Sunday, 27 March 2011

பிரிட்டனின் அன்னப்பறவைக் கிராமம்!


பிரிட்டனின் எஸக்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த மிஸ்ட்லி கிராமம் அன்னப் பறவைகளுக்குப் பெயர்போன ஒரு கிராமமாகும்.


இங்குள்ள பிரதான நதியான ஸ்டூர் நதியை கிட்டத்தட்ட அன்னங்களின் சரணாலயம் என்று கூறலாம். அந்தளவுக்கு இங்கு அன்னங்கள் காணப்படுகின்றன.

17ம் நூற்றாண்டு தொடக்கம் இந்தப் பகுதியில் அன்னங்கள் நிறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இந்தக் கிராமத்தின் ஆரம்பப் பாடசாலையின் இலச்சினை, இங்குள்ள றகர் அணியின் இலச்சினை என்பனவற்றிலும் அன்னப்பறவையைக் காணலாம். அந்தளவுக்கு இங்குள்ள மக்கள் அன்னத்தோடு ஒன்றிப் போயுள்ளனர். தற்போதைக்கு இங்கு சுமார் 250 அன்னங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இங்கு வாழும் திருமதி. அலக்ஸ்ஸ்மித் என்ற சமூக சேவகி தினசரி சளைக்காமல் பல தடவைகள் இங்குள்ள அன்னங்களுக்கு தானியங்களை உணவாக வழங்குகின்றார். தானியங்கள் வழங்குவதற்கான குறிப்பிட்ட நேரத்தில் இந்த அன்னங்கள் அனைத்தும் சரியாக நதிக்கரைக்கு வந்து விடுகின்றன.

ஆனால் அண்மைக் காலமாக இந்த வாயில்லா ஜீவன்களுக்கு இங்குள்ள சிலர் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

இவை சில வேளைகளில் வீதிக்கு வந்து விடுவதால் இவற்றுக்கும் தங்களுக்கும் ஆபத்து ஏற்படுவதாகவும், இவற்றால் சுகாதாரப் பிரச்சினைகள் தலைதூக்குவதாகவும், இவற்றின் கழிவுகளால் இந்தக் கிராமத்தின் பசுமைத் தன்மை பாதிக்கப்படுவதாகவும் இந்தப் பிரிவினர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.

தனது கணவனை விவாகரத்துச் செய்து விட்டு நீண்டகாலமாக தனியாக வாழும் திருமதி. அலக்ஸ்ஸ்மித் இந்தக் கருத்துக்களால் வேதனை அடைந்துள்ளார்

No comments:

Post a Comment