Friday, 11 March 2011

கோழிகளுக்கு மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை உண்டு: ஆய்வுத் தகவல்



கோழிகள் அதிக உணர்வு பூர்வமானவை. மிகுந்த பாசம் கொண்டவை. துயர் ஏற்படும் நேரத்தில் வருந்தும் குணம் கொண்டவை. இந்த வருத்தங்களை மாற்றங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றன.
இந்த விடயங்கள் தற்போது முதன் முறையாக விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. பறவைகளில் மற்றவைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் இந்த ஆற்றல் இருப்பது இது சம்பந்தமாக ஆராய்ந்த விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
காரணம் பறவைகளால் மற்றவற்றின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளலாம் என்பது இப்போது தான் முதற்தடவையாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது விலங்குகளுக்கும் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டது.
தற்போது கோழிகளுக்கும் அது இருப்பது தெரியவந்துள்ளதால் அவற்றின் மூளையின் செயற்பாட்டைப் பற்றி மேலதிகமாக ஆராய்வதில் விஞ்ஞானிகள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
கோழிகளை வைத்து பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவிலேயே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஆய்வுத்துறை மாணவர் ஜோ எட்கார் தலைமையிலான குழுவினரே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
கோழிகள் இவ்வாறு ஒன்றின் துன்பத்தைக் கண்டு மற்றொன்று உணர்ச்சி வசப்படும் போது அதன் இருதயத் துடிப்பு அதிகரிக்கின்றது. கண்களில் உஷ்ணம் குறைகின்றது என்றெல்லாம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment