே இல்லை. அவர் மீண்டும் இரண்டாவது முறையாக அதிபராக வாய்ப்பு உள்ளதாக ‌டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment