யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தியகெலி நாவலவுக்குக் கிடைத்த தகவலை அடுத்து நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பாழடைந்த நிலையில் இருந்த வீடொன்றில் இருந்து சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட அந்தச் சிசு கருவுற்று ஐந்து மாதங்கள் நிரம்பியிருந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
நேற்றுப் புதன்கிழமை அதிகாலை தினசரிப் பத்திரிகை ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் காணப்பட்டுள்ளது.
அந்தச் சிசுவின் சடலத்தை குறித்த பாழடைந்த வீட்டில் வைத்துவிட்டுச் சென்றது யார் என்று தமக்குத் தெரியாது எனப் பொலிஸ் விசாரணையில் அயல் வீட்டுக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சகிதம் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
மரபணுப் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளவென சிசுவின் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் சம்பவ இடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பெண் பொலிஸார் மூலம் சோதனை நடத்தி இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment