Thursday, 24 March 2011

தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம்



தனது நரைத்த தலை முடிக்கு கறுப்பு நிற "டை' பூசி வந்த ஆசிரியை மரணமான சம்பவம் மாத்தறை ஆஸ்பத்திரியில் இடம்பெற்றது.
மாத்தறை மாவட்டத்தில் உள்ள தெலிஜ்ஜவிலைகருக்களை பகுதியைச் சேர்ந்த வீ. ஜி. இந்திராணி (56 வயது) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு மரணமானார்.
இவர் தனது நரைத்த முடிக்கு சில காலம் கறுப்பு நிற "டை" பூசி வந்துள்ளார் எனவும், அதனால் தலைவலி மற்றும் நோய்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார் எனவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் "டை' பூசுவதையும் சில காலம் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் நிகழ்வு ஒன்றிற்காக தன்னை அழகுபடுத்த மீண்டும் தலை முடிக்கு கறுப்பு நிற டையைப் பூசிய போது திடீரென சுகயீனம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பயனின்றி மரணமானார்.
இவர் தலை முடிக்கு பாவித்த கறுப்பு டையில் உள்ள நச்சு இரசாயனக் கலவை உடலில் பரவியதால் மரணம் சம்பவித்ததாக மாத்தறை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து மரண விசாரணை அதிகாரி லலித் டி சில்வா நச்சு உடலில் பரவியதால் மரணம் சம்பவித்ததாக தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்துக்கு முன்னரும் ஒருவர் தலை முடிக்கு நிற மையைத் தீட்டியதால் மாத்தறைப் பகுதியில் மரணமானார்.
தலைமுடிக்குப் பயன்படுத்தும் டை நிறப் பூச்சுக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் சுகாதாரப் பகுதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment