Sunday, 27 March 2011

பிரிட்டனின் விலை உயர்ந்த கோழி


இதுதான் பிரிட்டனில் விற்கப்படும் மிகவும் விலை கூடிய கோழி. நான்கு கிலோ எடை கொண்ட இந்தக் கோழியின் விலை 32.52 பவுண்கள்.
லண்டனின் தென் பகுதியில் உள்ள ஒரு நிறுவனம் தான் இதை விற்பனை செய்து வருகின்றது. சாதாரணமாக அனுமதியளிக்கப்பட்ட கோழிகளிலும் பார்க்க இதன் விலை எட்டு மடங்கு அதிகமானது.
அதனால் இதை “ரோல்ஸ் ரோய்ஸ் சிக்கன்” என்று வாடிக்கையாளர்கள் அழைக்கின்றனர். ஆனால் ஒரு விடயம் சாதரணமாக பண்ணைகளில் வளர்க்கப்பட்டு தொழிற்சாலைகளில் ஆயுள் முடிவடையும் கோழிகளின் ஆயுள் காலத்திலும் பார்க்க இதன் ஆயுள் காலம் இரு மடங்கு அதிகமானது.
அதாவது 14 வாரங்கள். கூடுதலான ஆயுள் காலத்துக்குத் தேவையான போஷாக்கு வழங்கப்பட்டு இது வளர்க்கப்படுவதால் உற்பத்திச் செலவு ஏனைய கோழிகளிலும் பார்க்க அதிகமாகின்றது.
கூடுதல் விலை கொடுப்பவர்கள் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எடையைப் பொறுத்தமட்டில் இது ஏனைய மூன்று கோழிகளுக்குச் சமனானது.

No comments:

Post a Comment