| லிபியாவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்க கடாபி ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட கூட்டு படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று பிரான்சின் போர் விமானங்கள் லிபியாவின் 3வது பெரிய நகரமான மிஸ்ரதாவின் புறநகர் பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. அந்த நகரத்தின் அருகேயுள்ள ராணுவ தளங்களின் மீது குண்டு வீசப்பட்டது. அப்போது கடாபியின் ராணுவ டாங்குகள் அழிக்கப் பட்டன. அதே நேரத்தில் ராணுவ போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது. லிபியாவில் அமெ ரிக்க கூட்டுப் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது இதுவே முதல் முறையாகும். இருந்தும் மிஸ்ரதா நகரில் கடாபியின் ராணுவம் இருளில் பதுங்கியபடி எதிர் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ளள ஆஸ்பத்திரி சேதம் அடைந்தது. இதை தொடர்ந்து அப்பகுதியில் டெலிபோன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் பிடியில் ஷின்தான் என்ற நகரமும் உள்ளது. இது திரிபோலி அடுத்து தென் மேற்கில் உள்ளது. அந்த நகரத்தையும் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர கடாபியின் ராணுவம் தீவிரமாக உள்ளது. அதற்காக அஜ்தாபியா நகரின் புறநகரில் இருந்தபடி கடந்த 3 நாட்களாக அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க கூட்டுப் படைகள் நேற்று இரவு நடத்திய குண்டு வீச்சில் லிபியா ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் |
Sunday, 27 March 2011
லிபியாவில் கடாபியின் போர் விமானம் குண்டு வீசி தகர்ப்பு; பிரான்ஸ் ராணுவம் அதிரடி தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment