அவரது உள்ளங்கையில் உள்ள கருவியொன்றின் துணையோடு தான் இதைச் செய்துள்ளார். எடிஇஸகோவிக் என்ற இந்த நபர் ஸ்மார்ட்போன் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு டியுப்மோட் என்ற ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளார். சில நடமாடும் கருவிகளை ஏனைய இணையங்களோடு தொடர்புபடுத்தி அகலத் திரைக்குள் கொண்டு வரக்கூடிய முறையே இதுவாகும். தனது 27 வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையிலேயே இவர் தனது புதிய கண்டுபிடிப்பை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளார். இரண்டு வருடங்களாக தனது மனைவி டானியாவுடன் இணைந்து இவர் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். எந்தவொரு ஸ்மார்ட்போனையோ, லப்டொப்பையோ அல்லது வேறு டெப்லட் உபகரணத்தையோ இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு ரிமோர்ட்கன்ட்ரோலாக மாற்றி செயற்பட்டுக் கொண்டிருக்கும் இணையத்தளத்தோடு தொடர்புபடுத்தி ஒலி மற்றும் ஒளிபரப்புச் செய்யலாம் என்று அவர் விளக்கமளித்துள்ளார். |
Sunday, 27 March 2011
நியூயோர்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் புதிய தொழினுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தி அசத்திய ரொறன்ரோ இளைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment