| வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011, 07:42.00 மு.ப GMT ] |
ஜப்பானின் வடக்குகிழக்கு பகுதியில் 7.9 ரிச்டர் பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் மியாகி கரையோரப் பிரதேசத்தில் 20 அடி உயரமான அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் டோக்கியோவில் இருந்து 250 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள இடத்தில் பூமியின் மேற்புறத்தில் இருந்து 20 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் 6.9 ரிச்டர் பரிமாண நில அதிர்வும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வீடுகளும், கட்டிடங்களும் மற்றும் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல இடங்களில் தீப்பரவலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதே வேளை ரஸ்யா மற்றும் தாய்வான் ஆகிய இடங்களுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
Friday, 11 March 2011
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: ஆழிப்பேரலையால் கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டன (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment