பூமி அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து சுனாமி தாக்கத்தால் உருக்குலைந்து போன ஜப்பானிய நகரங்கள் மீண்டும் உருப்பெற்று வருகின்றன.![]() மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு சேதமடைந்த ஒரு வீதி ஆறு தினங்களுக்குள் பழைய நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ![]() பிரிட்டனில் பல வீதிகள் குன்றும் குழியுமாக இன்னமும் காணப்பட்டு வரும் நிலையில் ஜப்பானில் துண்டு துண்டாகப் பிளவுண்ட இவ்வீதி ஒருவாரத்துக்கும் குறைவான காலப்பகுதியில் செப்பனிடப்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ![]() டோக்கியோவுக்கு வடக்காக 80 மைல் தூரத்திலுள்ள இந்த ஜோபான் அதிவேக நெடுஞ்சாலை பூமி அதிர்வால் பல இடங்களில் பிளவுபட்டது. சில இடங்களில் 5 அடி அகலமான பாரிய வெடிப்புக்கள் காணப்பட்டன. ![]() இந்த வீதியை இப்போது பார்க்கின்றபோது இப்படி ஒரு அனர்த்தம் இங்கு நடந்ததா என்று எண்ணத் தோன்றுகின்றது. மிக மோசமாகப் பாதிக்கப்பட் சண்டாய் நகரில் விமான நிலையமும் பாதிக்கப்பட்டது. ![]() சுனாமி பேரலைகள் வீதிகளில் நிறுத்தியிருந்த வாகனங்களை விமான நிலையத்துக்குள் கொண்டு வந்து போட்டன. விமான நிலையத்தில் இருந்த விமானங்கள் கட்டிடக் கூரைகளுக்கு அடித்துச் செல்லப்பட்டன. தொன் கணக்கில் குப்பைகள் விமான நிலையம் முழுவதும் குவிந்து கிடந்தன. அடுத்த நாளே இங்கு மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்போது இந்த விமான நிலையமும் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் சுனாமி தாக்கிய அடுத்த நாளே தத்தமது கடமைகளுக்குத் திரும்பி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல வர்த்தக நிலையங்களும் இங்கு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன |
Sunday, 27 March 2011
வேகமாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் ஜப்பான்!
Labels:
வேகமாக மீண்டும்....
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment